வெள்ளி, 4 செப்டம்பர், 2020

இயற்கையை பேணுவதற்கான அருள்பணி

 

இயற்கையை பேணுவதற்கான அருள்பணி



கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார் அவை மிகவும் அழகாய் இருந்தன (தொ. நூ. 1:31)


தொடக்கமாக...

நாம் வாழும் இந்த அழகிய பூமி இறைவன் நமக்கு அளித்த ஒரு விலைமதிப்பில்லா பரிசு. இந்தப் பரிசை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடலாம்.


பூமி என்பது ஓரு கண்ணாடி. அதை பார்த்து நாம் சிரித்தால் அதுவும் நம்மைப்பார்த்து சிரிக்கும். அதைப் பார்த்து நாம் அழுதால் மழையாக மாறி அதுவும் நம்முடன் இணைந்து அழும். ஆனால் அதை நாம் அடித்தால் அது நம்மை திருப்பி அடிக்காது. மாறாக உடைந்துவிடும். ஆனால் அப்படி உடையும்போது ஏற்படும் பாதிப்பில் நாம் மாட்டிக்கொள்ளும் போது எதுவும் செய்ய முடியாமல் கண்ணீர் சிந்தும்... இதுதான் பூமிக்கும் நமக்கும் உள்ள உறவு. நாம் வாழும் பூமி 51,00,70,000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பூமியில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. இந்த உறவை எந்த சக்தியாலும் பிரிக்க இயலாது. இவ்வுறவை மையப்படுத்தி HOME எனும் குறும்படம் தெளிவாக நமக்கு காட்டுகிறது.


தத்துவ அறிஞர் டேகார்ட்ஸ் கூறுவார்: “நான் எண்ணுவதால் நான் வாழுகிறேன்” என்று... மனிதர்கள் சிந்திப்பதால் (எண்ணுவதால்) தான் படைப்புகள் அனைத்திலும் சிறந்து விளங்குகிறோம். நம்மை சிந்திக்க வைத்தது இந்த புவியும்> புவியில் அமைந்த இயற்கையும் என்பதை நம்மில் பலரும் மறந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். சிக்கி முக்கி கல்லின் உராய்வில் உருவான நெருப்பைக் கண்டு இப்படி உரசினால் நெருப்பு உருவாகும் என நம்மை சிந்திக்க வைத்தது இந்த இயற்கை... உருண்டோடிய கல்லைப் பார்த்து சக்கரம் கண்டுபிடிக்க காரணமாய் அமைந்ததும் இந்த இயற்கைதான்... அதே இயற்கை தான் இன்று நம்மை> இப்புவியை பாதுகாப்பது குறித்து சிந்திக்க வைத்திருக்கிறது. இப்புவியை பாதுகாப்பது குறித்து சிந்திக்க தொடர்ந்து பயணிப்போம் வாரீர்...


 1.1 புவியின் அழகு

அகழ்வாரை தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வால் பொறுத்தல் தலை.


என்று வள்ளுவர் புவி தம்மை காலால் மிதிப்பவரைகூட கீழே விழாமல் தாங்குகிறது என்று இந்த புவியை குறித்து பெருமைப் பாராட்டியுள்ளார். இயற்கையிடம் இருந்து நாம் கற்க் வேண்டிய பாடங்கள் அதிகமாக உள்ளன. இதை உணர்ந்தே..

“இயற்கையிடம் போ” (Go to the Nature)  என்று அன்றே முழங்கினார் ரூசோ. இன்று இயற்கையைப் பாதுகாப்போம்! சுற்றுச்சூழல் மாசுபடாது காப்போம்! என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இயற்கை இறைவனின் அழகிய படைப்பு. அதனை நாம் நன்முறையில் பயன்படுத்த வேண்டும். இயற்கையான மலைகள்> மலைகளில் காணப்படும் காடுகள்> காடுகளில் வளரும் ஓங்கி வளர்ந்த மரங்கள்> முட்புதர்கள் நமக்குப் பச்சைப் பசேல் எனக் காணப்பட்டு கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. இவைகள் ஒவ்வொரு நாளும் தன்னைப் பார்ப்பவர்களுக்குப் பலவிதமான பாடங்களைப் போதிக்கின்றன.


1.1.1 மலைகள் - உறுதியும்> மாற்றமும்

உலகத்தில் பல்வேறு மலைகள் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமான மலைகள் அந்நாட்டிற்குப் பெருமையையும்> தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இந்த மலைகளின் பயன்களை நான் பட்டியலிட்டுக் கூற விரும்பவில்லை. மாறாக இவைகள் நமக்கு என்ன போதனைகளைத் தருகின்றன என்று சிந்திக்கும்பொழுது.


1. உறுதி:


     நல்ல உறுதியான மனத்தைக் கொண்டு வாழவும் நமது இலக்குகள், இலட்சியங்களை அடைய முற்படும்போது ஏற்படும் தடைகளைக் கண்டு பயப்படாது, உறுதியாக இருக்கவும், நாம் எடுத்த முடிவுகளில் பின்வாங்காது வாழ இந்த உறுதித் தன்மையை மலைகள் நமக்கு போதிக்கின்றன. பல்வேறு சூழல்களிலும் இந்த மலைகள் தாக்கப்படும்போது (மலை, வெயில், காற்று) தனது கடினத்தன்மையை விட்டுக் கொடுக்காது உறுதியோடு இருக்கின்றன. நாமும் இப்படி வாழ்வில் பலவிதமான விமர்சனங்கள், அவமானங்கள், இகழ்வுகள் கண்டு துவண்டுவிடாது எது வந்து மோதினாலும் பரவாயில்லை. “நான் எதற்கும் அஞ்சேன்” என்று மனதை ஒருமுகப்படுத்தி உறுதியோடு வாழ நம்மை அழைக்கிறது.


2.  மாற்றம்:


     மலைகள் பாறைகள் உறுதியாக இருந்தாலும் பிறரின் பயன்பாட்டுக்காக தன்னையே மாற்றுகிறது உடைபடுகிறது. பாறைகள் சுக்கு நூறாக உடைபட்டு மக்களின் பயன்பாட்டுக்கு உதவுகிறது. நாமும் நம்மையே உடைத்துப் பிறரின் வாழ்வுக்கு பயன்படும் அளவுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும்.


1.2 மரங்கள் - தன்னம்பிக்கை:

தன்னம்பிக்கையோடு எப்படி வளரவேண்டும் என்பதையும் மரங்கள் தான் கற்றுத் தருகின்றன. பெரிய மரங்கள் ஒரே இரவில் முளைத்து கிளைகளுடன் உயர்ந்து நமக்கு காட்சியளிப்பதில்டலை. மாறாக சிறிய விதையானது இப்பூமிக்குள் புதைந்து கிடந்தது. பூமியைப் பிளந்து முட்டி மோதி முளைத்து வெளியே வருகிறது. சிறிய இலைகளுடன் தனது முகம் காட்டி மகிழ்ச்சியாக வளர்ச்சி பாதையை தொடங்குகிறது. தான் வளரும்போது பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறது. சோர்வுறாது, தன்னம்பிக்கையை இழந்துவிடாது, மீண்டும் மீண்டும் இலைகளாய் கிளைகளாய் படர்ந்து நமக்கு சவால் விடுகிறது. மேலும் எட்டமுடியாத உயரத்தில் பலருக்கும் நிழலாய் இல்லிடமாய் உயர்ந்து நிற்கிறது. இதைப்போல நாமும் தன்னம்பிக்கை கொண்ட பலவிதமான இக்கட்டான சூழலிலும் எழுந்து நின்று பலருக்கும் பயன்தரும் வகையில் வாழ முற்பட வேண்டும்.


1.3 நதிகள் - குறிக்கோள்:

இறைவன் நமக்கு கொடுத்த கொடைகளில் நதிகள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவை எங்கிருந்தோ உருவாகி நமக்கு பலன் தருகிறது. இவை கண்டிப்பாக கடலை சென்றடையும். காரணம்இ அதற்கென்று ஒரு குறிக்கோள் உள்ளது. நீங்களும் அதுபோலவே உங்களது வாழ்வில் குறிக்கோளை உருவாக்கி கொள்ளுங்கள். மகத்தான நதியைப் போல நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள். திடீரென நதியின் போக்கு மாறலாம். ஆனால் சிறிது மாற்றங்களுக்குப் பிறகு தன் வழியாகத்தான் செல்லும். நீங்களும் ஒரே மனத்துடன் செயல்படுங்கள். உங்கள் இலட்சிய நோக்கில் செல்கையில் சில பிரச்சினைகள் தோன்றலாம். அவைகளை வெற்றி கொண்டு அந்த மகத்தான நதியைப் போல மீண்டும் உங்கள் வெற்றி பாதைக்கே வந்து சேருங்கள். பாதை மாறக்கூடாது. உங்கள் முன்னேற்றத்தை ஒரு மகத்தான நதியுடன் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து முன்னேறுகிறோம் என்று நீங்கள் மனதார உணருங்கள்.


நிறைவாக...

இவற்றையெல்லாம் சிந்திக்க துவங்கினால் நாம் வாழும் புவியிடம் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் எத்துணை அழகுமிக்கவை என்பது புரியும். நாம் வாழும்போதே இப்பாடங்களை கற்று செயலாக்க முயல்வது இதைவிட இன்னும் அழகானது.... தொடர்ந்து கற்று வாழ்வாக்க முயல்வோம் வாருங்கள்...


2. இன்றைய அவல நிலை

தொடக்கமாக...

     இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. அவ்வுயிர்களில் ஒன்றுதான் மனிதன். நம் முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சில முயற்சிகளுக்கு உடனடி வெற்றி உண்டாகிறது. சில முயற்சிகள் சில காலம் கடந்து வெற்றி பெறுகின்றன. மொத்தத்தில் முற்சிப்பவன் தோற்பதில்லை என்பது மட்டும் உண்மை. முதன்முதலில் நீரை சார்ந்து வாழ்வை அமைத்துக் கொண்ட மனிதன் இயற்கையின் நிகழ்வுகளை கண்டு முயற்சியினால் நெருப்பு, சக்கரம், விவசாயம் என உயர்ந்து இன்று வானத்தையும் தாண்டி சென்றுவிட்டான். மனிதன் கருத்துக்களை பரிமாற முதலில் வடிவங்களை பயன்படுத்தினான். பிறகு முயற்சியால் ஓசைகளை வார்த்தைகளாக்கி பிறரிடம் பகிர்ந்து மகிழ்ந்தான். பின்பு ஓசைகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்து அதை மரப்பட்டைகளிலும், விலங்கின் தோலிலும் எழுதி அதை பிறரிடம் பகிர்ந்து மகிழ்ந்தான். ஏன் இன்னும் மகிழ்ந்து கொண்டு இருக்கிறான்.... ஆனால் மனிதன் காகிதம் தயாரிக்க மரங்களை கருவருத்தான் என்பது நம்மில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத உண்மை. ஏன் இன்னும் காகிதம் எப்படி தயாரிக்கப்படுகிறது என அறியாத மக்களும் நம்மிடையே உண்டு என்பதை மறந்திட வேண்டாம்.


2.1 மரங்கள்

இன்று ஒவ்வொரு மரமும் ஒரு தொழிற்சாலை. இலாபநோக்கில் இல்லாமல் ஓய்வில்லாமல் இயங்கும் தொழிற்சாலை. பிறருக்காக மட்டுமே தன்னை அழித்துக்கொள்ளும் அபூர்வமான படைப்பு. சுற்றுப்புறக் காற்றை தூய்மைப்படுத்தி மண்ணின் நோயை மட்டுப்படுத்தி ஒளியை வடிகட்டும் ஓசோன் படலத்தை உருவாக்கி மேகங்களை கவர்ந்;து மனிதருக்கு மழையைப் பொழியவைக்கும் மகத்தான ஆற்றல் படைத்த அதிசயம் வாய்ந்த ஓர் உயிர்தான் மரம். உலகத்தில் ஒரு இலட்சம் வகையான மர உயிர்கள் இருந்தன. ஆனால் இன்று இவ்வுயிர்கள் அழிந்துகொண்டே இருக்கின்றன. உலகில் 1 நிமிடத்திற்கு 24 ஹெக்டேர் பரப்பளவுக் காடுகள் அழிக்கப்படுகின்றன. ஓர் ஆண்டிற்கு 170 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவுக் காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்தியாவில் 45000 தாவர வகைகள் இருந்தன. அதில் 10 விழுக்காடு உயிர்கள் இன்று அழிந்துபோய் விட்டன.


இந்தியாவில் 20ஆம் நூற்றாண்டுக்கு முன் 52 விழுக்காடு நிலப்பரப்பில் காடுகள் இருந்தன. நூற்றாண்டின் தொடக்கத்தில் 35 விழுக்காடாக குறைந்தன. விடுதலை பெற்ற பிறகு 28 விழுக்காடு நிலப்பரப்பு மட்டுமே உள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 1.5 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் 13 விழுக்காடு நிலத்தில் மட்டுமே காடுகள் உள்ளன. இயற்கை காற்றை சுவாசிக்கும் நாம் ஆக்சிஜனை மட்டும் எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளிவிடுகின்றோம். ஆனால் மரங்களோ நாம் விடுகின்ற கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளிவிடுகின்றன.


·       ஓர் மரம் ஓர் ஆண்டிற்கு 3.7 டன் கரியமில வாயுவை உட்கொண்டு 1000 கிலோ ஆக்சிஜனை அள்ளித்தருகிறது.


·       10 குளிர்சாதன பெட்டிகள் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் குளிர்ச்சியை ஒரு மரம் தன் நிழல் மூலம் தருகிறது.


இயற்கை விரும்பியான அருட்தந்தை ஜேரி சே.ச. அவர்கள் தேர்தலுக்கு ஓட்டுப்போட பயன்படும் மின்னனு கருவியை குறித்து மகிழ்வதாக கூறுகிறார். இதனால் இக்கருவியினால் நம் நாட்டில் தேர்தலுக்குப் பயன்படும் 7.200 டன் காகிதத்தின் அளவு குறைந்தது. நம் நாட்டின் மரங்களும் பாதுகாக்கப்பட்டன என்பதால்இ மனிதனுக்கு உயிரைக் கொடுப்பதும் உயிரைக் காப்பதும் மரங்களே. ஆனால் ஆசை பிடித்த மனிதன் பணத்திற்காக மதிப்புமிக்க மரத்தை அழிப்பது மடத்தனம் என்று அறியாமல் இருக்கிறான். மரத்தை காப்பாற்றவில்லையெனில் மானுடத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து ஒவ்வொரு மனிதனும் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறானோ அத்தனை மரங்களை உருவாக்கினால் எதிர்கால சமூகத்திற்கு உருவம் கொடுக்கலாம்.


2.2 நஞ்சாகும் காற்று

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 26000 முறை மூச்சை இழுக்கிறான். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு 14 கி.கிராம் ஆகும்.  மனிதன் முதன்முதலில் அடக்கி ஆள துவங்கியது காட்டு விலங்குகளை. அவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்த மனிதன் நீருக்காக நிலத்தை தோண்டி எண்ணெயை கண்டுபிடித்தான். அதன் விளைவால் நாற்றுநட்ட மனிதனும்இ அறுவடை செய்த மக்களும் மறைந்து நாற்று நடஇ அறுவடை செய்யஇ களை எடுக்க என அனைத்தும் இயந்திரமயமாயின. இவற்றால் உண்டாகும் புகையை பற்றி கவலைப்பட அன்று யாருமில்லை. ஏன் இன்றும் பலருக்கு கவலையில்லை.


நம் புவியன் மேற்பரப்பான ஆகாயத்தில் மொத்தம் 5>500 மில்லியன் டன் அளவு காற்று உள்ளது. இக்காற்று நாளுக்கு நாள் மாசுபட்டு வருகிறது. இம்மாசுபாட்டால் இன்று பலவிதமான பாதிப்புகளை நாம் சந்திக்கிறோம்.


2.2.1 பசுமையில்லா வாயுக்கள் எப்படி உற்பத்தியாகின்றன:

1.    நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிம எரிபொருள்களை எரிப்பதால்


2.    புதைபடிம எரிபொருள்களை எரித்து மின்சாரம் தயாரிப்பதால்


3.    உரங்களை பயன்படுத்துவது சில பயிர்களை வளர்ப்பதால்


4.    மரங்களை வெட்டி நிலத்தை தரிசாக்குதல்


5.    சிமெண்ட் அலுமினியம் போன்ற தொழிற்சாலைகளின் தயாரிப்பு முறைகளால்


இவற்றின் மூலம் பசுமையில்லா வாயுக்கள் உருவாகி காற்றை மாசுபடுத்துகிறது. இவ்வுலகில் நீர்இ காற்றுஇ மரம் இவைகளுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றில் ஒன்று முழுமையாக இல்லாமல் போனாலும் இவ்வுலகில் நம்மால் வாழ இயலாது. இவற்றில் உண்டான  பற்றாக்குறையால் தான் இன்று காற்றை சுத்திகரிக்க நீரை சுத்திகரிக்க என பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் சிறப்பு என்னவென்றால் காற்றின் மாசுபாடு பற்றி மனிதன் அறிந்திருந்தும் அதை பொருட்படுத்தாமல். மேலும் காற்றினை மாசுபடுத்தி வருவதை அவன் அறியாமல் இருக்கிறான்.


வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் வாயுவுடன் பிற வாயுக்கள் அதிகமாக வினைபுரிந்து அதன் இயல்பான அளவை குறைத்து விடுவதால் ஓசோன் படலம் மெலிகிறது. இதுவேஇ ஓசோன் மெலிதல் எனும் விளைவு. இப்படி மெலிவதால் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆபத்தான புறஊதா கதிர்வீச்சு தடுக்கப்படாமல்இ எளிதில் பூமியை வந்தடைகிறது. ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைவதால், அவை கதிர்வீச்சை தடுக்காமல் பூமிக்கு அனுப்பிவிடுகின்றன. இதனால் தோல் புற்றுநோய் உள்பட பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறோம். குளோரோ புளுரோ கார்பன் ஊகுஊ போன்ற வாயுக்கள் ஓசோன் படலம் அரிக்கப்பட முக்கிய காரணம். இத்தகைய நிலை மாற வேண்டும். இல்லையேல் முதுகில் ஆக்சிஜன் அடங்கிய பெட்டியை சுமந்துகொண்டு நடக்கும் நிலை விரைவில் உருவாகும்.


2.3 நிலம்:

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு

முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி”


என்று புலவர் பாடினார். அப்படி வாழ்ந்த மலை மக்களின் உணவு பொருட்களில் அரிசிச் சோறும் ஒன்றாக அமைந்தது. குறிஞ்சி நிலம் உழவர்கள் உழாமலேயே நிறைய பயன் தந்தது. வெண்ணெய், பலா, வள்ளிக்கிழங்கு, தேன் முதலியன இயற்கை வழியில் எளிதாகக் கிடைக்கின்றன. நெல் அரிசியை ஆம்பல் மலரோடு அவியலாக்கி உண்டனர். குறிஞ்சி நிலத்தவரின் பொது உணவு கிழங்கும், தேனும் அவற்றைப் பிற மாநிலத்தவர்களுக்கு விற்றபோது மீன்இ நெய்இ மது அனைத்துமே கிடைத்தன. உளுந்து மாவில் நெய் பெய்து உண்டார்கள். இப்படியாக நெல்லானது நெடுங்காலமாக நமது உணவாக விளங்கி வருகிறது என்பதை அறியலாம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்னும் புத்தரின் வாக்கிற்கு ஏற்ப அளவு கடந்த ஆசையால் மனிதன் பயிரிடுவதை அதிகபடுத்தி அதிகமான விளைச்சலை எதிர்பார்த்தான். விளைச்சலை அதிகப்படுத்த நம் நாட்டில் பசுமை புரட்சி என்னும் பெயரிலும் பிற நாடுகளில் வேறு பெயர்களிலும் யூரியா, பொட்டாசியம், அம்மோனியம் என்னும் பன்னாட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பான உரங்கள் செயற்கை உரங்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரித்தது. ஆனால் இன்று நிலம் தன் உண்மை தன்மையை இழந்துகொண்டு இருப்பதும் நம்மில் பலரும் சிந்தனை செய்யாத ஒரு தொடர் உண்மையாக இன்றும் இருந்து வருகிறது.


பசுமை புரட்சி என்ற பெயரில் விவசாயத்தை உயர்த்த போகிறோம் என்றது மக்களை ஆளும் அரசு. மக்களை ஆளும் அரசு மக்களுக்கு நன்மைதான் செய்யும் என்று நம்பி ஏமாந்தவர்கள்தான் நம் விவசாயிகள். பசுமை புரட்சி என்பதன்மூலம் 10,000ஆம் ஆண்டுகால இந்திய விவசாய பரிமாண வளர்ச்சியை அழிக்க ஆரம்பித்தது இந்த அரசு. இதன் விளைவே பூச்சிகளுடன் பல பன்னாட்டு விதைகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. அதன் விளைவே நாம் பயன்படுத்திய கிச்சடிஇ சம்பா போன்ற நெல் வகைகள் அழிந்து போயின. நம் நாட்டு விதைகள் ஆய்வு என்ற பெயரைக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் சொந்த விதைகளாக மாறின. இன்றும் நாம் விதைக்கான உரிமை இல்லாதவர்களாகதான் இருக்கிறோம். சமீபத்தில் மறைந்த இயற்கை விரும்பியான திரு. நம்மாழ்வாரும்இ நமது பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்து வந்த திரு.ஜெயராமன் அவர்களின் இழப்பும் நம்மை மேலும் துயரத்தில் ஆற்றியுள்ளது..


பசுமை புரட்சியினால் உணவு பொருட்கள் தேவைக்காக உற்பத்தி செய்த நிலை மாறி வாணிபம் செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டன. இதன் விளைவால் நிலத்தடி நீர்மட்டம் குறையத் துவங்கியது. இதன் விளைவுதான் ஆழமான ஆழ்துளை கிணறுகள் உருவாகின.


பசுமை புரட்சியினால் செயற்கை உரங்கள் மறைந்து யூரியா, அமோனியா, பாஸ்பேட், பொட்டாஷ் எனும் ஆங்கில பெயருடன் கூடிய உரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் அதனால் உருவான விளைச்சலை கண்டு வியந்த நம் விவசாயிகள் இன்று விளைச்சலை காண முடியாமல் திண்டாடுகின்றனர். இத்தகைய உர பயன்பாட்டால் மண்ணிற்கே உரித்தான ஈரப்பதமும், காற்றோட்டமும் மறைந்து மண் இறுக்கமாக மாறிவிட்ட நிலை நிலவுகிறது.


2.4 மாயமான நீர்

“நீர் இன்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப மனிதன் உயிர் வாழ நீர்; இன்றிமையாத ஒன்று. இதை உணர்ந்த மனிதன் நீரோடை அருகில் குடிபெயர்ந்தான்.


வானம் பொய்த்துவிட்டால் உழவர் ஏர்பூட்ட மாட்டார்கள். வானில் இருந்து மழைத்துளி விழாது போனால் பசும்புல் தலைகாட்டுவது இல்லை. வானம் பெய்யாது போனால் உழவன் தானம் செய்யமாட்டான். துறவி தவம் செய்யமாட்டான். இப்படி நீர்pன் முக்கியத்துவம் தெரிந்ததனால் மழைநீரை சேமித்தார்கள். நீர் இல்லாது போனால் உலகில் வாழ்வு நிலைக்காது. நமது முன்னோர்களின் தொழில்நுட்பத்தையும் திறமையையும் வெளிநாட்டவர்கள் வியந்து பாராட்டியுள்ளார்கள். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஆங்கிலேயர் வந்தார். அவர் பெயர் ஜான் அகஸ்டஸ் வால்க்கர். அன்று அவர் ஆங்கிலேய அரசுக்கு கொடுத்த அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. அதில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.


தண்ணீர் பாய்ச்சி வேளாண்மை செய்வது எங்கும் உள்ளதுதான். இருந்தாலும் இந்தியாவில் செய்திருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மிகப்பெரிய அறிவுப்பூர்வமான செயல் இது. அதுபோல ஏராளமான மக்களின் உழைப்பும் அதில் அடங்கியுள்ளது. பல்வேறுபட்ட உயிர் சூழலமைப்புகள் நிலவுகின்றன. இவற்றுக்கு ஏற்ப நீர்பாசன அமைப்புகளை ஏற்படுத்தி இருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. மாபெரும் ஏரிகள்இ மிகப்பெரும் அணைகள்இ குளங்கள்இ குட்டைகள்இ கால்வாய்கள் இப்படி அவர்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கி இருந்தார்கள். அவற்றுக்கு பெயரும் வைத்துள்ளார்கள். மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வித்தியாசமாகச் செய்திருந்தார்கள். கற்பாறைகளை அடுக்கி கால்வாய் அமைத்தார்கள். சில இடங்களில் புவிஈர்ப்பு விசைக்கு எதிராகவே நீரை வழிப்படுத்தியுள்ளார்கள். ஏரி, குளங்கள் சின்னதும் பெரியதுமாக இருந்தாலும் மிகச்சிறிய ஏரி மூலம் குறைந்தது 50 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ந்தது.  நடுது;தட்டுக் குளங்களில் இருந்து 100 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ந்தது. மிகப்பெரிய ஏரி நீரைக் கொண்டு 500 ஏக்கர் வரை பயிர் வைக்க முடிந்தது. ஏரிஇ குளங்களை ஏற்படுத்த எப்படிப்பட்ட இடங்களை தேர்வு செய்தார்கள்? இரண்டு குன்றுகள் கூடுகின்ற இடத்தில் ஏரி ஒன்றை அமைத்தார்கள். அந்த குன்றுகள் மீதும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களிலும் பெய்யும் மழைநீர் முழுவதும் ஏரியில் வந்து தேங்குகிறது. மலையடிவாரத்தில் மட்டுமல்லாது ஆறுகளை ஒட்டிய பள்ளத்தாக்குகளிலும் ஏரிகளை அமைத்தார்கள். அது மட்டுமல்ல, தண்ணீர் இல்லாத வட்டாரத்தில் ஏரிகளையும், குளங்களையும் வெட்டினார்கள். கால்வாய்களை வெட்டி இந்த குளங்களை ஆற்றோடும் பெரிய நதியோடும் இணைத்தார்கள். கல்லும் முள்ளும் நிறைந்த இடங்கள் நெல் விளையும் நிலங்களாக மாற்றப்பட்டன. இப்படி வேற்றாரும் புகழும் வண்ணம் நமது முன்னோர் இயற்கை ஆதாரமாகிய நீரைப் பயன்படுத்தினார்கள். ஆனால் மனிதன் இன்று அதிகப்படியான ஆசையால் விளைச்சலை அதிகப்படுத்தி நீர் வளம் குறைய காரணமானான். எனவே நிலத்தை தோண்டி புவியின் அடியில் உள்ள நீரும் வற்றி போகும் அளவுக்கு இன்றும் பயன்படுத்தி வருகிறான். இதை அறிந்தே அறிஞர்கள் பலர் கூறுகின்றனர்: மூன்றாம் உலகப்போர் உருவானால் அது நீரை மையப்படுத்தி தான் இருக்கும் என்று... போர் மூழ்வது என்பது நாம் நீரை கையாளும் விதத்தில் என்பதை மறந்திட வேண்டாம்.


நிறைவாக... 

இவற்றையெல்லாம் கேட்கும் போது நாம் வாழும் புவியின் அவல நிலை நம் கண்களை குளமாக மாற்றுகின்றன. இந்நிலை விரைவில் மாற்றப்படாவிடில் நாம் புவியில் வாழ முடியாத நிலை உருவாக நேரிடும்.


நாம் வாழும் இப்பூமி நம்முடையது அல்ல....

நாம் வருவதற்கு முன்பும் இப்பூமி இருந்தது...

நாம் போன பிறகும் இப்பூமி இருக்கும்...


எனவே வாழும் வரை இப்பூமியை நம்முடையதாக எண்ணி இப்பூமியை பாதுகாத்து வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டியது நம் கடமையாகும். வாருங்கள் நம் கடமையை செயலாக்க இணைவோhம்...


3. புவியைப் பாதுகாப்பதில் திருஅவையின் பங்கு

தொடக்கமாக...

கடவுளின் படைப்பே இயற்கை என்பது கத்தோலிக்க திருஅவையின் ஆழ்ந்த நம்பிக்கை. இயற்கையை பேணுதல் குறித்து திருஅவை எப்போதும் அக்கரை கொண்டுள்ளது. இயற்கையை பாதுகாக்க திருஅவை பல நேரங்களில் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்றும் அதனை தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கின்றது.


ஐக்கிய நாடுகளின் ஸ்டாக்ஹே பிரகடனத்திற்குப் பிறகு “சுற்றுச்சூழல் பாதுகாப்பு” தங்களின் பொறுப்பு என்பதனைக் கிறித்தவர்கள் உணர்ந்து பொறுப்புணர்வோடும் கடமையுணர்வோடும் செயல்பட வேண்டும் எனத் திருஅவை அழைப்பு விடுக்கிறது.


3.1 இரண்டாம் வத்திகான் சங்கம்:

     இன்றைய உலகில் நிலவக்கூடிய இயற்கை சமநிலையற்ற சூழலை குறித்து இரண்டாம் வத்திகான் சங்கம் இன்றைய உலகம் தன்னிடம் கொண்டுள்ள தொழில் நுட்ப பொருளாதாரத் துறைகளின் ஆற்றல்களைப் பயன்படுத்தி இந்த இழிநிலையை மாற்ற இயலும். அவ்வாறே மாற்றவும் வேண்டும். என்று  கூறி நம் கடமையையும் நாம் செயலாற்ற வேண்டிய நிலையையும் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றனர்.


3.2 திருத்தந்தை ஆறாம் பவுல்:

திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் Renewal Must Be Moral, Inner And  Personal    என்று  15. 01. 1969 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது கட்டுரையில் “மனிதன் சுற்றுச்சூழலை அளிவுக்கதிகமாகப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் தனக்கும் கேடு விளைவிக்கிறான் எனக் கூறுகிறார். 1987ஆம் ஆண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது உயிர் வாழ்வதற்கான நிபந்தனையாகும் என்று டோமினிக் குடியரசைச் சேர்ந்த ஆயர்கள் கூறியுள்ளார்கள்.


3.3 திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்

1996ஆம் அண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் “சமூக அக்கறை” (Sollicitudo Reisociali) என்ற சுற்றுமடலை எழுதினார். வளர்ச்சி என்பது இயற்கைக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது. இயற்கையை மதிப்பதாக இருக்கவேண்டும். பண்டைய காலத்தில் கிரேக்கர்கள் பிரபஞ்சத்தில் உள்ள ஒழுங்குமுறைகளை அறிந்திருந்தார்கள். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் தங்களை மற்றவர் மதிக்கவேண்டும் என்று விரும்புகின்றன என்பதனை உணர்ந்திருந்தனர்.


3.4 திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் “பசுமைத் தந்தை” என்றழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் பொறுப்பேற்றது முதல் பருவநிலை மாற்றத்தின்மீது மிகுந்த அக்கறை கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்திக் கொண்டிருந்தார். “நமக்கு விருப்பமானதையே> நமக்கு பயனளிக்கும் என்று கருதுவதையோ மட்டும் செய்யக்கூடாது. இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தின் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமெனில் பூமியின் குரலுக்கு செவிமடுத்து அதற்கு ஏற்றாற்போல் செயல்பட வேண்டியது காலத்தின் அறிகுறியாக உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் உலகம் எதிர்நோக்கியுள்ள சுற்றுச்சூழல் அழிவு நமது சிந்தனையை மாற்றி அமைத்துக்கொள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. சுயநலம், நுகர்வு கண்ணோட்டம் ஆகியவை ஏற்படுத்தியிருக்கும் ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கை முறையை உதறித்தள்ளிவிட்டு, படைப்பின்மீது பொதுநலனும், பொறுப்பும் உண்டு என்ற உணர்வில் மனிதகுலமும் எதிர்கால தலைமுறையினரும் நாடுகளும் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிலைபாட்டை மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


3.5 திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூன் மாதம் 18ஆம் நாள் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட “Laudato Si”  என்ற சுற்றுமடலில் மனித உயிரினத்தின் பொதுவான வீடாகிய இயற்கையை பாதுகாப்பது நமது கடமை. கடவுளின் படைப்பான இயற்கையை நாம் பாதுகாக்காமல் அழிக்க முயன்றால் அது நம்மையே அழித்துவிடும். மனித இனத்தின் வீடாகிய இயற்கையை கட்டுவதற்கு மனிதர்களுக்கு இன்றும் சக்தி இருக்கிறது. அதற்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.


3.6 இந்திய ஆயர்பேரவையின் பங்களிப்பு:

பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் 2014 ஆம் ஆண்டு கூடிய இந்திய ஆயர்கள் கூட்டமைப்பு சுற்றுச்சூழலைக் குறித்து விவாதிக்கும்பொழுது பணக்கார நாடுகள் வளங்கள் மற்றும் எரிசக்தியை அதிகமாக பயன்படுத்துகின்றன. முதலாளித்துவ நாடுகள் பொதுவுடைமை நாடுகள் காற்று மண்டலத்தையும் கடலையும் மாசுபடுத்துவதுடன் அவற்றிற்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு இழப்பையும் ஏற்படுத்துகின்றன. மானிடரின் எல்லை மீறிய நுகர்வாலும் தொடர்ந்து மாசு அதிகரிக்கச் செய்து வருவதாலும் வளிமண்டலமும் நீர் நிலைகளும் பாதிப்புக்குள்ளாகி மனிதகுலம் பேரிடரை எதிர்நோக்கியுள்ளது என்று எச்சரிக்கை விடுத்ததுள்ளது.


நிறைவாக...

எரிந்து கொண்டு இருக்கும் மெழுகுதிரியை பார்த்து யாரும் இறந்து கொண்டு இருக்கிறது என கூறுவுதில்லை. அதுபோலதான் தினம் தினம் அழிந்து கொண்டு இருக்கும் இயற்கையின் இறப்பு கூட பலருக்கு தெரிவதில்லை. புவியை காக்க நம் திருஅவையும்இ திருதந்தையர்களும் பல ஆண்டுகளாகவே அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கின்றனர். வாருங்கள் நாமும் இணைவோம் இயற்கையை பாதுகாத்திட... 


 

4. இனி ஒரு விதி செய்வோம்

தொடக்கமாக...

ஆண்டவனால் ஆறறிவோடு அலைந்து திரிந்த மனிதன் சிக்கி முக்கிக் கற்களில் நெருப்பை கண்டுபிடித்தான். உருண்டோடிய கற்களில் இருந்து சக்கரம் கண்டுபிடித்தான். சக்கரத்தின் மீது சவாரி சென்றான். மாடுப்பூட்டி உழவு தொழில் செய்தான். ஆற்றுப்படுக்கைகளை பசுமைப் பிரதேசங்களாக்கினான். மனிதஇன வரலாற்றில் முயற்சிகள் தான் கண்டுபிடிப்புகளாகின. அதன் விளைவே இன்று உலகம் நம் கையில் வசப்பட்டிருக்கிறது. இரவைப் பகலாக்கி உலகை உள்ளங்கையில் கொண்டுவந்துவிட்டோம் நாம். அதன் விளைவே செயற்கைகோள். மின் அணுச்சாதனங்கள், கணிப்பொறி, இண்டர்நெட், அணு ஆற்றல் என வளர்ந்து கொண்டே செல்லும் அறிவியல் முன்னேற்றங்கள் இருந்தாலும் பசி எனும் இரு எழுத்துக்கு முன் அனைத்தும் மண்டியிடும். ஒரு மனிதனின் பசியை நீக்குபவன் தான் விவசாயி. ஆனால் இன்று அவனது பசியை நீக்க யாருமில்லை. இது ஒரு புறம் இருக்க நாளுக்கு நாள் வளரும் அறிவியல் வளர்ச்சியில் ஏன் இத்தகைய மாற்றம்? இந்நிலை மாற நாம் என்ன செய்வது? இதுவரை என்னென்ன செய்யப்பட்டுள்ளது? வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம்...


4.1 நம் நாட்டு மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்:

நம் புவியை காக்க வேண்டும். இதை உணர்ந்தே பலர் மரங்களை காக்க பலர் இயக்கங்கள் மூலம் போராடியும்இ நீதிமன்றங்களின் கவனத்திற்கு சுற்றுசூழல் மாசுப்பாட்டை கொண்டு சென்று சுற்றுசூழலை காக்க பல சட்டங்களையும் பெற்றுதந்துக் கொண்டு இருக்கின்றன.


4.1.1 சிப்கோ இயக்கம்:

“சிப்கோ” இயக்கத்தின் மூலம் மரங்கள் வெட்டப்படும் செய்தியை அறிந்தவுடன் அங்கு முன்னரே சென்று மரங்களை கட்டி அணைத்துக் கொண்டு எங்களை வெட்டிய பிறகு மரங்களை வெட்டுங்கள் என போராட்டம் நடத்தி மரங்களை காப்பாற்றுவார்கள்.


4.1.2 பூவுலகு நண்பர்கள் இயக்கம்:

இயற்கையின் மகத்துவம் அறிந்தே இவ்வியற்கையை அழிவில் இருந்து காப்பாற் வேண்டி “பூவுலகு நண்பர்கள்” என்னும் இயக்கம் உருவானது. இதுபோல இன்று நிறைய இயக்கங்கள் புவியை பாதுகாக்க உருவாகி உள்ளன என்பது நாம் அறிந்த உண்மை. “பத்தோடு ஒன்று பதினொன்று அத்தோடு நான் ஒன்று” என்ற நிலையை மாற்றி இவர்களுடன் நாமும் இணைந்து செயல்பட முயல்வோம்.


இது போன்று பல இயக்கங்கள் இன்று நாம் வாழும் புவியில் உள்ளன. அவைகளுடன் இணைந்து நாமும் நமது புவியை காக்க முயலவேண்டும்.


4.2 தமிழக அரசின் நிலைப்பாடுகள்:

 இனி ஒரு விதி செய்வோம். இப்புவியை பாதுகாக்க வேண்டியது நமது அரசுக்கும்இ நமக்கும் உரிய கடமை. ஏனெனில் நாம் வாழும் இந்த புவி நமக்கு வாழ்வளித்த தாய். இதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சுற்றுச்சுழல் துறை செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் இப்புவியை காக்க ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவை முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது இன்று மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. அரசு அதனை கண்கானிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆண்டு தோறும் புவியை காக்க அரசு பல சட்டங்களை உருவாக்குகிறது. ஆனால் அவை எந்த அளவு நடைமுறையில் பின்பற்றப்படுகிறது என்பதும் அரசு கவனிக்க வேண்டிய ஒன்றாகும். உதரணமாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கட்டயப்படுத்திய மழை நீர் சேமிப்புத் தொட்டி திட்டம் இன்று எந்த அளவு நடைமுறையில் உள்ளது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். சமீபத்தில் கூட நமது அரசு நெகிழி இல்லா தமிழகம் என்று நெகிழிகளை பயன்படுத்த தடைவிதித்து;து. ஆனால் அதில் இறுதிவரை நிலைத்திருப்பது மிகவும் அவசியமாகும். நூம் வாழும் இப்புவியை காப்பாற்ற மரம் வெட்டுவதை தவிர்த்து மரம் நடுவதை அதிகப்படுத்த வேண்டும். நம் நாட்டில் உள்ள நீர்நிலைகளையும்இ மரங்களையும் காக்க நமது அரசு முயற்சிக்க வேண்டும் அவை நமக்கு பலவகையில் உதவுகின்றன அவற்றுள் சில...


·      மரம் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. காற்றை தூய்மைப்படுத்துகிறது.


·      மரம் மண்ணை தூய்மைப்படுத்துகிறது. மண்ணில் இருக்கும் ஆபத்தான மாசுக்களையும் வேதியல் பொருட்களையும் உறிஞ்சிக் கொள்கிறது.


·      மரம் ஒலி மாசுபடுதலை கட்டுப்படுத்துகிறது. வீட்டிற்கு முன்பும் பொது இடங்களிலும் மரம் வளர்ப்பதால் வாகனங்களால் ஏற்படும் ஒலியைக் கட்டுப்படுத்த முடிகிறது.


·      மரம் வெள்ளம்> சூறாவளி புயலை தடுக்கிறது.


·      மரம் கார்பன்டை ஆக்சைடை உள்வாங்கிக் கொள்கிறது.


·      மரம் காற்றை தூய்மைப்படுத்துகிறது. காற்றை மாசுபடுத்தும் கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, நைட்ரசன் டை ஆக்சைடு ஆகியவற்றை உள்வாங்குகிறது.


·      மரம் மண் அரிப்பைத் தடுக்கிறது. மரக்கழிவுகளால் மண்ணை வளப்படுத்துகிறது. மண்ணிலுள்ள உயிர்களுக்கு உணவு அளிக்கிறது.


·      மரம் நிழலையும் குளிர்ச்சியையும் தருகிறது.


·      மரம் புவி வெப்பமயமாவதை தடுக்கிறது.


·      மரம் நிலத்தடி நீரை பெருமளவில் தன் வேர்களில் சேர்த்துவைக்கிறது.


·      வறட்சியைத் தடுக்க நாட்டின் முக்கிய நதிகளை இணைத்தல்.


·      ஏரிகளையும்> குளங்களையும் தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். இப்பணிகள் முறையாக நடக்கிறதா என்று அரசு கண்கனிக்க வேண்டும்.


     இதுபோன்ற வழிகளில் நம் அரசு நமது புவியை பாதுகாக்க முயற்சிக்கலாம். அல்லது இதைவிட சிறந்த வழிகளை கண்டடைந்து நாம் வாழும் புவியை பாதுகாக்க முயல வேண்டும். மேலும் எப்போதும் புவியை பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.


4.3 நாம் மேற்க்கொள்ள வேண்டியவைகள்:

கிராமங்களே இந்தியாவின் முதுகெலும்பு என்றார் காந்தியடிகள். ஆனால் கிராமங்களின் முதுகெலும்பு விவசாயம் என்பதை யாரும் மறந்திட வேண்டாம். ஆனால் இன்று விவசாய நிலங்கள் எல்லாம் பலரால் நாசப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்றைய காலக்கட்டத்தில் நிலவும் பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் அதிக அழுத்தம் பெறவேண்டிய ஓர் அருள்பணி “இயற்கைச் சுற்றுச்சூழல் பேணும் அருள்பணி” என்று அருள்பணி ஆல்பர்ட் அவர்கள் இன்றைய தமிழகச் சூழலில் அருள்பணி அக்கறைகள் என்ற தனது கட்டுரையில் கூறுகின்றார். இன்று பல இடங்களில் பல அருள் தந்தையர்கள் இப்புவியை பாதுகாக்க பல புத்தகங்கள்இ கட்டுரைகள் மூலம் மக்களை ஊக்கப்படுத்துகின்றனர். பலர் தங்களின் பங்கு தளங்களில் இலவசமாக மரங்களை வழங்கி மரம் நடுதலை ஊக்கப்படுத்துகின்றன. மேலும் பல அருள் தந்தையர்கள் கல்வி நிறுவனங்கள் மூலம் இப்புவியை காக்க வருங்கால தலைமுறையை ஊக்கப்படுத்துகின்றன. இன்னும் குறிப்பாக பல குருத்துவ பயிர்ச்சி தளங்களில் பயிலும் அருட்சகோதரர்கள் கூட தங்களின் குருத்துவ பயிர்ச்சி தளங்களிலும்இ களப்பணிச் செல்லும் இடங்களிலும் மரம் நடுவது பற்றியும்இ இப்புவியை பாதுகாப்பது பற்றியும் விழிப்பணர்வை வழங்கி பலருக்கு முன்னுதாரமாக இருக்கின்றனர். எனவே நாம் முடிந்தவரை நமது புவியின் நலன் காக்கவும்இ புவிக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தட்டிக் கேட்கவும்இ முயற்சி எடுக்கவும்இ பலருக்கு முன்னுதாரணமாக இருக்கவும் வேண்டும்.


 “முகவரி இல்லாத கடிதம் ஊர்போய் சேராது” என்பார்கள். புவியைப் பற்றிய முகவரி கொடுத்திருக்கிறேன். ஊருக்கும்இ உலகுக்கும் இப்பிரச்சனையின் உண்மை நிலையை வெளிகாட்டுவது உங்கள் கையிலும் என் கையிலும்தான் இருக்கிறது. இது நம் அனைவரின் பொறுப்பும்இ கடமையும் என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியமாகும்.


நிறைவாக

இயற்கை விரும்பிகள்> திருச்சபை> தன்னார்வ தொண்டர்கள் என பலர் இன்று இப்புவியை பாதூக்க முன்வந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து இப்புவியை பாதுகாக்க உறுதுணையாக இருப்போம். வாய்பை நழுவவிட்டவன் வாழ்வை இழந்தான் என்பதுபோல் இப்புவியை பாதுகாக்க நமக்கு கிடைத்துள்ள இவ்வாய்ப்பை பயன்படுத்தி இப்புவியில் நம் வாழ்வை தக்கவைத்துக்கொள்ள முன் செல்வோம். “ஒரு துளி செயல் இருபதாயிரம் வெற்று பேச்சுக்களைவிட சிறந்தது” என்று சுவாமி விவேகானந்தரின் வார்த்தைக்கு ஏற்ப வெறுமன கட்டுரையை படித்துவிட்டு நகர்வதை விட ஒரு மரத்தை நட்டு (ஒரு துளி செயல்) இப்புவியை பாதுகாக்க உதவ முயற்சியுங்கள் என்று கூறி நிறைவு செய்கிறேன்.


 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...