"எங்கள் மூதாதையரின் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால் இறைவாக்கினர்களின் கொலைக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்..." என்று கூறும் பரிசேயரைப் போல நாங்கள் அங்கு இருந்திருந்தால் அப்படி செய்திருக்க மாட்டோம் என்று தங்கள் செயல்களில் எதுவும் இல்லாமல், வெறும் வீண் வார்த்தைகளால் அனைவரிடமும் தங்கள் குறைகளை மறைக்க பிறரின் செய்கையை தங்களிடம் காணப்பட்டாலும், தங்களை நல்லவர் போல காட்ட முயல கூடிய பரிசேயருடைய மனங்களில் காணப்பட்ட தாழ்வு மனப்பான்மையை இயேசு சுட்டிக்காட்டும் விதமாக உள்ளார்ந்த மாற்றம் பற்றிய நற்செய்தியை பரிசேயருக்கு அறிவிக்கின்றார்.
இன்று நாம் வாழும் உலகில் நீ அவளைப்போல் சிவப்பாய் இல்லையே ! " என்றும், நீ அவனைப் போல் நன்றாக படிப்பதில்லை என்றும் பிறரை ஒப்பிட்டு ஒப்பிட்டுப் பேசி ஒருவரது ஆளுமையை சீர்குலைக்கும் பெற்றோர் இன்று இச்சமூகத்தில் அதிகம். இப்படிப்பட்ட நபர்கள் தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வார்கள். தங்களின் குழந்தைகளிடத்தில் தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகிறார்கள். இதனால் குழந்தைகள் நான் திறமையற்றவன் , நான் அழகில்லாதவள் , நான் எதற்கும் லாயக்கற்றவன் .. போன்ற எண்ணங் களால் இவர்கள் தங்கள் உள்ளங்களைக் குத்திக் காயப்படுத்திக் கொள்வார்கள். இதன் பலனாக இவர்களின் வாழ்வின் வெற்றிகள் தோல்விகளாக மாறும் , வாய்ப்புகளை நழுவ விடுவார்கள் . தான் யாருக்கும் வேண்டாதவன் என்ற உணர்வுடனிருப்பார்கள் . இத்தகைய தாழ்வு மனப்பான்மையை ஒப்பிட்டு பேசுவதன் வாயிலாக குழந்தைகள் மனதில் விதைக்கிறோம்.
பிரபல உளவியலார் ஆட்லர் ( Adler ) கருத்துப்படி எல்லோரிடமும் தாழ்வு மனம் உண்டு . அதன் அளவுதான் வேறுபட்டிருக்கிறது . ஓர் அளவுக்கு மேல் அது நம்மிடம் இருந்தால் அது நம்மை ஆட்கொள்ளும் , அடிமைப்படுத்தும் , பாதிக்கும் . எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் ( உரோ 6:16 ). இன்று நாம் வாழும் உலகில் பரிசேயர்களை போல வீண் பெருமைக்கும் தாழ்வு மனப்பான்மைக்கும் அடிமையாகாமல் திறந்த மனம் கொண்டவர்களாக வாழ இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
கலீல் ஜிப்ரானின் அழகிய கதை ஒன்று உண்டு.
மனிதன் ஒருவன் சுற்றுலா சென்றான். அழகிய மலைகள் நிரம்பிய பகுதிக்குச் சென்றான். அவனுடைய புலன்கள் அனைத்தும் தங்களுக்குள் பேசத் தொடங்கின. கண் சொன்னது ஆஹா எவ்வளவு அழகான மலை. இப்படிப்பட்ட மலையை பார்ப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றது.
உடனே காது சொன்னது மலையா? எங்கே என்னால் ஒன்றுமே கேட்க முடியவில்லையே நீ ஏதோ பொய் சொல்கிறாய் என்றது. உடனே கை என் கையால் மலையை தொட்டு உணர முயற்சிக்கின்றேன். ஏதோ கல் போல தான் தென்படுகிறது. சாதாரண கலை மலை என்று சொல்லி நம்மை கண் ஏமாற்றப் பார்க்கிறது. யாரும் ஏமாந்து விடாதீர்கள் என்றது. உடனே மூக்குச் சொன்னது மலைக்கு என்று ஏதாவது மனம் இருக்கவேண்டும். ஆனால் நான் எதையுமே நுகர முடியவில்லை. எனவே மலை என்ற ஒன்று இங்கு இருக்க வாய்ப்பே இல்லை என்றது.இவ்வாறு ஒவ்வொன்றும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டன. தங்கள் அனுபவத்திற்கு உள்ளே வராத ஒன்று இவ்வுலகில் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஐம்புலன்களும் சண்டையிட்டது போல தான் இன்று மனிதர்களில் பலர் செயல்படுகின்றனர்.
மனித வாழ்க்கையில் ஆழமான உயர்தரமான காரியங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றை அனுபவபூர்வமாக உணரும் தன்மை நம்மிடம் இல்லாததன் காரணமாக அவற்றை நாம் மறுக்கின்றோம். நிறைவான நிலையான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை சாத்தியமில்லை என்று எண்ணுகின்ற எண்ணத்திற்கு அடிப்படைக் காரணமே, நமக்குள் இருக்கக்கூடிய தாழ்வு மனப்பான்மை ஆகும்.
இத்தகைய தாழ்வு மனப்பான்மையிலிருந்து மாற்றம் பெற்று திறந்த மனம் கொண்டவர்களாக நம்மை நாம் இனம் கண்டு கொள்ளவும், நம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையை அழித்துவிடவும், அடுத்தவருடத்தில் தாழ்வு மனப்பான்மையை விதைப்பதை தவிர்த்திடவும், திறந்த மனம் கொண்டவர்களாக இயேசுவை பின் தொடர்வோம்.
"இயேசுவையே பின்தொடர நமக்கு தேவையானது திறந்த மனமமே..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக