"துன்பம் கண்டு துயரம் வேண்டாம் ..."
இயேசுவில் அன்புக்குரியவர்களே !
காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இன்றைய நாளில் நமது புனித திருமுழுக்கு யோவானின் பாடுகளையும், இறப்பினையும் நாம் நினைவு கூறுகிறோம்.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் சராசரி மனிதனாக வாழ்வது சாதாரண வாழ்வு. ஆனால் தன்னிலை உணர்ந்து எல்லோரையும் மதித்து வாழ்வது தெய்வீக வாழ்வு.
ஒவ்வொருவரும் தனது வாழ்வின் நிலையில் தனக்கு விருப்பமான நலன்களை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் யார் துன்புற்றாலும், அல்லது துன்புறுத்தப்பட்டாலும் அதில் சிறிதேனும் அக்கறை காட்டாது தனது சுய விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றி வாழ்வது இழிவான வாழ்வு.
இன்றைய வாசகத்தில் ஏரோதியாள் அரச குடும்பத்தின் உறுப்பினராக இருந்தாலும் மக்களை காப்பாற்றும் அரச குடும்பத்தின் பண்பு எதுவும் அவளிடம் இல்லை.
அவளின் தந்திரம் மிகுந்த சுயநல வாழ்வு, புனித திருமுழுக்கு யோவானின் உயிரை பலி வாங்கியது. ஆனால் புனித திருமுழுக்கு யோவான் தன்னிலை உணர்ந்து, தன்னையும் பிறரையும் நேர்மையின் பாதையில் வழி நடத்தினார். பிறரின் வாழ்வில் அக்கறை கொண்டார். திருமுழுக்கின் வழியாக பாவ மன்னிப்பு பெற்று மக்கள் அனைவரும் நேர்மையின் பாதையில் நடந்திட வழிகாட்டிய புனித திருமுழுக்கு யோவான் இன்றைய இறைவார்த்தையின் வழியாக அவர் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிகிறோம்.
இன்றைய நாளில் நாமும் புனித திருமுழுக்கு யோவானைப் போல நமது துன்பங்களிலும் நேர்மையைக் கடைப்பிடிக்க உண்மையின் வழி நடக்க நம்மை நாமே உறுதிப்படுத்துவோம்!
"துன்பம் கண்டு துயரம் வேண்டாம் ..."
நமது துன்பத்தில் இறைவன் நம்மோடு உடன் இருப்பார்! அவருக்காக நாம் துன்புறும் போது அவரது ஆசிர் என்றும் நமக்கு உண்டு!
பதிலளிநீக்கு