"இயேசுவை முதன்மையானவராக கொள்வோம்..."
அன்புக்குரியவர்களே இந்த இறைவார்த்தையின் அடிப்படையில் என் சின்னங்களை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய இறைவார்த்தை பகுதியின் துவக்கத்தில் இயேசுவை சுற்றி மக்கள் கூட்டமும், அவருடைய சீடர்கள் கூட்டமும் இருந்தது. இயேசுவின் வார்த்தைகளை கேட்கவும், அவரிடமிருந்து உடல் சுகம் பெறவும் வந்த மக்களும், மற்றும் அவருடைய சீடர்களும், இயேசுவின் வல்லமையால் பலுகிய அப்பங்களை உண்டு, உடலும் உள்ளமும் நிறைவு பெற்றவர்களாக, இயேசுவை புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் ஆண்டவர் இயேசுவோ மக்களின் புகழ்ச்சி களுக்குள் தன்னை புதைத்து விடாமல் இறை தந்தையின் மீது ஏக்கம் கொண்டவராக இறை தந்தையிடம் ஜெபிப்பதில் ஆர்வம் கொண்டவராக மக்களையும் சீடர்களையும் அனுப்பி விடுகின்றார்.
இறைவனிடம் தனியே ஜெபிக்கின்றார். இறை உறவில் இறை வல்லமையில் தன்னை புதுப்பித்துக் கொள்கின்றார்.
இறை வல்லமையால் நிறைவு பெற்றவராக நடுக்கடலில் தவித்துக்கொண்டிருக்கும் தன்னுடைய சீடர்களை நோக்கி செல்கின்றார். "நான்தான் அஞ்சாதீர்கள்..." என்று கூறுகிறார். அப்போது கடல் மீது நடந்து வருபவர் நீர் தான் என்றால் நானும் உம்மை போல கடல்மீது நடந்து வர கட்டளையிடும் என்று பேதுரு கூறுகின்ற பொழுது, "வா" என்று என்கிறார். இயேசுவை நோக்கிப் இறை வல்லமையால் நிரப்பப்பட்டவராக பேதுரு கடல் மீது நடக்கிறார். ஆனால் அவரது காலடியில் இருக்கும் கடலின் ஈர்ப்புகளை ( உலகின் ஈர்ப்புகளை ) நோக்கி திரும்பும் பொழுது அவற்றிலே வீழ்ந்து விடுகின்றார்.
இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் நம்மை படைத்தவரை முன்னிறுத்தி, அவரது இறையரசை முன்னிறுத்தி, அவரது வல்லமையில் நிறைவுபெற ஏக்கம் கொள்ளும் பொழுது, இறைவனும் நம்மை கரம்பிடித்து "வா" என்று சொல்லுவார்.
இன்றைய நாட்களில் பல்வேறு இடர்பாடுகள், பொருளாதார நெருக்கடிகள் போன்றவற்றால் நாம் சூழப்படும் பொழுது, "அசையாத நம்பிக்கை கொண்டவர்களாக..." இறைவனை மட்டுமே ஏரெடுத்து அவரது குரலுக்கு செவி கொடுத்து அவர் பின் செல்வோம்.
படைத்தவரின் பராமரிப்பிற்கு நம்மை கையளித்தவர்களாக அவரை முதன்மையானவராக கொண்டு வாழ இறையருள் வேண்டுவோம்.
"இயேசுவை முதன்மையானவராக கொள்வோம்..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக