புதன், 26 ஆகஸ்ட், 2020

"பயணம் இனிதாகட்டும்..."


"பயணம் இனிதாகட்டும்..."

ஒரு ஊரில் கல்லூரி மாணவர்களுக்கு போட்டி ஒன்று வைக்கப்பட்டது. ஒரு நிலத்தில் யார் நேராக வளைவு இல்லாத கோட்டை வரைய முடியும் என்பதுதான் அந்த போட்டி. எல்லோருமே வரைவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள். ஒரு மாணவனை தவிர மற்றவர்கள் அனைவரும் வரைந்த கோடுகள் வளைந்து நெளிந்து இருந்தன. அனைவரும் ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்துக் கேட்டார்கள். எப்படி உன்னால் மட்டும் நேராக வரைய முடிந்தது? என்று. அதற்கு அந்த மாணவன் சொன்னான், கோட்டை வரைகின்ற போது உங்களது பார்வை அனைத்தும் உங்கள் கால்களுக்கு அருகில் தான் இருந்தது. ஆனால் நானோ நிலத்தின் மறுபுறம் இருந்த ஒரு இலக்கின் மீது என் கவனத்தை பதிய வைத்து விழிப்போடு அதனைத்தொடர்ந்தேன். இதுவே என் கோடு நேராக வருவதற்கான காரணம் என்று கூறினான்.

மனித வாழ்வில் இலட்சியம் என்பது அவசியம். இலட்சியம் இல்லாத வாழ்வு குறிக்கோள் இல்லாத ஒரு பயணமாகும். வாழ்வில் இலட்சியம் வேண்டும்.  இலட்சியத்தை அடைய குறிக்கோள் அவசியமானது. குறிக்கோளை அடைவதற்கு விழிப்போடு இருத்தல் மிகவும் அவசியமாகும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பணியாளர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும்?  என்பது பற்றி கூறுகிறார்.  இலட்சியம் இல்லாத, குறிக்கோள் இல்லாத, விழிப்போடு செயல்படாத ஒரு பணியாளனால் என்ன விளைவுகள் ஏற்படும்? அதனால் அவனுக்கு வரும் துன்பங்கள் என்ன? என்பது பற்றி விழிப்பாய் இருக்க மறுத்த பணியாளர்களை பற்றி இயேசு இன்றைய நற்செய்தி வாசகங்கள் வழியாக நமக்கு உணர்த்துகிறார் . எனவே இன்றைய நாள் நற்செய்தி வாசகங்கள் வழியாக இவ்வுலகில் உள்ள அனைவரும் விழிப்போடு இருந்து இலட்சியத்தை நோக்கி பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

இன்று கொரனொ தொற்றுநோய் அச்சத்தின் காரணமாக அரசு கூட விழித்திரு....
 வீட்டிலிரு....
என்றுதான் முழங்குகின்றது.
வீட்டில் இருக்கக் கூடிய பணியாளர்கள், விழிப்போடு இருந்து வீட்டை காப்பது போல நமது வாழ்விலும் நாம் நமது வாழ்வின் இலட்சியத்தை மனதில் கொண்டு, அதை அடையும் குறிக்கோளை அனுதினமும் விழிப்போடு எதிர்கொண்டு வாழ்வில் இலட்சியத்தை அடைந்திட இறை அருளை நோக்கி ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிப்போம்.

 "பயணம் இனிதாகட்டும்..."

2 கருத்துகள்:

  1. கண்களும் இதயமும் விழித்திருந்து வழி நடந்தால் பயணம் இனிதாகும்! இன்றைய கருத்தும் கதையும் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  2. உறங்கும் போதும் கூட ஒரு கண் விழித்திருக்கட்டும்..

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...