பகிர்ந்து கொள்ள ... (12.02.2022)
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து அடுத்தவரின் பசியை உணர்ந்தவராய், தன்னைக் காண வந்திருந்த மக்களுக்கு உணவளிக்கக் கூடிய அற்புதத்தை நிகழ்த்துகின்றார்.
நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் தேவைக்கு அதிகமாக நம்மிடம் இருப்பதை நாம் அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை இறைவன் இன்று உணர்த்துகிறார்.
மூன்று வேளையும் நாம் உணவருந்துகிறோம், நிம்மதியாக இருக்கிறோம். ஆனால் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் வீதிகளில் இருப்பவரைப் பற்றிய சிந்தனை நம்மிடம் இருக்க வேண்டும் என்பதைத் தான் இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார்.
இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொண்டவர்களாய் ஏழை எளியவரின் பசி போக்கும் பணியில், நாம் நம்மிடம் இருப்பதைக் கொண்டு செயலாற்றிட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக