சுதந்திரத்தை பெற்றுத்தந்த தேசப்பிதா காந்திஜி 1948 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 - ந்தேதி கோட்சே என்பவ னால் சுட்டுக்கொல்லப்பட்டார் , மகாத்மாவின் மரணச்செய் தியை தாங்க முடியாமல் இந்தியா கதறித்துடித்தது . உலக நாடுகள் கண்ணீர் வடித்தன . உலகத்தலைவர்களும் , இந்திய தலைவர்களும் மறைந்த மகாத் மாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் . அப்போது உலகம் முழுக்க வெளியிடப் பட்ட செய்திகளின் விவரம் :
ஆறாம் ஜார்ஜ் அரசரும் , அரசி யும் காந்தியடிகளின் பிரிவு கேட்டு நானும் அரசியும் வருந்தினோம் . பேரதிர்ச்சி அடைந்தோம் . இந்திய மக்களுக்கும் மனித சமுதாயத்திற்கும் ஏற்பட்டுள்ள ஈடு செய்ய முடியாத பேரிழப்புக்காக எங்கள் உள்ளத்தில் வழியும் பரிவை இந்திய மக்களுக்கு உரித்தாக்குகிறோம் ' என்றார்கள் .
வின்ஸ்டன் சர்ச்சில் ,
இந்த பெரும் பாதக செயல் என்னை திடுக்கிடச் செய்தது ' என்றார் .
மவுண்ட் பேட்டன் பிரபு , ( வானொலியில் ) , ' அமைதி வடிவான மனிதரும் , அண்ணலுமா கிய காந்திஜி பலாத்கார வெறியை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் அதற்காகவே வீர மரணம் எய்தியுள்ளார் . இந்த பலாத்கார நோய் தான் புதிதாக கிடைத்துள்ள இந்தியாவின் சுதந்திரத்தையே குலைத்து விட பார்க்கிறது . நம்மை எதிர்நோக்கி நிற்கும் நாட்டின் சீரமைப்பு வேலை என்னும் பெரும் பணியில் இந்தியா இறங்கும் முன்பு இந்த கொடிய புற்றுநோயை வேருடன் களைந்தாக வேண்டும் என்பதே காந்திஜியின் எண்ணமாக இருந்தது ' என்றார் .
பெர்னார்ட்ஷா உள்ளம் நொந்து , அளவுக்கு மீறி நல்லவராக இருப்பது எவ்வளவு தீங்கானது என்பதை இது காட்டுகிறது ' என்றார் .
பெருந்தலைவர் காமராஜர் , மகாத்மா மறைந்து விட்டார் . உலகமே அவருக்காக வருந்துகிறது . மகாத்மா எதற்காக நம்மிடம் இருந்து மறைந்தார் என்பதை கவனிக்க வேண்டும் . வேற்றுமை மனப்பான்மையை மக்களிடம் இருந்து ஒழிக்க அவர் பாடு பட்டார் . இறுதியில் அதற்காக உயிரை யும் தியாகம் செய்தார் . வேற்றுமையை போக்க நாம் இனி அவர் விட்டுச் சென்ற வேலையை தொடர்ந்து செய்யவேண்டும் . நம் மனதில் உள்ள வேற்றுமையை போக்கி நாட்டை பக்குவப்படுத்த வேண்டும் ' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக