புதன், 2 செப்டம்பர், 2020

"இயேசுவின் பாதையில் இலட்சியத்தை நோக்கியவர்களாய்..." (3.9.2020)


"தோல்விகள் அல்ல, இலட்சியம் இல்லாத வாழ்க்கையே குற்றமாகும்" 

(Not failure but low aim is crime)

இலட்சியத்தை நோக்கி நகர்ந்த நபர்களுக்கு எத்தனையோ நபர்களை உதாரணமாக கூறலாம்.

உதாரணமாக... 

பிலிப்பைன்ஸ் நாடு பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்பெயினுக்கு அடிமையாக இருந்த போது அதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் ஜோஸ் ரிசால் என்ற இலட்சிய இளைஞர். இவர் மருத்துவ மாணவராக இருந்தபோது அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியவர். இவர் ஒரு மருத்துவர் மட்டுமல்ல நாவலாசிரியர், கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராகவும், இளைஞர் இயக்கங்களின் தலைவராகவும் விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அடிமைப்படுத்திய ஸ்பெயின் நாட்டிற்கு சிம்மசெப்பனமாக விளங்கியவர்.

நமது தாய்நாடான இந்த இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்டம் சூடு பிடித்து உச்சத்தில் இருந்த நிலையில் விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு இளைஞர்களிடம் சுதந்திர தாகத்தை கொண்டு செல்வதற்காக, ஏராளமான இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஒரு இளைஞன் பகத்சிங். இவர் பொதுவாழ்வில் நுழைந்த போது இவருக்கு வயது 16. இந்திய சுதந்திரத்தின் மீதான இலட்சியத்தை கண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ஆடிப்போனது.

இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய கொடுமைகளை எதிர்த்து முழக்கமிட்டவர் சே குவாரா என்ற இளைஞர். இந்த இலட்சிய போராளி 1970 களில் வாழ்ந்த இளைஞர்களின் மனங்களை கொள்ளை அடித்தவர் என்பது உலகறிந்த உண்மை. 

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக இலட்சியம் நோக்கி நகரக்கூடிய சாதாரண நபர்களான மீனவர்களை முன்னிறுத்தி ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்கு பாடம் கற்பிக்கிறார்.  மீன் பிடித்து வர வேண்டும், தன் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தோடு மீன்களை அள்ளி வருவதற்காக இலட்சியத்தோடு பல தடைகளைக் கடந்து முன்னேற கூடியவர்கள் தான் இந்த மீனவர்கள். 

அனுதினமும் இயற்கையின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் போராடி, தங்களின் குடும்பத்தின் நலனுக்காகவும், அடுத்தவரின் நலனுக்காகவும் துணிச்சலோடு முன்னேற கூடியவர்கள் தான் இவர்கள்.  

உயிரை பணையம் வைத்து உயிர்களைக் காக்க முயல கூடியவர்கள் என்றாலும் மிகையாகாது. 

இந்த மீனவர்களோடு மீனவராக பயணம் செய்யக்கூடிய இயேசு பேதுருவை தன் பணிக்கு அழைக்கின்றார்.

இந்த மீனவர்களிடம் இருந்து பலவிதமான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள இயலும்.

1. துணிச்சலோடு இலட்சியத்தை நோக்கி பயணிக்க கூடியவர்கள். 

அனுதினமும் ஆண்டவர் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் உயிரை பணயம் வைத்து உயிர்களைக் காப்பதற்காக இலட்சியத்தை நோக்கி முன்னேற கூடியவர்கள் இவர்கள் அனைவருமே.

2. மீனவர்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டவர்கள். 

மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று எதிர்பார்த்த அளவு எதுவும் கிடைக்காவிட்டாலும் மீண்டும் நம்பிக்கையோடு முன்னேற கூடியவர்கள்.  

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கடுமையாக முயற்சித்தும் மீன்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வருந்தி வந்த மீனவர்கள், மீண்டும் இயேசுவோடு இணைந்து மீன் பிடிக்கச் செல்கிறார்கள். 

இன்று நம்மில் பலர் பல விதமான முயற்சிகளில் ஈடுபடுகிறோம். சிறு தடைகளை கண்டு பின்னோக்கி வந்து விடுகிறோம். ஆனால் மீனவர்களோ அவ்வாறு இல்லாமல் தடைகள் பலவற்றை கடந்து அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் வாழ்வு நமக்கு தரக்கூடிய பாடமும் இதுவே. தடைகளைக் கண்டு இலட்சியங்களின் இருந்துபின் வாங்காதீர்கள். இலட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள் என்பதை இவர்களிடம் இருந்து நாம் கற்கலாம்.

3.  இயேசு கிறிஸ்து பேதுருவை தன் பணிக்கு அழைக்கும் பொழுது தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றி வந்தர் பேதுரு.

மீனவர்கள் ஏற்கனவே அடுத்தவரின் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருந்தவர்கள். இப்போது அடுத்தவரின் உள்ளார்ந்த ஆன்ம நலனை மனதில் கொண்டவர்களாய் சமூகத்தில் மாற்றத்தை விதைக்கக்கூடிய ஆண்டவர் இயேசுவின் சீடராக அவரை பின்தொடர தன்னிடம் இருப்பதை எல்லாம் இழந்து வந்தவர்கள். இலட்சியத்தோடு வாழ்வை நகர்த்தி கொண்டிருக்கக்கூடிய இவர்களின் இலட்சியத்தில் மெருகூட்டும் விதமாக இயேசு செயல்படுகிறார்.  

இயேசுவின் வார்த்தைகளின் படி வாழ்வை அமைத்துக் கொண்டு இலட்சியத்தை நோக்கி  முன்னேறிய பேதுரு இன்றும் நம்மால் நினைவுகூரப்பட்டு கொண்டிருக்கிறார். நமது வாழ்வில் நாமும் இலட்சியத்தை நோக்கி முன்னேறும் பொழுது கண்டிப்பாக பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடலாம், மீனவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தடைகளை எல்லாம் எதிர்த்து தோல்வியை கண்டு பின்வாங்காது, இலட்சியத்தை நோக்கி அனுதினமும் அடுத்தவர் நலனுக்காக முன்னேற கூடியவர்களாக இருக்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

அனைத்தையும் விட்டுவிட்டு ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுதே இலட்சியம் என்பதை உணர்ந்து, அவரை பின்பற்றிய பேதுருவைப் போல, நாம் நமது வாழ்வில் அனுதினமும் அன்றாட வாழ்வில் இலட்சியத்தோடு முன்னோக்கிச் சென்று, இயேசுவின் உண்மையை சீடராக இவ்வுலகத்தில் திகழ்ந்திட இறையருளை வேண்டி தொடர்ந்து பயணிப்போம்.

"இயேசுவின் பாதையில் இலட்சியத்தை நோக்கியவர்களாய்..."

1 கருத்து:

  1. இலட்சியம் இல்லாத வாழ்வு துடுப்பு இல்லா படகு பயணம் போன்றது என்று சொல்வார்கள்...
    இறை இயேசுவின் பாதையில் இலட்சியத்தோடு பயணிப்போம்..

    நல்ல பதிவு.. 👏👏
    வாழ்த்துகள்.🙏

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...