"வார்த்தைகள் நம்பிக்கையோடு வாழ வழி காட்டுகின்றன ..."
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கடல்மீது நடந்து சென்றதையும், நம்பிக்கையற்ற தம் சீடர்களுக்கு நம்பிக்கையோடு வாழ ஊக்கம் தருவதையும், நம்பிக்கையோடு அவரைத்தேடி வந்தவர்களும், அவரை தொட்டவர்களும் குணம் பெறக்கூடிய நிகழ்வை நாம் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம்...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு "ஆண்டவரே என்னை காப்பாற்றும்..." என அழைக்கும் ஓசைதான் இன்று இந்த உலகில் உள்ள அனைவருடைய மனதிலும் எழும்பி கொண்டிருக்க கூடிய அழைப்பு ஒலியாகும்.
இன்று கொரோனா தொற்று காரணமாக கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ் தாக்கத்தால் மக்கள் நம்பிக்கையை இழந்து அனுதினமும் "ஆண்டவரே என்னை காப்பாற்றும்..." என்று கதரக்கூடிய சூழல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நம்பிக்கை இழந்த மக்களுக்கு நம்பிக்கையை தருவதுதான் இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக கடவுள் நமக்கு கொடுக்கக்கூடிய செய்தியாக அமைகிறது.
தனித்திரு விழித்திரு என அரசு கூறினாலும், பலவிதமான முயற்சிகளை அரசு மேற்கொண்டு இந்த கொரோனா தோற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை நீக்க முயற்சித்தாலும், விழிப்போடு இருந்து கோரோனா தொற்று காரணமாக தனிமையில் வாடக் கூடியவர்களின் துயர் நீக்கக்கூடிய வகையில் நமது ஆறுதலான, அன்பான வார்த்தைகளால் அவர்களுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டியது இன்று நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
அன்று கடலில் மூழ்கி கொண்டிருந்த பேதுரு ஆண்டவரே என்னை காப்பாற்றும் என அழைத்தபோது அழைப்பிற்கு குரல் கொடுத்தவராய் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன் கையை நீட்டி அவரைத் தூக்குகிறார்.
இன்று தனிமையில், நோயின் தாக்கத்தினால் தங்களுக்குள்ளேயே வருந்தி கொண்டிருக்கக்கூடியவர்களின் துயரத்தை நீக்கும் வகையில் ஆறுதலான வார்த்தைகளால் அவர்கள் ஒவ்வொருவரையும் நம்பிக்கையோடு மீண்டும் இச்சமூகத்தில் தூக்கி விட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
அன்று நம்பிக்கை இழந்திருந்த சீடர்களுக்கு ஆண்டவர் இயேசுகிறிஸ்து நம்பிக்கையை கொடுத்தது போல, நாமும் இன்று நோய் தொற்று காரணமாக தனிமையில் வாட கொடிய நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் நமது வார்த்தைகளால் நம்பிக்கையை வழங்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
வார்த்தைகள் மட்டும் எப்படி ஒரு மனிதனுக்கு நம்பிக்கையைத் தரும்...? என்ற கேள்வி உள்ளத்தில் எழுந்தாலும், அன்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை தேடிச் சென்று அவரின் ஆடையை தொட்டால் போதும் நாங்கள் குணம் அடைவோம் என்ற நம்பிக்கையோடு அவரை தொட்டு குணம் பெற்ற மக்களை போல, நமது வார்த்தைகள் அடுத்தவருக்கு ஆறுதலையும், புத்துணர்வு பெற்றவர்களாக இச்சமூகத்தில் புதுப் பிறப்பு அடைந்து வாழ தூண்டும், மேலும் துன்புற கூடிய ஒவ்வொரு மக்களுக்கும் ஆறுதலான அன்பான வார்த்தைகள் வாழ்வு தரும் என்ற நம்பிக்கையோடு .... கொரோனா தொற்றுநோய் காரணமாகவும், மேலும் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழக்கூடிய மக்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளை பகிரக் கூடிய இயேசுவின் உண்மையான சீடர்களாக வாழ இன்றைய நாளில் உறுதி ஏற்று செயல்படுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக