நம்பிக்கையை ஆழப்படுத்த
நம்பிக்கையின் ஆழப்படும் பொழுது நாம் ஆண்டவரை தேடிச் செல்லுவோம்.
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
நாம் ஆண்டவரை அறிந்து கொள்ளவும் அறிந்துகொண்ட ஆண்டவர் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும் அந்த நம்பிக்கையின் நிமித்தமாக நாம் ஆண்டவரை தேடிச் செல்லவும் இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
இயேசு படகை விட்டு இறங்கியவுடன் அவர் இன்னார் என அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
அறிந்து கொண்டதன் விளைவே அவர்கள் ஓடிச் சென்று சுற்றுப்புறமெங்கும் இருந்த உடல் நலமற்றவர்களை அவரிடம் அழைத்து வந்தார்கள். இயேசுவைப் பற்றி அறிந்திருந்த காரணத்தினால் தான் அவரிடத்தில் நோயாளிகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாம் இயேசுவை அறிந்து இருக்கின்ற போது அவர் மீதான நம்பிக்கையில் ஆழப்பட முடியும்.
நாம் அவர் மீது கொள்கின்ற ஆழமான நம்பிக்கைதான் நம்மை அவரைத் தேடிச் செல்ல வழிவகுக்கும். இயேசுவினிடத்தில் உடல்நலம் மற்றவர்களை தூக்கி வந்ததற்கான அடிப்படை காரணம் இயேசு அவர்களை குணப்படுத்த முடியும் என நம்பினார்கள்.
இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள். கேள்விப்பட்டதன் வழியாக நம்பிக்கையில் ஆழப்பட்டார்கள். நம்பிக்கைதான் அவர்களை பல நோயாளிகளை ஆண்டவரிடத்தில் கொண்டு வர வைத்தது. அவரிடம் வந்த அனைவரும் குணம் பெற்றார்கள். சிலர் அவருடைய மேலுடையை தொட்டு குணம் பெற்றார்கள் எனவும் வாசிக்கிறோம். நம்பிக்கையோடு ஆண்டவரை அறிந்துகொண்டு அந்த நம்பிக்கையோடு ஆண்டவரை தேடுகின்ற போது அவர் நம்மை நலன்களால் நிரப்புகிறார். இந்த ஆண்டவரைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர் மீது ஆழமான நம்பிக்கை கொள்ளவும் அந்த நம்பிக்கையின் நிமித்தமாக ஆண்டவரை தேடிச் செல்லவும் இந்த திருப்பலி வழியாக இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக