"இறை வார்த்தையால் வாழ்க்கையை அழகாக்குவோம் ..."
"இறைவார்த்தையைக் கேட்டு அதை கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்..." என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கூறக்கூடிய வார்த்தைகளின் அடிப்படையில் இறைவார்த்தையை கடைபிடித்து வாழ நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
இறைவனது வார்த்தைகள் எப்போதும் கேட்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அன்பையும், ஆறுதலையும், நம்பிக்கையையும், தவறான வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கக்கூடியது. மேலும் அநீதிக்கு எதிராக குரல் தரக்கூடியதாகவும் இருக்கும்.
இந்த இறைவார்த்தைகள் இன்றும் சமூகத்தில் பல இடங்களில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பலர் இதனை இறைவனது வார்த்தை என்பதை உணர்ந்து அந்த வார்த்தைகளை இச்சமூகத்தில் கொடுக்கக்கூடிய நபர்களுக்கு பக்கபலமாக துணை நிற்கின்றனர்.
ஆனால் பலரோ... இது இறைவார்த்தை என்பதை உணராது, இறைவனது வார்த்தைகளுக்கு செவி கொடுக்காது தங்கள் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டு நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலரோ... இது இறைவனது வார்த்தைள் என்று அறிந்திருந்தும் அதை காதில் கேட்காதவர்கள் போல செயல்படுகின்றனர்.
இத்தகைய சூழலில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி வாழ்வோர் பேறுபெற்றோர் ..." என குறிப்பிடுகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய், இச்சமூகத்தில் நிலவக்கூடிய இறைவனது வார்த்தைகளை உள்வாங்கி, அதனை கண்டு கொண்டவர்களாய், இறைவார்த்தைக்கு செயல்வடிவம் தருவதற்கு இயேசுவின் சீடராக அவரை பின் தொடர்வோம்.
"இறை வார்த்தை உயிருள்ளது ஆற்றல் வாய்ந்தது..." இந்த இறைவார்த்தைகளால் நமது வாழ்வை மாற்ற ... வார்த்தையான இறைவனின் உண்மையான சீடர்களாக அவரைப் பின்பற்றி செல்வோம்.
"இறை வார்த்தையால் வாழ்க்கையை அழகாக்குவோம் ..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக