மாவீரன் செண்பகராமன் பிள்ளை
சின்னச்சாமி பிள்ளை திருவிதாங்கூர் அரசில் போலிஸ் ஏரட்டாக பணிபுரிந்தார் . பணி நிமித்தமாக திருவனந்தபுரத்துக்கு - குடிபெயர்ந்தனர் , செண்பகராமன் பிள்ளை 1891 - ம் ஆண்டு பிறந்தார் . திரு - வனந்தபுரம் தைக்காடு மாதிரிப்பள்ளி யில் படித்தபோதே அவரிடம் சுதந்திர தாகம் ஏற்பட்டது . " ஸ்ரீபாரதமாதாவாலியர் சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்து சக மாணவர்களுடன் வந்தே மாதரம் பாடினார் .
அப்போதுதான் , சுதந்திரப் போரின் தாரக மந்திரமான ' ஜெய்ஹிந்த் ' என்ற கோவும் அவரிடம் இருந்து பிறந்தது . இதனால் செண்பகராமன்பிள்ளையை அடையாளப்படுத்தும்போது , ஜெய் ஹிந்த் செண்பகராமன் ' என்று குறிப்பிட் டனர் .
பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் , உறவினர் ஒருவர் மூலம் சர் வால்டர்வில் லியம் ஸ்ட்ரிக்லேண்ட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது . அவருடன் செண்பகராமன் பிள்ளையும் ஜரோப்பா சென்றார் . அப்போது அவருக்கு 15 வயது . அங்கு ஆஸ்திரியாவில் அவர் உயர்கல்வியை முடித்தார் . பின்னர் டிப்ளமோ என்ஜினியர் ஆனார்.
அடுத்து இந்திய சர்வதேச குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் , ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக பிரசாரம் செய்தார் . மேலும் பல நாடுகளுக்கு சென்று இந்தியாவின் சுதந்திரம் பற்றி பேசினார் . இதற்கிடையே , ஜெர்மன் நாட்டுப்படையில் அவர் சேர்ந்து இங்கிலாந்து நாட்டினருக்கு எதிராக போரிட்டார் .
1914 - ம் ஆண்டு , முதல் உலகப்போர் மூண்டது . ' எம்டன் ' என்ற நீர்மூழ்கிக் கப்பலில் செண்பகராமன்பிள்ளை என்ஜி னியராக இருந்து , ஆங்கிலேயருக்கு தெரி யாமல் , அவர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவுக்கு வந்தார் . சென்னையில் ஆங்கிலேயரின் கோட்டையை நோக்கி அந்த நீர்மூழ்கிக் கப்ப லில் இருந்து குண்டு கள் பறந்தன . இந்த தாக்குதலை ஆங்கிலேயர் சற்றும் எதிர் பார்க்கவில்லை . நிலை குலைந்தனர்
இதன் பின்னர் 1919 - ம் ஆண்டு வியன்னா மாநாடு நடந்தது . இதில் செண் பகராமன் பிள்ளை நேதாஜி சந்திப்பு ஏற்பட்டது . எம்டன் தாக்கு தலுக்கு பிறகு செண்பகராமன் பிள்ளையை நேதாஜி நன்கு அறிந்து வைத்திருந்தார் . அவரைப் போலவே நேதாஜிக்கும் , ' ஆயுதம் ஏந்தினால்தான் அன்னியரை சரணடைய வைக்க முடியும் ' என்ற எண்ணம் இருந்தது . இதனால் அதற்கான யுக்திகளை செண்பகராமனி டம் நேதாஜி கேட்டறிந்தார் . அதன் பிறகு தான் நேதாஜியும் “ ஜெய்ஹிந்த் ' கோஷத்தை எழுப்பினார் .
நேதாஜியுடனான சந்திப்புக்கு பிறகு செண்பகராமன்பிள்ளைக்கு ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லருடன் அதிக நெருக் கம் ஏற்பட்டது . ஒருமுறை , ' இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் , நாட்டை ஆட்சி செய்யும் திறமை இந்தியருக்கு இருக் குமா என்பது சந்தேகமே ... ' என்று ஹிட்லர் தவறான கருத்தை பதிவு செய்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த செண் பகராமன் , " இந்த கூற்றை தெரி வித்ததால் இந்தியர்களை அவ மதித்துவிட்டீர்கள் . எனவே , நீங்கள் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் ' என்று உறுதியுடன் குரல் எழுப்பினார் . இதனால் வேறு வழியின்றி ஹிட்லர் மன் னிப்பு கேட்டார் . அதுவும் எழுத் துப்பூர்வமாக எழுதிக் கொடுத் தார் .
உலகையே நடுநடுங்க வைத்த ஒரு சர்வாதிகாரி , ஒரு இந்தியரிடம் மன்னிப்பு கேட்ட தகவல் ஹிட்லரின் ஆதரவாளர் களை திகைக்க வைத்தது . அவர்கள் செண்பகராமனின் உயிரையே பறித்துவிட்டனர் . 1934 - ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒரு விருந்து நிகழ்ச்சியில் விஷம் கலந்த உணவை கொடுத்து நெஞ்சுரமிக்க அந்த மாவீரனை கொன்றுவிட்டார்கள் . இறப்பதற்கு 3 ஆண்டுக்கு முன்பு அவர் மணிப்பூரைச் சேர்ந்த லட்சுமிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார் . அவர்களுக்கு குழந்தை இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக