"மன்னிப்பின் மூலம் மனிதத்தை வளர்ப்போம்"
அன்புக்குரியவர்களே! இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் .
ஒரு நபர் மற்றொருவருக்கு எதிராக பாவம் செய்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வு பெரும்பாலும் வெறுப்பையும் அல்லது பழிவாங்குதலையும் இந்த உலகில் நாம் காண்கிறோம். கோபம் என்பது நமக்கு நாமே வைத்து இருக்கும் நெருப்பு. அது நம்மை சுட்டெரித்து விடும் என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய நற்செய்தியின் வழியாக ஆண்டவர் இயேசு அவரது தவறை அவரிடத்தில் எடுத்துக்கூறி அவரோடு மீண்டும் உறவைத் தொடர அழைப்பு விடுகின்றார்.
நமக்கு எதிராக தீங்கு செய்த வருடத்தில் நாம் உறவு கொண்டு வாழ்வது சாத்தியமா? ஆம் சாத்தியமே! ஒவ்வொருவருக்குள்ளும் உறைந்திருக்கும் இறை சாயலை நாம் கண்டுணரும் போது நமக்கு எதிராக தீங்கிழைத்தவர்களிடம் நம்மால் உறவு கொள்ள முடியும்!
நமது வார்த்தைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட மற்றவர்கள் மூலமாக அவரின் பாவத்தை சரிசெய்துகொள்ள செய்ய முடியும்!
அப்போதும் அவர்கள் செவிசாய்க்க விட்டால் திருச்சபையிடம் அவரை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்.
இவராக இன்றைய வாசகத்தின் வழியாக இயேசு நம் அனைவரையும் ஒரே மனதோடு ஒன்றித்து இருக்க அழைப்பு விடுக்கின்றார். எங்கே என்னுடைய பெயரால் 2 அல்லது 3 பேர் கூடி இருக்கிறீர்களோ அவர்களிடத்திலே நான் இருப்பேன் என்று கூறுகின்றார்.
இயேசு தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தவராக
" தந்தையே! இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும்" என்று தந்தையிடம் செபித்தார். அவரைப்போல நாமும் நமக்கு எதிராக தவறு செய்தவர்களை மன்னிக்க நம்மை அழைக்கின்றார். இவராக மன்னிப்பின் வழியாக நமது மனதை இறைவனோடு இணைக்கவும் நமது கரங்களை சக மனிதர்களோடு இணைத்திடவும் இன்றைய நாளில் இயேசு ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அவரது அழைப்பிற்கு செவி கொடுப்பவர்களாக! அவரைப்போல மன்னிப்பவர்களாக! மன்னிப்பின் மூலம் இறை சாயலில் இணைந்திட நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
அவரது அழைப்பினை உள்ளத்தில் ஏற்று, மன்னிப்பின் மூலம் மனிதத்தை வளர்க்க உள்ளத்தில் உறுதி கொள்வோம்
"மன்னிப்பின் மூலம் மனிதத்தை வளர்ப்போம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக