சனி, 15 ஆகஸ்ட், 2020

நம்பிக்கைக்குரிய சீடராவோம் ...

நம்பிக்கைக்குரிய சீடராவோம் ...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய  நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் ... என்ற கானானிய பெண்ணிடம் காணப்பட்ட நம்பிக்கை இன்று கொரோனா தொற்றுநோய் காரணமாக அச்சத்தில் வாழக்கூடிய ஒவ்வொருவருடைய மனங்களில் இருக்க வேண்டும் என்பது இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு வழங்கும் செய்தியாக உள்ளது.

கானானியப் பெண் இயேசுவை நோக்கி தன் மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கதரலைக் கேட்ட சீடர்கள் இவளை அனுப்பிவிடும் என்று இயேசுவிடம் பரிந்து பேசினார்கள். ஆனால் இயேசுவோ அந்தப் பெண்ணை நிராகரிப்பது போல பேசினார். இருந்த போதும் அந்தப் பெண் தன்னை நாய்க்கு இணையாக தாழ்த்தி ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று மீண்டும் வேண்டினால். அவளின் நம்பிக்கையை கண்டு அவளுக்கு அவள் வேண்டியதை கொடுத்தார் இயேசு.

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகிலும் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக இரத்த உறவுகள் கூட அருகில் வருவதற்கு அஞ்சக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இச்சூழலில் கானானிய பெண்ணிடத்தில் காணப்பட்ட நம்பிக்கை நம் ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தேவையாகும்.

கானானியப் பெண்ணின் கதறலை கண்டு அவள் மீது மனமிரங்கிய சீடர்களை போல கொரோனா தொற்றுநோய் காரணமாக நம்பிக்கை இழந்து இருக்க கூடியவர்களுக்கு ஆறுதல் தர கூடியவர்களாக நாம் உருவாக வேண்டும்.

அருகில் உள்ளவர்களின் துயரத்தைக் கண்டு அவர்களின் துயரத்தை துடைப்பதற்கு நம்மாலான முயற்சிகளை செய்யவும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக அச்ச உணர்வால் வருந்தக்கக்கூடிய ஒவ்வொரு மனங்களும் நம்பிக்கையோடு ஆண்டவர் இயேசுவை நாடவும் இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

கானானிய பெண்ணிடத்தில் காணப்பட்ட நம்பிக்கையை நமது உள்ளத்தில் விதைத்தவர்களாக, அடுத்தவர்களின் துயரத்தைக் கண்டு அதை ஆண்டவரிடத்தில் எடுத்துரைத்து அவர்கள் நலமடைய அவர்களுக்காகப் பரிந்து பேசக்கூடிய உண்மை சீடர்களாக நாம் ஒவ்வொருவரும் உருமாற இறைவனது அருளை வேண்டி இன்றைய நாளில் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்பதை செயலால் வெளிப்படுத்த முயலுவோம்.

நம்பிக்கைக்குரிய சீடராவோம் ...

1 கருத்து:

  1. பணம் நகை என்று எந்த கை நம்மை விட்டு சென்றாலும் நம்பிக்கையை மட்டும் விடாது பற்றிக் கொள்வோம்! நமது நம்பிக்கையே இறையருளை நமக்கு பெற்று தரும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...