திருவள்ளுவர் காலத்திலிருந்தே தமிழில் இருக்கக்கூடிய அறிவுரை நூல்களுக்கு பஞ்சமில்லை அவற்றில் உள்ளவற்றை கடைபிடித்து இருந்தால் இன்று தமிழ்நாட்டில் ஒரு அயோக்கியன் கூட இருந்திருக்க முடியாது
என்பார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக இயேசு பலவிதமான நற்பண்புகளை மக்களுக்கு கற்பிக்கின்றார். கற்பிப்பதை தன் வாழ்விலும் செயல்படுத்தி காட்டுகின்றார். அவரையும் அவரது போதனையையும் கண்டு மக்கள் பலர் வியப்பில் ஆழ்ந்து போகின்றனர்.
இன்று நாம் வாழக்கூடிய உலகில் அறிவுரைக்கும், அறிவுரை கொடுப்பவருக்கும் பஞ்சமில்லை.
பகிர்வு பற்றி பலமணிநேரம் சொற்பொழிவு ஆற்றியவரிடம் பசிக்குது என்றான் ஒருவன் அவனைப் பார்த்து வெளியே போடா என்று விரட்டினாராம் அந்த சொற்பொழிவாளர்.
இன்று நல்லதைப் பேசுபவர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் சொல்வதை செயல் வடிவமாக மாற்ற இன்று பலர் தேவைப்படுகிறார்கள். இயேசு தாம் வாழ்வில் அறிவித்ததை தம் செயலில் வெளிப்படுத்தினார். நாமும் அவரைப்போல சொல்வதை செயலில் வெளிகாட்ட இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
இந்த சமுதாயத்தில் இவர் சரியில்லை, அவர் சரியில்லை என்று சொல்வதை விட, மிகவும் முக்கியமானது நாம் என்ன சொல்கிறோம், நாம் சொல்வதை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
எனவே நாம் வாழக்கூடிய இந்த உலகில், அறிவுரைகளால் அடுத்தவர் வாழ்வில் மாற்றத்தை எதிர்பார்ப்பதை விட, நமது வாழ்வில் நாம் கொடுக்கக்கூடிய அறிவுரைகள் நமது வாழ்வில் மாற்றத்தை உருவாக்கக் கூடியதாக அமைய இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவின் துணையை வேண்டியவர்களாய் அவரை பின் செல்வோம்.
"சொல்வது செயலாகுமா...?"
சொல்வது எளிது சகோ.
பதிலளிநீக்குசெய்வது தான் கடினம்.
என்ன செய்வது?..😌