"மாற்றம் அவசியமே..."
"நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் ..." என்ற இறைவார்த்தையின் அடிப்படையில் இன்றைய நாளில் நாம் அனைவரும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
விண்ணரசில் புகுவதற்கும் சிறு பிள்ளைகளைப் போல் மாறுவதற்கும் என்ன ஒப்புமை உள்ளது? என்ற கேள்வி இயல்பாகவே உள்ளத்தில் எழலாம் .
சிறு குழந்தைகள் மனதில் வஞ்சகம் இருக்காது. சிறு குழந்தைகள் இவ்வுலகத்தில் அனைத்தையும் பார்ப்பவர்களிடம் இருந்தே கற்றுக் கொள்கின்றன.
உதாரணமாக:
நமக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு உறவு சிக்கல்கள் தொடரும் பொழுது நாம் அதை நம் குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்துகிறோம். அந்த வீட்டிற்கு செல்லக்கூடாது, அங்கு இருப்பவர்களுடன் பேசக்கூடாது என குழந்தைகளுக்கு கற்பிப்போம். ஆனால் இயல்பாகவே குழந்தைகள் ஒருவரிடத்தில் சண்டையிட்டாலும், மனக்கசப்பு ஏற்பட்டாலும் சில நிமிடங்களில் அல்லது சில மணி நேரங்களில் தங்களை மறந்து இயல்பாக அவர்களிடத்தில் பேசவும், பழகவும் முயலுவார்கள்.
விண்ணரசில் புகுவதற்கு நாம் சிறு குழந்தைகளைப் போல் மாற வேண்டும். சிறு குழந்தைகள் எத்தகைய வஞ்சகமும் இல்லாமல் இயல்பாக இருப்பது போல நாமும்
பல நேரங்களில் வழிதவறிய ஆடுகளாக இருந்தாலும் அது தவறு என அறியும் போது நம்மை நாமே சரி செய்து கொண்டு நேர்வழியில் செல்ல கூடியவர்களாக வழி தவறாத ஆடுகளாக நாம் இருக்க வேண்டும்.
99 ஆடுகளை விட்டுவிட்டு வழிதவறிய 1 ஆட்டைத் தேடிச் செல்வது போல ஆண்டவர் இயேசு கிறிஸ்து நாம் வழிதவறிச் செல்ல கூடிய நேரங்களில் நம்மை தேடி வருகிறார். அவரின் தேடலை நாம் உணர்ந்தவர்களாக நம்மை நாம் சரி செய்து கொண்டு அவரை நோக்கித் திரும்பி விட வேண்டும். அவ்வாறு நாம் அவரை நோக்கித் திரும்பும் போது நம்மை குறித்து அவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
சிறு குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டாலும் சில நேரங்களில் சண்டையை மறந்து இயல்பாக மற்ற குழந்தைகளோடு உறவு கொள்வது போல நாமும் வழிதவறிய நேரங்களில் அது தவறு என்பதை அறிந்தவர்களாக நம்மை நாம் மாற்றிக் கொண்டு ஆண்டவர் இயேசுவின் பாதையில் பயணிக்க கூடியவர்களாக மாறும் பொழுது விண்ணரசில் நாம் புக முடிகிறது.
"என் பெயரால் சிறு குழந்தைகளை ஏற்றுக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவராக கருதப்படுவார்..." என்ற இயேசுவின் வார்த்தைகளை இவ்வாறு நாம் பொருள் கொள்ளலாம்.
ஒருவன் தவறு இளைத்தவன் என்பதற்காக அவன் எப்போதும் தவறு செய்வான் என கூறி அவனை ஒதுக்குவதை விட, அவனும் ஒரு நாள் மனம் திரும்புவான் ஆண்டவர் இயேசு காட்டக்கூடிய பாதையில் நல்ல ஒரு ஆடாக அவன் இருப்பான் என்ற நம்பிக்கையோடு அவனை நாம் ஏற்றுக் கொள்ளுதலே விண்ணரசில் மிகப் பெரியவர்களாக நாம் இருப்பதற்கான வழி இதையே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் விரும்புகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகில் பல நேரங்களில் நாம் அடுத்தவர்களை பற்றிய முன் சார்பு எண்ணங்களின் அடிப்படையில் அவர்கள் தவறிழைத்தவர்கள் எப்போதும் தவறாகவே இருப்பார்கள் என்ற எண்ணத்தோடு உறவை முறித்துக் கொள்கின்றோம். ஆனால் நான் கொண்டிருக்கக்கூடிய முன் சார்பு எண்ணங்களை எல்லாம் கலைந்து அடுத்தவரையும் ஆண்டவர் இயேசுவின் பிள்ளைகள் என்ற மனநிலையோடு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறும் பொழுது நாம் விண்ணரசியல் மிகப் பெரியவர்களாக கருதப்படுவோம்.
விண்ணரசில் புகுவதற்கும், விண்ணரசில் மிகப் பெரியவர்களாக மதிக்கப்படுவதற்கும் மாற்றம் அவசியமே...
விண்ணரசில் புகுவதற்கு நாம் சிறு பிள்ளைகளாக மாறவேண்டும்... விண்ணரசில் மிகப் பெரியவர்களாக மதிக்கப்பட முன்சார்பு எண்ணங்களை கலைந்து எல்லாரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல மனிதர்களாக நாம் மாற வேண்டும். இத்தகைய மாற்றம் கொண்டவர்களாக இச்சமூகத்தில் உருமாற இறையருளை வேண்டுவோம்.
"மாற்றம் அவசியமே..."
நமது முன் சார்பு எண்ணங்களை களைந்து அனைவரையும் ஆண்டவரின் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள முயற்சி செய்வோம்! நன்றி!
பதிலளிநீக்கு