"தன்னலமற்ற செயல்... அது நம்முடையதா?..."
மாணவர்களின் பதில் இவ்வாறாக இருந்தது...
சிலர்
கடவுளைத் தேடுவது என்றார்கள்.
சிலர்
பிறருக்கு பணி செய்வது என்றார்கள்.
சிலர்
மனிதநேயத்திற்காக உழைப்பது என்றார்கள் .
ஓரளவிற்கு இவைகள் அனைத்தும் சரியான பதில்கள் என்றாலும், முழுமையான பதில் எதுவாக இருக்கும்? என்று ஆழ்ந்து சிந்திக்கும் போது....
வாழ்க்கைக்கு ஒரே ஒரு நோக்கம்தான் உண்டு. அது மகிழ்ச்சியாக இருப்பது.
ஒருவன் மகிழ்ச்சியாக இன்பமாக வாழ அவனது தேவைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தேவைகளை நிவர்த்தி செய்ய பணம் அவசியமாகிறது. பணம் ஈட்டுவதற்கு உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பால் வரும் களைப்பு சிறிய வலியாகத் தோன்றினாலும் அந்த வலியே மகிழ்வின் அடிப்படையாகும்.
இன்று நற்செய்தி வாசகத்தில் ஒரு முதலாளி பேசிய பணத்தை தருவதாக கூறி தன் பணத்தை தன் விருப்பப்படி முதலில் வந்த நபர் தொடங்கி கடைசியில் வேலைக்கு வந்த நபர் வரை சமமாக கொடுக்கிறார். ஆனால் அவரின் பணம் வழங்கக்கூடிய செயல்பாட்டில் குறை காண்கின்றது ஒரு கூட்டம். நான் நல்லவனாய் இருப்பதால் உனக்கு பொறாமையா? என்று அந்த முதலாளி பணம் பெற்றுக் கொண்டு வேலை செய்தவர்களிடம் கேள்வியை எழுப்புகிறார்.
இன்று நாம் வாழும் உலகிலும் நமது பொருளை நம் விருப்பப்படி அடுத்தவருக்கு தருவதில் கூட தவறுகளை கண்டுபிடிக்கின்றனர் பலர்.
நமது தேவைகள் நிவர்த்தியடைவதோடு அடுத்தவர் தேவையும் நிவர்த்தியடைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும். இதுவே இறைவனது விருப்பமாகும்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
(கடவுள் வாழ்த்து : 4)
அதாவது விரும்புதலும், வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடியை விடாது நினைப்பவருக்கு எக்காலத்திலும் துன்பம் உண்டாவதில்லை என்ற திருவள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, இறைவனது திருவடியை விடாது நினைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாகிய நாமும், இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற முதலாளியை போல தேவையில் இருப்பவருக்கு இருப்பதை பகிரக் கூடிய நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும். மேலும் தேவையில் இருப்பவருக்கு பகிரக் கூடிய நல்ல மனிதர்களை மதிக்கவும், அவர்களின் செயல்களை விமர்சிப்பதை விட, நமது செயல்களும் தன்னலமற்ற நற்செயல்களால் மாறிட, நமது வாழ்வை மாற்றிட முயலுவோம்
"தன்னலமற்ற செயல்... அது நம்முடையதா?
ஆம்,
நம்முடையதாக மாற்றிக்கொள்ள நமது வாழ்வை மாற்றிடுவோம்..."
அனைவரையும் அன்பு செய்து அன்போடு வாழ்வோம்! தன்னலமற்ற தியாகச் செயல் புரிவோம்! என்று ஏசுவின் சைவர்களாக வாழ அழைப்பு விடுத்த சகோதரர். சகாயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! நன்றிகளும்!
பதிலளிநீக்கு