ஆங்கிலேய பத்திரிகையாளர் ஒருவர் காந்திஜியை சந்தித்துப் பேசினார் . அவர் காந்தியடிகளை கிண்டல் செய்யும் எண்ணத்துடன் இந்திய மக்கள் ஏன் உங்களை பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டனர் . வேறு தலைவர்கள் அவர்களுக்கு கிடைக்க வில்லையா ? ' என்று கேட்டார் . காந்தியடிகள் சிரித்துக்கொண்டே ' உங்களை போன்றவர்களை சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத் திருக்கலாம் ' என்று பதிலடி கொடுத்தார் .
காந்திஜி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தை காண பன்னிரெண்டு வயது சிறுமி வந்திருந்தாள் . அவளுக்கு உட்கார இடம் கிடைக்காததால் மூன்று வயது நிரம்பிய தனது தம்பியை இடுப்பில் வைத்தபடி நின்று கொண்டு காந்திஜியின் பேச்சைக் கேட்டுக் கொண்டி ருந்தாள் . அதை கவனித்துவிட்ட காந்திஜி , அந்த சிறுமியிடம் , ' ஏம்மா , இந்தக் கனத்தை தூக்கிக்கொண்டு பொறுமையாக உன்னால் நிற்க முடிகிறதா ? ' என்று கேட்டார் . அதற்கு அந்த சிறுமி , கனமா இது . இது என் தம்பி . எப்படி அவன் கனமாகத் தெரிவான் ' என்றாள் . சிறுமியின் பதிலில் இருந்த அன்பின் பெருமையை உணர்ந்து வியந்தார் , காந்திஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக