பணியாற்றிட ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்கள் நம்மை தளரா மனதோடு பணி செய்ய அழைப்பு விடுக்கின்றன. இயேசுவின் சீடர்களுக்கு, உணவருந்தக் கூட நேரம் இல்லாத வகையில் அவர்கள் தொடர்ந்து இறையாட்சிப் பணியை செய்து வந்தார்கள். அவர்கள் மீது பரிவு கொண்ட இயேசு அவர்களுக்கு ஓய்வு தர விரும்பினார். ஆனாலும் அவர்களால் ஓய்வு எடுக்க இயலாத நிலை ஏற்பட்டது.
ஆனால் அந்த இக்கட்டான நிலையைக் கண்டு, அங்கிருந்தவர்கள் மனம் தளர்ந்து போகவில்லை, கோபம் அடையவில்லை. மாறாக ஆண்டவரின் பணியைச் செய்வதை ஆனந்தமாகக் கருதி செய்தார்கள். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல நேரங்களில், நாம் நமது சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் கடந்து, நமது இன்பமான நேரங்களை அடுத்தவரின் நலனுக்காக தியாகம் செய்யக்கூடிய சூழல்கள் உருவாகுமானால், அந்த நேரங்களில் எல்லாம் நாமும் இயேசுவின் சீடர்களைப் போல, அயராது பணி செய்கிறோம் என்பதை மனதில் இருத்தியவர்களாய், தொடர்ந்து பணியாற்றிட இறையருளை வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக