மாற்றத்தை நாம் நமது வாழ்வில்...
இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவினிடத்தில், எலியா வந்து தான் அனைத்தையும் சரி செய்வார். அவருக்குப் பிறகு தான் அடுத்தவர் வருவார், என்ற அடிப்படையில் யார் முதலில் வருவது? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எலியா ஏற்கனவே வந்து விட்டார் என அவர்களுக்கு தெளிவை உருவாக்குகிறார். நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இந்த சமூகத்தில் பலவிதமான மாற்றங்கள் நிகழ வேண்டுமென விரும்புகிறோம்.
ஆனால் மாற்றத்தை நிகழ்த்தப் போவது யார்? யார் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்வியைத்தான் நாம் அதிகம் எழுப்புகிறோமே ஒழிய, மாற்றத்தை முன்னெடுப்பவர்களாக நாம் செயல்படுவது இல்லை.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நாளில் யாரோ ஒருவர் வந்து அனைத்தையும் சரி செய்வார் என்று எண்ணுவதை விட, ஏற்கனவே இந்த உலகத்தில் பலர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் கூறியவற்றின் அடிப்படையில் மாற்றத்திற்கான முதல் விதையாக, நாம் இருக்க வேண்டும் என்ற பாடத்தை தருகிறார்.
காந்தியடிகள் கூறுவார், இந்த சமூகத்தில் நீ விரும்பும் மாற்றத்தின் முதல் நபராக நீ இரு என்று கூறுவார். நாம் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றம் உருவாக வேண்டும் என எண்ணுகிறோமோ, அத்தகைய மாற்றத்தை நாம் நமது வாழ்வில் முதலில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக