1935 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு இரவு நேரத்தில் நியூயார்க் நகரத்தில் இருக்கக்கூடிய பென்சில்வேனியா என்ற ஹோட்டலில் பிரம்மாண்டமான ஒரு அறையில் 2500க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர். ஏன் இவ்வளவு பெரிய கூட்டம் இங்கு என்ன நிகழ்ச்சி நடக்கிறது? ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியா?அல்லது ஏதேனும் ஒரு நடிகர் நடிகைகளின் பிறந்த நாளா? அல்லது அவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
அங்கு கூடியிருந்த அனைவருமே ஒரு நாளேட்டில் வெளிவந்த ஒரு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு வந்திருந்தனர். அந்த விளம்பரமானது,
"திறமையோடு பேசுவது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டுமா?
தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?
வாருங்கள்
பென்சில்வேனியா ஹோட்டலுக்கு..."
இந்த விளம்பரத்தை படித்த பலர்தான் அந்த அறையில் கூடியிருந்தவர்கள்.
அடுத்தவர்களின் நிறைகளை நோக்கவும் அவைகளை அடுத்தவருக்கு அடுத்தவர்களுக்கு அறிவிக்கவும் அதனை நமது வாழ்வில் செயலாக்கி படுத்திக்கொள்ள இறையருளை வேண்டி இணைந்திடுவோம் இந்த இயேசுவின் பாதையில்
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன்னை நோக்கி வரக் கூடிய நத்தனியேலை பார்த்து இவர் கபடற்றவர் என்று கூறுகிறார். இயேசுவின் வார்த்தைகளால் கவரப்பட்ட நத்தனியேல் என்னை உமக்கு எப்படி தெரியும்? என இயேசுவை நோக்கி கேள்வி எழுப்புகிறார். இயேசுவும் அவருக்கு விளக்கம் கூறும் வண்ணமாக பலவற்றை கூறி அவரை தன் சீடராக மாற்றுகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் எதிர்பாராத விதமாக நாம் சந்திக்கக்கூடிய மனிதர்கள் பற்றி நமது மனநிலை எவ்வாறு இருக்கிறது? என சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
நத்தனியேலை சந்தித்த இயேசு அவரை கபடற்றவர் என அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார். நாம் பல நேரங்களில் ஒரு புதிய நபரை மற்றவருக்கு எவ்வாறு அறிமுகப்படுத்துகிறோம்? அவர்களிடத்தில் இருக்கக்கூடிய நிறைகளை சுட்டிக்காட்டுகிறோமா? அல்லது அவர்களை கிண்டலும் கேலியும் செய்கிறோமா? அல்லது அவர்களிடம் உள்ள குறைகளை பெரிதுபடுத்தி காட்டுகிறோமா? என சிந்திப்போம்.
இயேசுவைப் போல நேர்மறையான எண்ணங்களை கண்டுகொண்டு, அதை அடுத்தவருக்கு அறிவிக்கக்கூடியவர்களாக நாம் இச்சமூகத்தில் உருவாக வேண்டும். மாற்றத்தை விரும்பும் பலரும், மாற்றத்தை முன்வைக்கக்கூடிய பலரும், ஏற்கனவே இவ்வுலகத்தில் இருக்கக்கூடிய நிறைகளை எல்லாம் விடுத்து, குறைகளை மட்டுமே பெரிதுபடுத்தி பேசி மாற்றத்தை விதைக்க விரும்புகிறார்கள். மாற்றம் அவசியமான ஒன்றே! ஆனால் குறைகளை சுட்டிக்காட்டி மட்டுமே மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட, நிறைகளையும் மேற்கோள்காட்டி, நிறைகள் அதிகமாக வளர வேண்டிய எண்ணத்தையும் சூழலையும் உருவாக்க கூடிய மாற்றமும் அவசியமானதாகும்.
அத்திமரம் -அது ஜெபிப்பதற்காக ஒன்று கூடும் இடம். இயேசு நத்தனியலிடம் இருந்த ஆர்வம் மிகுந்த செப மனநிலையைக் கண்டார். அதை அனைவருக்கும் எடுத்துரைத்தார். அத்தகைய மாற்றமே அனைவர் உள்ளத்திலும் உருவாக வேண்டும் என்பதை தன் செயலால் வெளிக்காட்டினார். இயேசுவை பின்தொடரக்கூடிய நாம் நமது எண்ணத்தில் நிறைகளை நோக்குகிறோமா? அல்லது அடுத்தவர் குறைகளை நோக்குகிறோமா? என சிந்திப்போம் ...
நாம் சந்திக்கிறவர்களிடத்தில் நிறைகளை நோக்கவும், அவைகளை அடுத்தவர்களுக்கு அறிவிக்கவுமான உயர்ந்த பண்பினை நமது வாழ்வில் செயலாக்கப்படுத்த இறையருளை வேண்டி இணைந்திடுவோம் இன்று, இறை இயேசுவின் பாதையில்!
நல்லவர் தமது கருவூலமாகிய நன்மைத்தனத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பார் என்ற இறை வார்த்தைக்கு ஏற்ப நாம் நல்லவர்களாய் வாழ முயற்சி செய்வோம்! நல்லதையே சிந்திப்போம்! நல்லதைப் பேசுவோம்! நல்லதைக் காண்போம்!
பதிலளிநீக்குNice bro..
பதிலளிநீக்கு