இறைவனிடத்தில் ஒருவன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் எனக்குத் தாரும் என வேண்டினான்.
அவனிடம் கடவுள் இவ்வுலகில் உள்ள அனைத்திலும் மகிழ்ச்சியை காண்பதற்காகவே உனக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளேன். இதைவிட மேலாக உனக்கு என்ன வேண்டும்? என்றார்.
உடனே அந்த மனிதன் உம்மை போல எல்லாவற்றையும் அன்பு செய்யும் வரத்தையாவது எனக்குத் தாரும் என்றான்.
கடவுள் அவனிடம் வாழ்க்கையையும், மனிதர்களையும் அணுகுவதற்கான கொடை அன்பு. அதை உனக்கு நான் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறினாராம்.
இவ்வுலக வாழ்க்கையில் அன்பு செய்து வாழ இறைவன் நம்மை அழைக்கின்றார். அந்த அன்பின் வெளிப்பாடே அன்னை மரியாவின் வழியாக இயேசு மண்ணில் பிறக்கின்றர்.
இயேசுவின் பிறப்பு மரியாவுக்குத் அறிவிக்கப்பட்டபோது மரியா அச்ச உணர்வு பல கேள்விகளை எழுப்பினால். ஆனால் கடவுளின் தூதர் தொடக்கத்திலேயே மரியாவிடம் "அருள்நிறை பெற்றவரே வாழ்க கடவுள் உம்மோடு..." என்றார். இதுவே இறைவன் இன்று நமக்குத் தரும் செய்தியாக அமைகிறது.
1989 ஆம் ஆண்டு சீனாவை ஆண்ட கம்யூனிச அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் தியானன்மன் சதுக்கம் என்ற இடத்தில் ஒன்று கூடினர் . மாணவர்களின் பேரியக்கத்தை ஒடுக்க அரசு தன் இரும்பு கரத்தை பயன்படுத்தியது. கொடூரமாக மனிதநேயமற்ற முறையில் அவர்களை தாக்கியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புல்டேசர்களின் சக்கரங்களால் ஏற்றிக் கொள்ளப்பட்டனர். பலர் கொடூரமாக காயமுற்றனர். சீனா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமே இச்செயலைக் கண்டு திகைத்தது. இப்படிப்பட்ட கோர நிகழ்ச்சிகளைக் கண்ட போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற பல்கலைக் கழக மாணவர்கள் பயந்துபோய் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி விடவில்லை. தங்கள் நண்பர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு துக்கம் அடைந்தாலும், அவர்கள் சோர்ந்து போய்விடவில்லை. தாங்கள் வீட்டுக்குச் செல்ல மறுத்து விட்டனர். இப்படிப்பட்ட நேரத்தில் அந்தப் போராட்டத்தின் தலைவர் சதுக்கத்தின் நடுவில் இருந்த மாணவர்களுக்கிடையே நின்று பேச ஆரம்பித்தார்.
உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன் ஒரு காடு தீப்பிடித்துக் கொண்டது. அப்போது காட்டின் ஒரு பகுதியில் வசித்த எறும்புகள் தங்களின் ஒட்டுமொத்த இனத்துக்குமே அபாயம் காத்திருப்பதை உணர்ந்தன. விரைந்து செயல்பட வேண்டிய நேரம் அது. எனவே தங்கள் தலைவரின் தலைமையில் ஒன்று கூடின. அப்போது ஒரு வயதான ஞானமிக்க எறும்பு பேசியது ஆபத்து நம்மை சூழ்ந்துள்ள நேரம் இது. நமக்கு முன்னே இரண்டே இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று தனித்தனியாக தீயை அணைக்க எதிர்கொள்வது. அப்படி செய்தால் அனைவருமே அழிந்து போவோம். இரண்டு நாம் அனைவரும் மிக நெருக்கமாக ஒன்று கூடி ஒரு பந்தைப் போலாகிக் கொண்டு நெருப்பை எதிர்கொள்வது. நெருப்பு நம்மை தாக்கும் போது வெளியில் உள்ளவர்கள் மட்டும் சாவார்கள் உள்ளே இருப்பவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். இதைக் கேட்ட மற்ற எறும்புகள் இரண்டாவது யோசனையை செயல்படுத்தின என்றான். இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்கள் ஒன்றுகூடி சிலரின் தியாகத்தில் பலரும் உயிர் பிழைத்தனர்.
இன்று நாம் வாழக்கூடிய இச்சமூகத்தில் தியாகம் புரிய முன் வருவோரின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். எந்த ஒரு சமூகத்தில் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தங்களை காத்துக்கொள்ள முயற்சிக்கின்ற நபர்கள் அதிகமாக இருக்கின்றார்களோ அச்சமூகம் அழிவதை யாரும் தடுத்து நிறுத்த இயலாது என்பார்கள்.
அன்று அன்னை மரியா வாழ்ந்த சூழலில் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் கருவுற்றால் அப்பெண்ணுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகளை அறிந்திருந்தும் மனுக்குலத்தின் மீது கொண்டிருந்த அன்பின் அடிப்படையில், இயேசுவை தன் வயிற்றில் சுமக்க முன்வந்த தியாகத்தாய் அன்னை மரியாவைப் போல தியாகம் கொண்ட வாழ்வாக நமது வாழ்வும் மாற வேண்டும்.
இன்று கோரோனோ தொற்றுநோய் காரணமாக அச்ச உணர்வால் தடுமாறும் நம்மிடையே தியாக உணர்வு அடியோடு அழிந்து வருகிறது.
சமீபத்தில் கேரளாவில் உள்ள வெள்ளிமலை பகுதியில் வசித்து வரக்கூடிய மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பாஸ்கரன் என்பவருடைய குடும்பத்தில்
சொந்தக் கணவரையே அச்ச உணர்வால் வீட்டுக்குள் ஏற்க மறுத்த மனைவி பிள்ளைகளின் செயல்பாட்டை செய்திகள் வழியாக நாம் அறிந்திருக்கலாம்.
இன்று நாளுக்கு நாள் நம்மிடமிருந்து மறைந்து வரக்கூடிய தியாக உணர்வை இனம் கண்டுகொள்ள அன்னை மரியாவின் வாழ்வு நமக்கு உதவியாக உள்ளது.
இயேசு இம்மண்ணில் மலர்ந்து தியாகத்தால் இன்று பல இடங்களில் மனம் பரப்பி திகழ்வது போல... நமது வாழ்வையும் தியாகத்தால் அடுத்தவர் நலனுக்கென அர்ப்பணிக்க அன்னை மரியாவை முன்னுதாரணமாகக் கொண்டு பயணிப்போம்... அப்போது அன்னை மரியாவிடம் கூறியதுபோல வானதூதர்கள் நம்மிடமும் கூறுவார்கள் "ஆண்டவர் உ(ந)ம்மோடு இருக்கிறார்..." என்று.
ஆண்டவர் நம்மோடு இன்றும் இருக்கிறார்! இன்றைய கருத்துகள் மிகவும் அருமை! உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது!
பதிலளிநீக்குஆண்டவர் உ(ந)ம்மோடு...
பதிலளிநீக்குGod is with us
பதிலளிநீக்கு