ஆண்டவரை எதிர்நோக்கி....(28.11.2021
கடந்த வாரங்களில் முழுவதும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து சிந்தித்து அவரின் வருகைக்கு நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாம் இன்று திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறை சிறப்பிக்கின்றோம்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை இந்த அகிலமே ஏற்றுக்கொண்டது அதன் விளைவுதான் காலத்தை நாம் கிறிஸ்து பிறப்புக்கு முன் கிறிஸ்து பிறப்புக்குப் பின் எனப் பிரிக்கின்றோம்.
கடவுள் தான் படைத்த அனைத்தையும் உற்று நோக்கினார் அவை மிகவும் அழகாய் இருந்தன.
இறைவன் படைத்த இந்த அழகிய உலகத்தில் மனிதனின் சுய நல எண்ணங்களும், இவ்வுலகை இச்சைகளும் இணைந்து மனித வாழ்வில் பலவிதமான அழங்கோலங்கள் அரங்கேற வைத்து விட்டன. இறைவன் படைத்த இந்த அழகிய உலகமானது அதன் அழகு நிலையை இழந்து வருகிறது.
ஆண்டவரால் படைக்கப்பட்ட நாம் நமது சுதந்திரத்தின் அடிப்படையில் பல நேரங்களில் ஆண்டவரின் படைப்பின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளாது மனம் போன போக்கில் தவறான வழிகளிலும் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம்.
அன்று மக்களின் தவறான வாழ்வு முறைகளையும் அதனால் அவர்கள் அடைந்த துன்பங்களையும் கண்டு அவர்களுக்கு மத்தியில் மனிதனாக அவதரித்து மண்ணில் வாழும் மனிதர்கள் அனைவரையுமே பாவத்தில் இருந்து மீட்கும் நோக்கத்தோடு இறைவன் இந்த மண்ணில் அவதரித்தார்.
மனிதன் சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை தன் வாழ்வால் நமக்கு கற்பித்து, தான் கற்பித்தவகைகளுக்கு ஏற்ற வகையில் வாழ்ந்தும் காட்டியவர் இந்த இயேசு. அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவினை நினைவு கூறும் வண்ணமாய் அவரது பிறப்பை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் நம்மை தயாரித்துக் கொள்வதற்காக இந்த நான்கு வாரங்களை திருஅவை நமக்கு தருகிறது.
இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்ததாகும்..
ஆண்டவர் இயேசு கிறிஸ்து தான் கூறிய வார்த்தைகளின் அடிப்படையில் நம்மை மீண்டும் ஆட்சி உரிமையோடு சந்திக்க வருவார். நம்மை சந்திக்க வருகின்ற இறைவனை நாம் எதிர்கொள்ள நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ளவே இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
ஆண்டவர் படைத்த இந்த அழகிய உலகத்தில் அவரின் பிறப்பு இந்த மனு குலத்திற்கு பலவிதமான பாடங்களை கற்பிக்கிறது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? எப்படி பட்ட ஒரு மனிதனாக இருக்க வேண்டும்? என எல்லாவற்றையும் நமக்கு கற்பித்தவர் இந்த இயேசு. அவரது வார்த்தைகளின் படி நாம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்கக்கூடிய நாம் நமது சொல்லாலும் செயலாலும் அவருக்கு ஏற்புடைய செயல்களைப் பின்பற்றி இந்த சமூகத்தில் அன்பும் சமத்துவமும் சமூக நீதியும் மேலும் காணப்படுகின்ற மனிதர்களாக நாம் வாழ வேண்டும் அவ்வாறு மாறும்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இறுதி வருகையின் போது நாம் அவரை எதிர்கொள்ள முடியும் அவரின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நாம் நம்மை அவரது வருகைக்கு ஏற்ற வகையில் தகுதிப்படுத்திக் கொள்ள இன்றைய நற்செய்தி வாசகம் அழைப்பு தருகிறது.
இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கியவர்களாய் தகுதி உள்ள மக்களாக நாம் மாற வேண்டும் என்பதையே திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய கடிதங்களின் மையமாக உள்ளது. அப்பகுதியில் இருந்த மக்களின் தவறான எண்ணங்களையும் தவறான செயல் பாடுகளையும் சுட்டிக் காண்பித்து அவைகளிலிருந்து மாற்றம் பெற்று ஆண்டவரின் திருமுன் நிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய தகுதி உள்ள மக்களாக நாம் மாற வேண்டும் என அழைப்புவிடுத்தார். பவுலின் வார்த்தைகளுக்கு ஏற்ப அவர்களும் மனமாற்றம் அடைந்தார்கள். இதை குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் வாசிக்க கேட்போம்....
தூதர் பவுலின் அழைப்பை ஏற்று மனம் மாறிய தெசலோனிக்கர் பகுதி மக்களைப் போலவே நாமும் மனமாற்றம் அடைந்தவர்களாய் பிறக்கவிருக்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆவலோடு எதிர்நோக்கியயவர்களாய் சமூகத்தில் வாழ வேண்டும் என்பதே இறைவன் இன்று நமக்குத் தருகின்ற மையச் செய்தியாக உள்ளது.
இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாக்களிக்கப்பட்ட கடவுள் நம்மை மீட்பதற்காக மண்ணிற்கு வந்தவர் எனவே தான் இவரை தாவீதின் குளத்திலிருந்து தளிர் ஒன்று தோன்றுகிறது என்று முதல் வாசகம் குறிப்பிடுகிறது.
நம்மைத் தேடி வருகின்ற வாக்கு மாறாத இந்த கடவுளை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கும் நாம் அவரின் திருமுன்னிலையில் நம்மை நாம் தகுதி உள்ளவர்களாக மாற்றிக்கொள்ளவும் இறுதி நாளில் அந்த ஆண்டவரின் திருமுன் நிலையில் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய மனிதர்களாகவும் இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார்.
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும் என் வார்த்தைகள் என்றும் அறிய மாட்டாய் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப ஆண்டவர் உரைத்த அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய வார்த்தைகள் என்றும் பொய்த்துப் போகாது. அந்த ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் அந்த ஆண்டவரை சந்திக்க அவரது ஆட்சியில் ஆட்சியிலும் பங்குபெற நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம். அவ்வாறு தகுதிப் படுத்திக் கொள்வதே பிறக்கவிருக்கும் ஆண்டவரை நம் உள்ளத்தில் பிறக்க வைப்பதற்கான வழியாகும். இதோ இந்த திருவருகைக் காலம் என்பது ஆண்டவர் இயேசுவின் பிறப்பை ஆவலோடு எதிர் நோக்குகின்ற இந்த காலங்களில் நாம் நமது செயல்களை சீர்தூக்கிப் பார்த்து பிறக்கவிருக்க உள்ள ஆண்டவரை நமது உள்ளத்திலும் இல்லங்களிலும் பிறக்க வைக்க நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொண்டவர்களாய் இச்சமூகத்தில் பயணம் செய்ய இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது இறைவன் தருகின்ற இந்த அழைப்பை உணர்ந்து கொண்டவர்களாய் நாம் நமது செயல்கள் மூலமாக ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக மாறுவோம். பிறக்கவிருக்கும் இறைவனை உள்ளத்திலும் இல்லத்திலும் பிறக்க வைக்க நமது செயல்களில் மாற்றத்தை முன்னெடுத்தவர்கள் ஆண்டவரை எதிர் நோக்கிச் செல்ல உங்களை இறைவன் அருளை இணைந்து வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக