செவ்வாய், 27 ஏப்ரல், 2021

ஒளியாக மாறிட.... (28.4.2021)

ஒளியாக மாறிட....


இயேசுவில் அன்புக்குரியவர்களே... உங்கள் அனைவரோடும் இன்றைய வாசகங்களின் அடிபடையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒளி இருளை அகற்றும் ...
ஒளி வழிகாட்டும்...
ஒளி உண்மையை பிரதிபலிக்கும் ...
இத்தகை ஒளியாக உலகிற்கு வந்தவர் தான் இயேசு கிறிஸ்து...இவரைப் போல நாமும் ஒளி வீசிட நாம் இயேசுவின் மீது நம்பிக்கையில் வளர வேண்டும் ...

 என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.
இந்த இயேசுவின் மீது நாம் கொள்கின்ற நம்பிக்கை நம்மை ஒளியின் பாதையில் வழிநடத்தும்...
உண்மைக்கு சாட்சியாய் வாழ்ந்திடத் தூண்டும்.

எனவே ஆண்டவர் இயேசுவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் அவரது வார்த்தைகளை வாழ்வாக மாற்றிக்கொண்டு... ஒளியின் பாதையில் உண்மை சீடர்களால் தொடர்ந்து பயணித்திட இறையருளை வேண்டுவோம். 
கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவியது.என்ற முதல் வாசக வார்த்தைகளுக்கு ஏற்ப ஒளியின் பாதையில் பயணிக்கும் போது,நாம் வாழும் சமூகத்தில் கடவுளின் வார்த்தைகளால் உலகில் ஒளியேற்றிட நம்மால் இயலும்... வாருங்கள் நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாமும் இச்சமூகத்தில் ஒளியாக திகழ... அடுத்தவர் வாழ்வில் நம்பிக்கை என்னும் ஒளியினை ஏற்றிட... நமக்குள் இன்றைய நாளில் நம்பிக்கை எனும் ஒளியை பற்றவைத்து கொண்டு பயணத்தை முன்னெடுப்போம்.... இச்சமூகத்தில் ஒளியாக மாறிட....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...