இன்சொல்லால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான் கண் டனைத்திவ் வுலகு
என்ற திருக்குறளின் கருத்தாக, இனிமையான சொல்லோடு துன்புறுவோர்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்ற வல்ல அரசன் தன் மனதில் கருதியவாரே உலகமும் அமையும்! என்று திருவள்ளுவர் கூறுகின்றார். திருவள்ளுவர் இன்று நமக்கு சுட்டிக் காட்டும் அரசரை போலவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், யார் யாருக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் நிறைவு செய்பவராக இருக்கிறார். இவ்வாறு தன்னுடைய மக்கள் மீது ஆண்டவர் கண்ணும் கருத்துமாய் இருக்கின்ற வேளையில் இன்று நாம் மூன்று விதமான மக்களை இந்த வாசகத்தில் சந்திக்கின்றோம்.
1. பிறருக்காக பரிந்து பேசும் நபர்கள்:
இயேசு சீமோன் பேதுரு வீட்டிற்கு வந்தவுடன், உடனே அங்கிருந்தவர்கள் இயேசுவிடம் வந்து சீமோனின் மாமியாரது காய்ச்சலை குணமாக்க அவரிடம் வேண்டுகிறார்கள்.இவர்களில் தங்கள் அருகில் இருப்பவர்களின் துன்பங்களில் தங்களையும் இணைத்துக் கொள்பவர்கள்! அவர்களின் வேண்டுகோளை கேட்டவராக இயேசு சீமோனது மாமியாரின் காய்ச்சலை கடிந்து கொள்கிறார்.
2. தங்களது சுயநலப் போக்கு நிறைவேற கூச்சலிடுபவர்கள்.
நீரே மெசியா இறைமகன் என்று கூறி தங்களின் தீய செயல்களுக்கு இயேசுவின் பெயரை அழைக்கின்ற பேய்கள். ஆனால் அனைவருக்கும் நன்மையை வழங்கக்கூடிய இயேசு ஆண்டவர் பேய்களை பேச விடாமல் அதன் சுயநலப் போக்கை வெளிப்படுத்த விடாமல் தடுத்து விடுகின்றார்.
3. தேனை குடித்த ஈக்கள் தேனில் ஒட்டிக் கொள்வது போல இயேசுவின் புதுமைகளைக் கண்டு அதிசயித்துப் போய் அவரை தங்களோடு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும் என்று தடுத்த மக்கள்.
இன்று ஒரு சில நபர்கள் கடவுளுக்கு கண் இல்லையா? காதுகள் இல்லையா? என் வாழ்வில் துன்பங்கள் அதிகமாக இருக்கின்றன என்று புலம்புவதை பார்த்திருக்கிறோம். ஆனால் அனைவருக்கும் நன்மைகள் புரிந்து நோயிலிருந்து விடுதலை அளிக்கின்றன இயேசு இறை தந்தையோடு அதிகாலையில் அனுதினமும் தனது உறவை புதுப்பித்துக் கொண்டவராக தன் பணியில் ஆற்றல் பெற்றவராக அனைத்தையும் செம்மையாக நிறைவேற்றுகின்றார்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு என்பதற்கேற்ப, நமது வாழ்வை அவரது நல்வாழ்வின் திட்டங்களின் வழியில் நம்மை நாளும் நடத்துகின்றார். நமது வாழ்வின் துன்ப நேரத்திலும் சீமோனின் மாமியாரைத் தேடி வந்தது போல இயேசு நம்மையும் தேடி வருகின்றார்.
நாம் அவரை எந்த நோக்கத்தோடு எந்த வழியில் தேடுகிறோம் என்பதை சிந்திப்போம்! நமது வாழ்வில் இயேசுவுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும் சிந்திப்போம்! இறைவனின் அதிமிக மகிமைக்காக அவரை உற்று நோக்குவோம்! அவரின் அருள் நம்மை நிறைக்கட்டும்!
"ஆண்டவரை தேடிச் செல்வோமா?..."
ஆண்டவரை தேடிச் செல்வோம்!
பதிலளிநீக்குNice..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு