"சமூகத்தின் வழிகாட்டிகளாக மாறிட..."
இன்று நம் தாய் திருச்சபையானது புனித ஜான் மரிய வியான்னி அவர்களை நினைவு கூருகிறது. இவர் குருக்களின் பாதுகாவலர், ஆர்சு நகருக்கு எனக்கு வழிகாட்டு நான் உனக்கு விண்ணகத்திற்கு வழி காட்டுகிறேன் என கூறியவர்.
இவரின் வாழ்வுக்கும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது . என் விண்ணகத் தந்தை நாடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்... என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் விண்ணகத் தந்தையை நாடியதால் இன்றுவரை இம்மண்ணில் இருந்து பிடுங்க படாத ஒரு நாற்றாக திகழக்கூடியவர் தான் இந்த புனித ஜான் மரிய வியான்னி அவர்கள்.
இவர் ஒரு சிறந்த வழிகாட்டி பல குருக்கள் எப்படி வாழ வேண்டும்? என்பதன் முன்னோடியாகத் திகழ்ந்தவர். எனவே தான் இவரை குருக்களின் பாதுகாவலராக திருஅவை சிறப்பித்துள்ளது.
நாம் இந்த உலகில் குருட்டு வழிகாட்டிகளாக இருக்க கூடாது என இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமக்கு ஆண்டவர் இயேசு நமக்கு கற்பிக்கிறார்.
புனித ஜான் மரிய வியான்னி தன் வாழ்வாலும், சொல்லாலும், செயலாலும் இவ்வுலகத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார்.
இவர் பின்பற்றிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் இந்த மண்ணில் வாழ்ந்த போது நல்ல ஒரு வழிகாட்டியாக .... ஒரு மனிதன் இவ்வுலகில் எப்படி வாழவேண்டும்? என்பதை வாழ்ந்து காட்டிய ஒரு உண்மையான வழிகாட்டி. இந்த இயேசுவின் வாழ்வை பின்தொடர்ந்த புனித ஜான் மரிய வியான்னி இன்று இச்சமூகத்தில் பல குருக்களுக்கும், மக்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறார்.
இதற்கு காரணம் விண்ணகத் தந்தையின் விருப்பமான உண்மை, நேர்மை, பொறுமை, பகிர்வு என்பதையெல்லாம் தன் வாழ்வில் வெளிகாட்டியதே...
இன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின் செல்லக்கூடிய நாம் அனைவரும் நல்லதொரு வழிகாட்டியாக திகழ இன்றைய நாளில் நமது வழிகாட்டுயான இயேசுவின் பின்னால் உண்மையோடும் உறுதியோடும் பயணிப்போம்...
"சமூகத்தின் வழிகாட்டிகளாக மாறிட..."
புனித ஜான் மரிய வியான்னியைப் போல ஆண்டவர் இயேசுவை தேடுவதில் ஆர்வம் காட்டினால் அவரது உண்மை சீடர்களாக இச்சமுதாயத்தின் உண்மை வழிகாட்டிகளாக ஆண்டவர் நம்மை உரு மாற்றுவார் என்பதை உணர்ந்தவர்களாக இறையாட்சிக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுத்து ஆண்டவரை தேடி அவரின் சாட்சிகளாய் வாழ்வோம்!
பதிலளிநீக்கு