வியாழன், 27 ஆகஸ்ட், 2020

"விழிப்போடு பயணிப்போம்"

"விழிப்போடு பயணிப்போம்" 

"எடுத்து வாசி" என்ற குரலைக் கேட்டு தன் தவறான வாழ்வை மாற்றி இறைவார்த்தை வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்ட புனித அகுஸ்தினார். இன்று திருஅவை அவரை நினைவு கூறுகிறது .

இன்றைய நற்செய்தி வாசகங்கள் நாம் விழிப்போடும், முன் மதியோடும் செயல்பட வேண்டும் என்பதை பத்து தோழியர் உவமை மூலம் இயேசு உணர்த்துகிறார்.

நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பென்சிலுக்கும் நம் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்று பென்சிலிடமிருந்து நாம் நம் வாழ்க்கைக்கான பாடத்தை புனித அகுஸ்தினார் மூலம் கற்கலாம்.

பென்சில் : இதற்குள்தான் அதனுடைய ஆற்றல் மறைந்திருக்கிறது.

அகுஸ்தினார் : நன்மையும் தீமையும் அவருக்குள் தான் மறைந்திருந்தன.

பென்சில் : வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை கூர்மைப்படுத்தி கொள்ள வேண்டும்.

அகுஸ்தினார் :  தீமையில் உழன்ற இவர் தன்னை இறைவார்த்தையின் அடிப்படையில் கூர்மைப்படுத்தியதன் விளைவாகத் தான் இன்று புனிதராக திகழ்கிறார்.

பென்சில் : அடுத்தவரின் கையில் இருக்கும் போது அது பயன்படுத்தப்படுகிறது.

அகுஸ்தினார் : ஆண்டவர் கையில் இருந்ததால் பலருக்கும் பயன்படக்கூடிய பல இறையியல் கருத்துகளை உருவாக்கக் கூடியவராக மாறினார்.

பென்சில் : தவறாக தனது தடத்தை பாதிக்கக்கூடாது. பதித்தால் அதை சரி செய்து கொள்ள இயலும் என்பதை உணரலாம்.

அகுஸ்தினார் : வாழ்வில் தவறிழைத்தவர் அதனை நாளடைவில் இறைவார்த்தை அடிப்படையில் சரி செய்து சரியான தடத்தை பதிித்தவர்.

புனித அகுஸ்தினாரைப் போல தவறு என்ற இருளில் வாழ்வை நாம் நகர்த்திக் கொண்டிருந்தாலும் இன்றைய நாளில் நற்செய்தி வாசகத்தின் வழியாக இயேசு விழிப்போடு இருக்க கூறுவதுபோல விழிப்போடு இருந்து, நமது வாழ்வை சரி செய்து கொள்ள இறைவனது அருளை நாடி  இயேசுவின் பாதையில் பயணிப்போம்...


"விழிப்போடு பயணிப்போம்" 


1 கருத்து:

  1. விழிப்புடன் பயணிப்போம் நம் வாழ்க்கை என்னும் பயணத்தில்..

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...