செவ்வாய், 16 மார்ச், 2021

இணைந்திருப்போம் ... (17.3.2021)

இணைந்திருப்போம் ...


இறைவனோடு என்றும் இணைந்து வாழும் இதயங்களே...! வணக்கம்.
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
நான் உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருக்க விரும்பவில்லை உலகே என்னும் வகையில் உயர்ந்து நிற்க விரும்புகின்றேன்...

என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தன்னுடைய வார்த்தைகளாலும் அதன் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டதாலும் உலகமே வியந்து பார்க்கும் வகையில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் தன் இன்னுயிரை இழந்த இயேசுவின் வாழ்வு இன்று நமக்கு கற்றுத் தருகின்ற பாடம் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் இறைவனோடு இணைந்து இருங்கள். அதுவே உங்கள் வாழ்வுக்கு வலிமையை தரும் என்கின்ற செய்தியை  இறைவன் நமக்குத் தருகிறார். இறைவனோடு இணைந்திருந்த இயேசுவின் செயல்பாடுகள் அவரை இன்றும் வியந்து நோக்க வைத்துள்ளது. நாமும் அவரைப்போல் ஆவதற்கு அழைக்கப்படுகின்றோம்.

ஆபிரகாம் லிங்கனை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் கூறினார். குரங்கை பார்த்திராதவன் ஆபிரகாம் லிங்கனை பாருங்கள். இரண்டும் ஒன்றுதான் என்றார். ஆனால் ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்த எதிராக பேசிய வரை தம் அமைச்சரவையில் பதவி கொடுத்து அமர வைத்தார். ஆபிரகாம் லிங்கனின் இறப்பில் அந்த நபர் கூறினார்... என் வாழ்வில் இவரை போல் ஒருவரை நான் கண்டதில்லை என்றார். 
மண்ணில் வாழக்கூடிய மனிதர்கள் எல்லாம் இவரை போல வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இறைவன் மண்ணில் வாழ்ந்த போது தன்னை சிலுவையில் அறைந்தவர்களை  நினைவில் கொண்டு ஆண்டவரே இவர்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் எனக்கூறி இறக்கும் வேளையிலும் இன்னல் செய்தவரை மன்னித்தார் இயேசு.  இது தந்தையோடு அவர் இணைந்து இருந்தமையால் செய்ததாகும்.  இயேசு இம்மண்ணில் வாழ்ந்த போது பலவிதமான அருள் அடையாளங்களையும் வல்ல செயல்களையும் செய்தார்.இவையனைத்தும் இறைவனோடு அவருடன் இருந்தமையால் நிகழ்ந்தவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே... நாமும் நாம் வாழும் உலகில் தந்தையாம் இறைவனை பற்றி பேசுவதைவிட இறைவனோடு இணைந்து வாழ அழைக்கப்படுகிறோம். எல்லா சூழலிலும் அவரோடு இணைந்து இருக்கும்போது நாம் மனிதர்களாக அல்ல இம்மண்ணில் புனிதர்களாக விளங்குவோம். நாம் வாழும் உலகில் எல்லா சூழலிலும் எல்லா நேரத்திலும் நம்மோடு என்றும் எப்போதும் விலகாமல் இருப்பது இறைவன் ஒருவரே. அவரை இறுக பிடித்துக் கொள்வோம்.  எப்படி எசயா இறைவாக்கினர் பலவிதமான துன்பங்களுக்கு மத்தியிலும்  இறைவனோடு இணைந்திருந்தார் அவரையும் இயேசுவையும் மனதில் நிறுத்தி...  இன்று நாள் முதல் நாம் இறையாட்சி சமுதாயம்  இம்மண்ணில் மலரச் செய்வோம். அதற்கு நமது செயல்பாடுகளில் மாற்றம் தேவை... அத்தகைய மாற்றத்திற்காக நாம் இறைவனோடு இணைந்தாக வேண்டும். இறைவனோடு இணைந்து இருப்போம் எல்லா சூழ்நிலையிலும்
அதன்வழி புதிய  இறையாட்சியின் சமுதாயத்தை இம்மண்ணில் மலரச் செய்வோம்...

1 கருத்து:

  1. நமது இணைப்பு எங்கு உள்ளதோ அதைப் பொறுத்தே நமது வாழ்வும் அமைந்திருக்கும் என்று கூறி ஆண்டவரில் நாம் இணைந்திட அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகளும்! செபங்களும்! தங்களின் படங்கள் மிகவும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...