இயேசுவாக மாறுவோம்...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பரபரப்பான இந்த உலகத்தில் ஆண்டவரை தேடிச் செல்ல நமக்கு நேரமில்லை என்று சொல்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். இறைவன் எங்கே இருக்கிறார் என்றால் கூப்பிடும் தூரத்தில் என்கிறார்கள். கூப்பிடும் தூரத்தில் இருப்பதால் தான் யாரும் கடவுளை கூப்பிடுவது இல்லை என்று கூறுவது போல, இன்று பலர் ஆண்டவரைத் தேடிச் செல்வதை விட, இந்த அகிலத்தில் இருக்கக்கூடிய ஆசைகளின் அடிப்படையில் நகர்கின்ற மனித வாழ்வில் பலவற்றை தேடிச் செல்கிறார்கள். ஆனால் இயேசுவைத் தேடி செல்ல இன்றைய நாளில் நாம் அழைக்கப்படுகிறோம்.
பலர் இயேசுவைத் தேடிச் சென்றார்கள், நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள். நாம் யாரை தேடிச் செல்கிறோம்? இயேசுவைத் தேடுவோம், இயேசுவாக மாறுவோம். நற்செயல்களை பெற்றுக்கொள்ள இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக