திங்கள், 12 ஏப்ரல், 2021

நம்பிக்கைக்குரிய சீடராவோம்... (13.4.2021)

நம்பிக்கைக்குரிய சீடராவோம்...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகமானது தொடக்க கால நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை பற்றி எடுத்துரைக்கின்றன
 இன்றைய நற்செய்தி வாசகம் நம்பிக்கை கொண்ட மக்களாக நாம் இருக்க அழைப்பு தருகிறது. ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்ளக் கூடிய நாம் ஒவ்வொருவரும் தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து பொது நலத்தோடு எப்போதும் வாழ அழைக்கப்படுகிறோம்.  நம்பிக்கை கொண்ட மக்களாக நாம் இருக்கும் பொழுது பொதுநலத் தன்மை கொண்டவர்களாக இருப்போம் என்பதில் ஐயப்பாடு இல்லை.  நாம் பொதுநலனோடு இருக்கும்போது,  சமூகத்தில் எங்கோ ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கு இழைக்கப்படக்கூடிய அநீதி நமக்கே இழைக்கப்படக் கூடிய அநீதியாக கருதுவோம்.  எனவே அந்த அநீதியை களைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம். சமூகத்தில் எங்கோ யாரோ ஒரு ஏழை துயருறும் போது நாம் துயருறுவதாக உணருவோம்.  அவரின் துயர் துடைக்க நாம் முன்வருவோம். இதையே தொடக்க கால கிறிஸ்தவர்கள் செய்தார்கள். தங்களிடம் இருப்பதை எல்லாம் கொண்டுவந்தார்கள். இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.  அங்கு அனைத்தும் பொதுவாக இருந்தது. என்னுடையது உன்னுடையது என எதையும் அவர்கள் அன்று எண்ணவில்லை. இருப்பதை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து கொண்டு நிறைவாக வாழ்ந்தார்கள்.  இதுவே இறைவன் விரும்பியதாகும். இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது இந்த ஒரு சமத்துவத்தையும் இந்த ஒரு நீதியையுமே நிலைநாட்ட விரும்பினார். எனவேதான் தன்னுடைய போதனைகளில் அவர் யூதர், சமாரியர் என யாரையும் பிரித்துப் பார்க்காது அனைவரையும் தேடிச் சென்றார். அனைவருக்கும் தன்னுடைய பணியை செய்ய முன்வந்தார்.  எழுதப்பட்ட சட்டங்களாலும் பலவிதமான அடக்குமுறைகளாலும் நசுக்கப்படக் கூடிய மக்களின்  மனித மாண்பினை சுட்டிக்காட்டினார். மனிதர் அனைவரும் சமமானவர்கள் என்பதை எடுத்துரைக்கவே தன்னுடைய பணியை அனைவருக்குமான பணியாக கருதி ஒவ்வொருவரையும் தேடிச்சென்று குணப்படுத்தினார். தேடிச் சென்று அவர்கள் துயர் தீர்க்க முன்வந்தார். இத்தகைய பண்பை தான் தொடக்க கால கிறிஸ்தவர்களும் தங்களிடம் இருப்பதை கொண்டு சென்று இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இல்லாதவர்களைத் தேடிச் சென்று அவர்களோடு இருப்பதை பகிர கூடியவர்களுமாக இருந்தார்கள்.  இவர்களைப் போல நாமும் இன்று இச்சமூகத்தில் வாழ அழைக்கப்படுகிறோம்.  பல நேரங்களில் இப்படிப்பட்ட மக்களாக நாம் வாழ வேண்டும் எனப் பேசுபவர்கள் பலர் உண்டு. ஆனால் பேச்சு செயலாக்கப்பட வேண்டும். செயல்பாடு இல்லாத ஓராயிரம் வெற்று பேச்சுக்களை விட ஒரு துளி  செயல் மேலானது என்கிறார் விவேகானந்தர். நாம் நமது முன்னோரைப் போல நம்பிக்கை கொண்ட தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல நாமும் இன்று நாம் வாழும் சமூகத்தில் நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிரக் கூடிய நல்ல மனிதர்களாக நம்பிக்கைக்குரிய இயேசுவின் சீடர்களாக மாறிட இறையருளை வேண்டி இணைவோம் இன்றைய நாளில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...