இரக்கமுடைய பணியாளராவோம்...
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மன்னிக்க மறுத்தை பணியாளர் உவமை குறித்து இயேசு கூறுவதை நாம் வாசிக்கலாம்.
இன்றைய வாசகங்கள் வழியாக நாம் அனைவரும் இரக்கம் காட்டுவதற்கு அழைக்கப்படுகிறோம்.
நாம் வாழக்கூடிய இந்த உலகில் அனுதினமும் இறைவன் பலவிதமான சூழல்களில் நம்மீது இரக்கம் கொண்டு நம்மை காத்து, பராமரித்து, வழிநடத்தி வருகிறார். இறைவன் நம்மை அனுதினமும் காத்து பராமரித்து வருவது போல நாமும் அனுதினமும் அடுத்தவர்களை காக்கவும், பராமரிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இன்று நாம் வாழக்கூடிய உலகில் பல நேரங்களில் நாம் கடவுளுக்கு எதிராகவும், மனிதருக்கு எதிராகவும் பலவிதமான தீங்குகளை இழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அச்சூழ்நிலைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் கடவுள் நம்மை மன்னித்து தனது பிள்ளைகளாக்கிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறோம் என்று சொல்லக்கூடிய நாம் ஒவ்வொருவரும் பல நேரங்களில் நமக்கு எதிராக யாரேனும் ஒருவர் தவறிழைக்கும் போது அதனை சரி செய்து கொள்ளக் கூடியவர்களாகவும், அவர்களை மன்னிக்க கூடியவர்களாகவும் இருக்க மறுக்கிறோம்.
இந்நிலை இன்றும் நம்மிடத்தில் தொடர்ந்து கொண்டே இருக்குமாயின் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இடம்பெற்ற அந்த மன்னிக்க மறுத்து பணியாளனாக தான் நாமும் இருப்போம். இறைவன் நம்மை மன்னிப்பது போல் நாம் அடுத்தவர்களை மன்னித்து மனநிறைவோடு மனமகிழ்வோடு அடுத்தவரை ஏற்றுக்கொண்டு அன்பு செய்து வாழ இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
நாம் அனுதினமும் பயன்படுத்தக்கூடிய விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்று ஜெபத்தில் கூட "நாங்கள் பிறருடைய குற்றங்களை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்..." என வேண்டுகிறோம். நாம் அடுத்தவர் குற்றத்தை மன்னிக்காமல் நம் குற்றத்தை இறைவன் மன்னிக்க வேண்டும் என எண்ணும் போது, கண்டிப்பாக நமது குற்றங்கள் மன்னிக்கப்பட மாட்டாது. எனவே நாம் அடுத்தவருடைய குற்றங்களை மன்னிக்கவும், அதன்வழி இறைவன் நம் குற்றங்களை மன்னிக்கவும் இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இரக்கம் கொண்ட நல்ல பணியாளர்களாக ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்லவோம்...
இரக்கமுடைய பணியாளராவோம்...
இயேசுவைப் போல பிறரை மன்னித்து வாழ நமக்கு மிகுந்த இரக்கமும் மனத் துணிவும் வேண்டும்! இந்த அருளுக்காக இறைவனிடம் தினமும் ஜெபிப்போம்! நமது வாழ்க்கையிலும் செயல்படுத்துவோம்! நன்றி!
பதிலளிநீக்கு