வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

நமது தேசத்தின் அடையாளம் , தேசியக்கொடி


நமது தேசத்தின் அடையாளம் , தேசியக்கொடி


ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட இந்திய மக்களுக்கு தேசியக்கொடி தேவைப்பட்டது . சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா 1904 - ம் ஆண்டு ஒரு கொடியை உருவாக்கினார் . அது சிவப்பு வண்ணத்தில் சதுரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது . உள்ளே மஞ்சள் நிறமாகவும் , வஜ்ர மற்றும் வெள்ளை தாமரையை நடுவில் கொண்டும் அமைக்கப்பட்டது . அந்த கொடியில் வங்க மொழியில் வந்தே மாதரம் ' என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது . சிவப்பு நிறம் சுதந்திரப்போராட்டத்தையும் , மஞ்சள் நிறம் வெற்றியை யும் , வெள்ளை நிறம் தூய்மையையும் குறிப்பதாக விளக்கப்பட்டது . 


இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் , கொல்கத்தாவில் 1906 ஆகஸ்டு 7 - ந்தேதி நடைபெற்றவங்கப்பிரிவினை எதிர்ப்பு போராட்டத் தின்போது ஆரஞ்சு , மஞ்சள் , பச்சை போன்ற 3 வர்ண பாகங்களை கொண்ட மூவர்ணக்கொடி சிந்திரபிரசாத் போஸ் என்பவரால் ஏற்றப் பட்டது . அதிலும் ' வந்தே மாதரம் ' இடம்பெற்றிருந்தது . 


அடுத்து 1907 ஆகஸ்டு 22 - ந்தேதி பைக்கஜி காமா அம்மையார் வேறொரு மூவர்ணக்கொடியை ஜெர்மனி , ஸ்டுட்கார்ட் நகரில் ஏற்றி னார் . அந்த கொடியினை அவரோடு சேர்ந்து வீரசவர்க்கார் , சியாம்ஜி , கிருஷ்ணவர்மா ஆகியோர் வடிவமைத்து இருந்தனர் . 


1917 - ல் பாலகங்காதர திலகரும் , அன்னிபெசன்ட் அம்மை யாரும் தொடங்கிய சுயாட்சி போராட்டத்தில் 5 சிவப்பு நிற நீள் வடிவங்களும் , நான்கு பச்சை நிற நேர் கோல் நீள வடிவங்களும் கொண்டு , இந்துக்கள் புனிதமாக கருதும் சப்தரிஷி நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பயன்படுத்தப்பட்டது . 


பின்பு இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவானதொரு கொடியை வடிவமைக்க ஆந்திராவை சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா என்பவர் முயற்சி மேற்கொண்டார் . சிவப்பு , பச்சை நிற கொடியை உருவாக்கி மகாத்மாவிடம் காண்பித்தார் . மகாத்மா அதில் முன்னேற்றத்தினை குறிக்கும் வகையில் சக்கரத்தினையும் , வெள்ளை நிறத்தையும் சேர்க்கும்படி வலியுறுத்தினார் . 


அதன்பிறகு வெள்ளை நிறமில்லாமல் சக்கரத்துடன் உள்ள சிவப்பு , பச்சை இரண்டு நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டது . அதனை காந்தி ஏற்காததினால் வெள்ளை , பச்சை , சிவப்பு என்ற வரிசையில் வர்ணங்கள் வைக்கப்பட்டு ஒவ்வொரு வர்ணத்திலும் சக்கரம் இருப் பதாக வடிவமைக்கப்பட்டது . இந்த கொடியும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . அதை தொடர்ந்தும் பல்வேறு கட்டங்களாக பல்வேறு மாற்றங்கள் கொடியில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்தன . 


1947 ஜூன் 23 - ந் தேதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் மவுலானா அபுல்கலாம் ஆசாத் , கே.எம்.பணிக்கர் , சரோஜினி நாயுடு , சி.ராஜகோபாலச்சாரியார் , கே.எம்.முன்ஷி , பி.ஆர் . அம்பேத்கர் ஆகியோரை கொண்ட குழு தேசியக்கொடியை உருவாக்குவது பற்றி விவாதித்தது . தேசியக்கொடியில் எந்தவித மத சாயலும் இருக்கக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டது . 



இந்திய தேசியக்கொடி 1947 ஜூலை 22 - ந் தேதி தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது . நீள் சதுர வடிவில் உள்ள இந்த கொடி மேலி ருந்து கீழாக சிவப்பு , வெள்ளை , பச்சை என்று 3 வண்ணங்களுடன் , நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்களை கொண்ட அசோகச் சக்கரத்துடன் உள்ளது . 



1951 - ல் இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக் கொடிக்கு அளவு முறை நிர்ணயிக்கப்பட்டது . கொடியின் நீளம் , அகலம் , நிறங்களின் அளவு , அடர்த்தி , பரப்பளவு , துணியின் தரம் , கொடிக்கயிற்றின் தரம் ஆகியவற்றை அது விவரிக்கின்றது . 


கொடி தயாரிப்பதில் விதிகளை மீறுவது மிகப்பெரிய குற்ற மாகும் . தேசியக்கொடியை பயன்படுத்துவதற்கும் சட்ட விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...