தெளிவான பார்வை கொண்டவர்களாகிட ....
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
வாழ்வை தெளிவான பார்வை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. இதையே இன்றைய வாசகங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
பார்வையற்ற ஒரு மனிதன் பார்வை பெறுவதற்காக இயேசுவிடம் வந்த போது, அவர் முதலில் தெரிவது என்ன? என்று கேட்டதற்கு, மரங்களைப் போல மனிதர்களைக் காண்பதாக கூறுகின்றான்.
அதன்பிறகு தெளிவான பார்வை பெற்றுக் கொண்டவனாய் இயேசுவிடம் இருந்து விடைபெறுகிறான். நாம் நமது வாழ்வில், பல நேரங்களில் எந்த ஒரு செயலையும் தெளிவாக நோக்குவதில்லை. தெளிவான பார்வை நம்மிடம் இருப்பதில்லை. எல்லாவற்றையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
ஆண்டவரின் இறைவார்த்தை ஒவ்வொரு நாளும் நமது செவிகளை தொட்டுச் செல்கிறது. ஆனால் அதை ஆழமாக புரிந்து கொண்டு வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளாது, மேலோட்டமாக, "பத்தோடு ஒன்று பதினொன்று, அத்தோடு நான் ஒன்று" என்ற போக்கில் பயணிக்கக் கூடியவர்களாக இருக்கிறோம்.
ஆனால் இன்றைய நாளில் இறைவன் தெளிவான பார்வை கொண்டவர்களாகிட அழைப்பு தருகின்றார். நமது பார்வைகளை தெளிவாக்கிட இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக