வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

"உங்களால் முடியாதது ஒன்றும் இராது..."

"உங்களால் முடியாதது ஒன்றும் இராது..."

அன்புக்குரியவர்களே இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"உங்களால் முடியாதது ஒன்றும் இராது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்..."  என்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் இன்றைய நாளில் நாம் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

"இந்த உலகில் நாம் முடியாது என எண்ணக்கூடிய ஒவ்வொன்றையும் எங்கோ யாரோ ஒருவர் செய்து கொண்டுதான் இருக்கிறார்" என அப்துல்கலாம் அவர்கள் கூறுகிறார்.

இந்த உலகில் எதையாவது மாற்ற வேண்டுமென்று விரும்பினால் "நீ விரும்பும் மாற்றத்தின் முதல் விதையாக நீ இரு" என்கிறார் காந்தியடிகள்.

இவ்வுலகில் மாற்றம் என்பது சாத்தியமே  அதற்கு அடிப்படையாக தேவையானது நம்பிக்கை.

 நம்பிக்கை என்ற ஒன்று இருக்கும் பொழுது நாம் எண்ணுவதை நம்மால் முறையாக சரியாக செய்து முடிக்க முடியும் .

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கடுகளவு நம்பிக்கை இருந்தால் இந்த மரத்தை பெயர்ந்து போய் கடலில் நீல் என்றால் அது அவ்வாறு நிகழும் என குறிப்பிடுகிறார். இவ்வார்த்தைகள் நாம் கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையை சீர்தூக்கிப் பார்க்க  அழைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இன்று நிலவக் கூடிய இந்த இக்கட்டான சூழ்நிலைகள் கடவுள் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கையை இழக்க கூடிய வகையில் அமைந்துள்ளன.  ஆனால் இத்தகைய சூழலில் நமது நம்பிக்கை ஆழமானதாகவும்,  வேரோட்டம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதைதான் இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. 

ஆண்டவர் இயேசுவின் மீது உறுதியான உண்மையான நம்பிக்கை கொண்டவர்களாக அந்த ஆண்டவர் இயேசுவினிடத்தில் காணப்பட்ட மனிதநேயக் செயல்களை, உண்மை சார்ந்த  செயல்களை, நீதி சார்ந்த செயல்களை நமது வாழ்விலும் செயலாக்கப்படுத்த நம்மால் முடியும் என்ற நம்பிக்கையோடு ஆண்டவர் இயேசுவை பின்செல்ல முயலுவோம்.


"உங்களால் முடியாதது ஒன்றும் இராது..."


1 கருத்து:

  1. இயேசுவோடு கரம் கோர்க்கும் போது நிச்சயம் எல்லாம் சிறப்பாகவே நிறைவேறும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...