ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

இறைவார்த்தையை துணிவுடன் எடுத்துச் சொல்வோம்... (12.04.2021)

இறைவார்த்தையை துணிவுடன் எடுத்துச் சொல்வோம்... 


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 இன்றைய வாசகங்கள் அனைத்துமே நாம் இறைவார்த்தையை துணிவுடன் எடுத்துச் சொல்ல அழைப்பு தருகின்றன. இதனையே இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கின்றோம்.  இறைவார்த்தையை துணிவோடு எடுத்துரைக்க நாம் தூய ஆவியால் புதுப்பிறப்பு அடையவேண்டும் என்ற செய்தியினைத் தான் இயேசு நிக்கொதேம் வழியாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடுகிறார். நாம் வாழும் இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல், நம் பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு செயல்பட அழைக்கப்படுகிறோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே மகத்துவம் வாய்ந்தவர்கள்.  நாம் பயன்படுத்தும் சொற்கள் அடுத்தவருக்கு வாழ்வுக்கும் அடுத்தவரின் வளர்ச்சிக்கும் உதவக் கூடியதாக இருக்க வேண்டும்.  இதற்கு நாம் இறைவார்த்தையை அறிவிக்க வேண்டும். எந்த வார்த்தைகளெல்லாம் அடுத்தவருக்கு ஆறுதலையும் புத்துணர்வையும் நம்பிக்கையையும் தருகின்றதோ அவை அனைத்துமே இறைவனது வார்த்தைகள் தான். இந்த இறைவார்த்தையை எடுத்துரைக்க நமக்கு துணிவு அவசியமாகிறது. துணிவோடு இறைவார்த்தையை அறிவிக்க நாம் அனைவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  
மனிதனாக பிறந்த நாம் ஒவ்வொருவருமே இறைவார்த்தையை ஒவ்வொரு நாளும் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்க தூய ஆவியானவரால் புது பிறப்பு அடைவோம். தூய ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட இயேசுவின் சீடர்கள், இயேசுவின் இறப்புக்கும் உயிர்ப்புக்கும் சாட்சிகளாய் திகழ்ந்தது போல, நாமும் ஒருவர் மற்றவரோடு இணைந்து சமூகத்தில்  இறைவார்த்தைகள் வழியாக நாம் அனைவருமே ஆண்டவர் இயேசுவின் சீடர்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் துணிச்சல் பெற்றவர்களாக துணிவோடு இறைவார்த்தையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். இறைவனது வார்த்தைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை. இந்த வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவரை வாழ்விக்கவும் அடுத்தவர் வாழ்வுக்கு வழிகாட்டவும், அடுத்தவருக்கு நம்பிக்கையை கொடுக்கவும் நாம் இன்றைய நாளில் முன்வர வேண்டும். நாம் வாழும் இந்த உலகத்தில் ஆறுதல் இன்றி கவனிப்பாரின்றி தவிக்கக்கூடிய மனிதர்களை காணும் போது அவர்களிடம் ஆறுதலான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வோம். இச்சமூகத்தில் எங்கேனும் அநீதி இழைக்கப்படும்  போது, அதை நாம்  அறியும் போது அநீதிக்கு எதிராக நீதியை நிலை நாட்ட குரல்கொடுப்போம்.  இவ்வாறு குரல் கொடுப்பதன் வழியாக இறைவார்த்தையை நாம் நிலைநாட்ட முடியும்.  இறைவார்த்தையை இச்சமூகத்தில் நாம் நிலைநாட்டிட துணிச்சல் என்பது அவசியமாகிறது. இந்த துணிச்சலை தூய ஆவியானவர் வழியாக நாம் பெறுகிறோம். தூய ஆவியானவரைப் பெற்றுக்கொண்ட சீடர்களைப் போல நாமும் தூய ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்களாக துணிச்சலோடு இச்சமூகத்தில் நீதியை, சமத்துவத்தை, அன்பை நிலைநாட்ட இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...