புதன், 2 பிப்ரவரி, 2022

பணியாளர்களாக வாழ்ந்திட...(3.2.2022)

பணியாளர்களாக வாழ்ந்திட... 

இயேசுவில் அன்புக்குரியவர்களே!




    இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


    நற்செய்தி பணியாற்றும் போது நாம் எதை எடுத்துச் செல்ல வேண்டும், எதை எடுத்துச் செல்லக் கூடாது என்பதனை இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் உணர்த்துகிறார். நாம் நிலையானது என எண்ணி இந்த உலகத்தில் சேர்த்து வைக்கக் கூடிய எவற்றையும் இறையாட்சிப் பணிக்கு எடுத்துச் செல்ல தேவையில்லை  என்பதையும் நாம் இறையாட்சி பணிக்கு ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும், இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன.


    அனுதினமும் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணியில் பங்கு பெறுகின்ற நாம், எதை எடுத்துக் கொண்டு நாம் நற்செய்தி பணியினை செய்கிறோம்?  நற்செய்திப் பணியை இன்று வியாபாரமாக்குபவர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்ற இந்த நிலையில், இறைவன் உண்மையான நற்செய்திப் பணியாளர்களாக வாழ்ந்திட நமக்கு அழைப்புத் தருகிறார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுப்போம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...