எண்ணங்கள் இனிதானால் எல்லாமே இனிதாகும்".
கடவுள் மனிதனை மண்ணிலிருந்து உண்டாக்கி தனது உருவையும், சாயலையும் கொடுத்தார் என்பது விவிலியம் நமக்கு சொல்லும் உண்மை. அதையும் கடந்து அனைத்தையும் மனிதனின் ஆளுகைக்கு உட்படுத்தவும், மேலும் அறிவு திறனோடு சுதந்திர உணர்வோடு பேணிக்காக்கும் கடமையும் நமக்கு தந்துள்ளார். ஆனால் இன்று பொறுப்பற்று சுதந்திரமாய் இருப்பதை விட மனிதன் தந்திரமாக செயல்படுகிறான். தான் விரும்புவதை செய்வதுதான் சுதந்திரம் என்று நினைக்கின்றான். தன்னை மையப்படுத்தி வாழ்வதோடு பிறர் என்னால் காயப்பட்டாலும், என் காரியங்கள் சிறிதும் தடைப்படக் கூடாது என எண்ணுகின்றான். தான் நினைத்தது போல இருக்கலாம் என நினைக்கின்றான். ஆனால் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நினைத்தது போல இருப்பது தொடக்கத்தில் இனிப்பாக இருந்தாலும் போகப்போக கசக்கும். எனவே
"விரும்பியதை செய்வது அல்ல சுதந்திரம்.
சரியானவற்றை செய்வது தான் சுதந்திரம்".
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் கதிர்களை பறித்து உண்டது. ஓய்வுநாளில் செய்த குற்றம் என குற்றம் சாட்டப்படும் போது சீடர்களின் செயலில் காணப்பட்ட உண்மை தன்மையை எடுத்துரைக்கிறார் இயேசு. இது சரியான செயலாகும்.
இங்கு இரு வகை மனிதர்களை நாம் பார்க்கலாம்.
1. சரியானதை செய்பவர்கள்.
2. விரும்பியதை செய்பவர்கள்.
1. சரியானதை செய்பவர்கள்.
பசித்தது எனவே பசியாற்ற உணவைத் தேடி கண்டு அதனை உண்பது சரியான செயலாகும். இது சீடர்கள் செய்தது. இவர்கள் சரியானதை செய்தவர்கள்.
2. விரும்பியதை செய்பவர்கள்.
பிறரின் செயலில் குற்றம்சாட்ட விரும்பியவர்கள், இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டிய பரிசேயர்கள். இவர்கள் விரும்பியதை செய்தவர்கள்.
இயேசு சரியான செயலை செய்த சீடர்களின் செயலை சுட்டிக்காட்டுகிறார். இதனால் விரும்பியதை செய்த பரிசேயர்கள் தொடக்கத்தில் குற்றம்சாட்டுவது இனிதாக அவர்களுக்கு தோன்றினாலும், இயேசுவின் வார்த்தைகளாள் அவர்கள் கசப்பை உணர்கிறார்கள்.
சரியான செயலை செய்யும் அனைவரும் ஆண்டவரால் விரும்பக் கூடியவர்கள். அவர்களோடு ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்போதும் உடன் இருக்கிறார். உதாரணமாக
இன்று திருஅவை நினைவு கூறக் கூடிய புனித அன்னை தெரசா அவர்களை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவர் கல்கத்தா நகர வீதியில் ஏழைகளிள் ஏழைகளாக இருந்தவர்களுக்கு மத்தியில் பணி செய்தவர் . இவர் 1979 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். 2016 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் பெற்றார். மக்களுக்கான பணிகள் பல இருப்பினும் சரியான பணியை தேர்வு செய்து இறுதி வரை செய்ததால் இன்றும் பலரின் உள்ளம் கவரும் புனிதராக திகழ்கின்றார். பசித்தவருக்கு உணவளிப்பது சரியான செயலாகும் இதை அனுதினமும் பலர் வழியாக செய்தவர். இதற்காக பல அவமானங்களையும் ஏற்றவர். "இந்த உலகில் ஒருவன் பசியால் உயிர் இழக்கிறான் என்றால் அது கடவுளின் செயல் அல்ல. உன்னையும், என்னையும் போன்றவர்கள் அவனை பராமரிக்காததால் நிகழ்ந்தது..." என குறிப்பிடுகிறார் அன்னை தெரசா அவர்கள்.
ஒருமுறை காந்தியின் ஆசிரமத்தில் ஒருவன் இரவில் திருடி விட்டான். திருடனை பிடித்து அங்கு உள்ளவர்கள் எல்லாம் அடித்து, அவனை காலையில் காந்தியிடம் காண்பிக்க வேண்டும் என எண்ணி அவனை பிடித்து வைத்திருந்தார்கள்.
மறுநாள் காலையில் காந்தியிடம் திருடன் பிடிபட்டான் என்ற செய்தி சொல்லப்பட்டது. ஆனால் காந்தி அவர்களிடம் மறுமொழியாகக் அந்தத் திருடனுக்கு உணவு கொடுத்தீர்களா? என்று கேட்டார். உடனே அங்கிருந்தவர்கள் காந்தியிடம் திருடனை தண்டிப்பதை விட்டுவிட்டு அவனுக்கு உணவு கொடுக்கவில்லையா? என கேட்கிறீர்கள், என்று கேட்டபோது காந்தி அவர்களிடம் கேட்டார், ஏன் திருடனுக்கு வயிறு இல்லையா? அவனுக்கு பசிக்காதா? முதலில் அவனுக்கு உணவு கொடுங்கள் என்றார்.
சீடர்களின் பசியைப் போக்க இயலாத பரிசேயர்கள், சீடர்களின் செயலை குற்றம்சாட்டும் போது சீடர்கள் சார்பாக இயேசு நின்று சரியான செயலை செய்கின்றார்.
இன்று நமது வாழ்வில் நீதிக்காகவும், அடுத்தவர் நலனுக்காகவும் எவராவது முயலும் போது, சரியான அச்செயலைக் கண்டு அவர் சார்பாக நீற்க்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
இச்சமூகத்தில் சரியானதை செய்பவர்களை குற்றம்சாட்டுவதை தவிர்த்து, சீடர்களுக்கு துணைநின்ற இயேசுவைப் போல, நாமும் மாற்றம் பெற்று, இயேசுவின் உண்மை சீடராக மாறிட, அன்னை மரியாள் நமக்காக ஜெபிக்க மரியாவின் துணை வேண்டியவர்களாய் இயேசுவின் பாதையில் பயணப்படுவோம்...
"விரும்புவதை செய்வதல்ல சுதந்திரம்.
சரியானதை செய்வதே சுதந்திரம்".
இயேசுவைப்போல் சரியானதை செய்வோம்...
அன்று வியாகுலம் அம்மா சரியானதை செய்ததனால் இன்று ஒரு குரு சிறப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறார்!
பதிலளிநீக்கு