புதன், 21 ஏப்ரல், 2021

நம்முடன் உரையாடுகிறார் ... (22.4.2021)

நம்முடன் உரையாடுகிறார்....

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் இறை வார்த்தைகளின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 இன்றைய முதல் வாசகத்தில் ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதை பிலிப்பு மக்களுக்கு அறிவிக்கின்றார்.  பிலிப்பு அறிவிக்கக்கூடிய செய்தியைக் கேட்டு மக்கள் ஒரு மனத்தவராய் அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரது வார்த்தைகளை பின்பற்ற முயலுகிறார்கள். பிலிப்பின் வார்த்தைகளை கேட்டு அவ்வார்த்தைகளின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்ட அந்நகர மக்களிடையே பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று என்ற செய்தியினை இன்றைய முதல் வாசகத்தில் நாம்  வாசிக்க கேட்கிறோம். 

ஒரு இளைஞன் ஒருவன் கடற்கரை மணலில் நின்று கடவுளை நோக்கிக் கத்தினான்.  இறைவா!  என் வாழ்வில் எப்போதும் துன்பங்களே வந்து கொண்டிருக்கின்றன.  நீ என்னோடு உடன் இருக்கிறாயா? என்று கேட்டான். உடனே கடவுள், முன் நோக்கி நட என்றார்.  அவனும் முன் நோக்கி நடந்தான். அவன் அருகில் இரண்டு காலடித் தடங்கள் இருந்தன. ஒன்று அவனுடையது மற்றொன்று யாருடையது என அவனால் காண இயலவில்லை.  ஆனால் அவன் நடந்த போது அவன் தடத்திற்கு அருகாமையில் அந்தத் தடமும் வந்து கொண்டே இருந்தது. உடனே சற்று நன்றி, இறைவா! என் அருகில் இருப்பது நீர் தானா என்றான். உடனே இறைவன், நான் தான் என்றார். நீ என்னுடன் தான் நடந்து கொண்டிருக்கிறாயா? பரவாயில்லை. வா! பேசிக்கொண்டே நடப்போம் என பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினான்.  திடீரென பெரிய அலை வந்தது.  பயந்து ஓடிச் சென்றான். ஓடிப்போய் ஒரு பாறையின் மீது ஏறி நின்று கொண்டான். ஓடி வந்த பாதையை திரும்பிப் பார்த்தான், ஒரே ஒரு காலடித் தடம் மட்டுமே இருந்தது.  உடனே இறைவனை பார்த்துச் சொன்னான்! நீ என்னுடைய இன்பத்தில் என்னுடன் நடந்து வந்தாய்.  துன்பத்தில் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டாயே!  என்றான். உடனே கடவுள் சொன்னார்,  ஓடியது நீ  அல்ல. உன்னை தூக்கிக்கொண்டு ஓடியவன் நான். என்னுடைய காலடித் தடங்களைத் தான் நீ உன்னுடையது என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறினாராம்.  பல நேரங்களில் கடவுள் நம்மோடு இருக்கிறார். பல நல்லவர்களின் வழியாகவும், நல்ல மனிதர்களின் வார்த்தைகளின் வழியாகவும் நம்முடன் இருக்கிறார்.  அவரை நாம் கண்டுகொள்வதில்லை.  எப்படி தன்னுடைய காலடி தடத்திற்கும் இறைவனது காலடித் தடத்திற்கும் வித்தியாசம் தெரியாதவனாக,  இந்த இளைஞன் இருந்தானோ, அந்த இளைஞனைப் போலவே பல நேரங்களில் நம் அருகில் இருக்கக்கக்கூடிய இறைவனது வார்த்தைகளை அறிவிக்கக்கூடிய இனியவர்களின் வார்த்தைகளை விட, மற்ற வார்த்தைகளுக்குத் தான் நாம் அதிகம் கவனம் செலுத்தி இறைவன் நம்மோடு இல்லை என எண்ணுகிறோம்.



இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவரை அவரும் ஏற்றுக்கொள்கிறார்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவரை அவர் புறம்பே தள்ளுவதில்லை. அவர்களை விட்டு விடுவதில்லை.  அவர்களை தந்தையிடம் கொண்டு போய் சேர்க்கின்றார் என்ற செய்தியினை நாம் வாசிக்க கேட்கின்றோம்.  நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாய்  அவர் காட்டிய வழியில் நற்செய்தியின்  மதிப்பீடுகளை பின்பற்றி வாழும்போது, நமது வாழ்வு ஆண்டவருக்கு உகந்த வாழ்வாக அமைகிறது.  அவ்வார்த்தைகளின் வழியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் படியும் இறையாட்சியின் விழுமியங்களின் அடிப்படையிலும் வாழ்வை அமைத்துக் கொண்டு பயணம் செய்யும்போது நாம் கடவுளின் பார்வையில் மதிப்பு மிக்கவர்களாகவும் மனமகிழ்வு கொண்டவர்களாகவும், எப்போதும் இன்புற்று இச்சமூகத்தில் வாழமுடியும். பெரும்பாலான நேரங்களில் நம்மில் பலர் ஆண்டவரின் வார்த்தைகளின்படி வாழ்வை அமைத்துக் கொள்வதில்லை. பல நேரங்களில் நற்செய்திகளுக்கு நாம் நமது செவிகளை திறப்பதில்லை.  எனவேதான் பல நேரங்களில் நாம் துன்புறுகிறோம்.  திக்கற்றவர்களாகவும்,  ஆதரவு அற்றவர்களுமாக இவ்வுலகத்தில் நாம் இருப்பது போல எண்ணுகிறோம்.  நாம் வாழும் இந்த உலகத்தில் நம்மை சுற்றி பிலிப்பை போல பல நல்லவர்கள், நல்லவிதமான வார்த்தைகளை அனுதினமும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நமது செவிகள் பெரும்பாலான நேரங்களில் நற்செய்திகளுக்கும் நல்ல வார்த்தைகளுக்கும் செவி திறப்பது இல்லை. மாறாக அதற்கு எதிரானவைகளின் மீதே அதிக கவனத்தை செலுத்துகின்றனர். அதன் விளைவாக நாம் பல நேரங்களில் இன்னல்களையும் துன்பங்களையும் மட்டுமே நமது வாழ்வுக்கான நோக்கமாகவும் இலக்காகவும் குறிக்கோளாகவும் கொண்டு வாழ்வில் பல நேரங்களில் துன்புற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய நல்லவர்களின் நல்ல வார்த்தைகளை செவி திறந்து கேட்கக் கூடியவர்களாகவும் இந்நாளில் மாறிட அழைக்கப்படுகிறோம்.  அவ்வாறு நாம் நல்லவர்களின் வார்த்தைகளுக்கு செவி திறக்கும் போது, நாமும் மனமகிழ்வு கொண்டவர்களாக மாறுவோம். நம்மையும் இறைவன் தன்னுடைய மக்கள் என அழைத்து தன்னோடு சேர்த்துக் கொள்வார். அவர் நம்மைக் கைவிடுவதில்லை. நம்மை விட்டு விலகுவதில்லை. நம்மோடே இருக்கின்றார் என்பதை அப்போது நாம் உணர்ந்து கொள்ள முடியும்.  இதற்கான அருளை உணர்ந்து கொள்ள முடியும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை சுற்றி பல நல்ல மனிதர்களின் வழியாகவும், நற்செயல்கள் வழியாகவும், நல்ல சொற்களின் வழியாகவும், அனுதினமும் நம்முடன் உரையாடுகிறார் என்பதை கண்டு நடந்து கொண்டு வாழ்வை அழகாக்கிட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.

1 கருத்து:

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...