புதன், 28 ஏப்ரல், 2021

வாக்கு மாறாதவர் கடவுள் ... (29.4.2021)

வாக்கு மாறாதவர் கடவுள் ...
கோரோனா தொற்றுநோய் ஒருபுறம் உச்சத்தை எட்டிக் கொண்டு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றாலும் .  ஆவலோடு தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் யார் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கப் போகிறார்கள்? என்பதை அறிவதற்கு அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். இதற்கு 
இன்னும் ஒருசில தினங்களே இருக்கின்றன...

இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் சொன்னதை  செய்வார்களா? என்ற எண்ணம் இப்போதே இதயத்தில் துளிர் விட தொடங்கி விட்டது. ஏன் இத்தகைய எண்ணம் இதயத்தில் துளிர்விட்டது என சிந்திக்கும் போது இடத்திற்கு ஏற்றார் போல நிறத்தை மாற்றும் பச்சோந்திகள் போல இன்று மனிதர்கள் பலர் இச்சமூகத்தில் நாளுக்கு நாள் பெருகி விட்டார்கள் என்பதே அதற்கு காரணமாகிறது...
ஆட்சிக்கு வருபவர்களும் அதிகாரத்தின் மத்தியில் இருப்பவர்களும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மகத்துவமான செய்தி என்னவென்றால் பணியாளர் தலைவரை விட உயர்ந்தவர் அல்ல தேர்ந்தெடுத்த மக்களைவிட தேர்வு செய்யப்பட்டவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல அவர்களில் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கமே அடுத்தவருக்கு அறியவே இதனை மனதில் கொண்டு அவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற கூடியவர்களாக வாழ இன்றைய நாளில் இறைவார்த்தை வழியாக அழைக்கப்படுகிறார்கள் இது ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் மனிதர்களுக்கான அழைப்பு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அழைப்பாகும்.

கடவுள் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பொருட்டு இயேசுவை உலகிற்கு அனுப்பினார்.இந்த உண்மையை உலகிற்கு பலர் எடுத்துரைத்தார்கள். இந்த உண்மையை கூறியவர்களை எல்லாம் இயேசுவாகவே பார்க்கப்பட்டார்கள்... ஆனால் வீண் பெருமைக்கும் மயங்காத இவர்கள் இயேசுவை  பற்றி நாங்கள் அறிவிக்கின்றோம் என்ற செய்தியை வெளிக்காட்டியவர்கள்.அவர்களுள் ஒருவரான யோவானை பற்றித்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்க கேட்டோம்...

நாம் ஆட்சியாளர்களை தேர்வு செய்வது போலவே இறைவனும் தன்னுடைய பணியை இச்சமூகத்தில் செய்யக்கூடிய மனிதர்களை தேர்வு செய்கிறார். தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களை தேர்வு செய்தது யார்? என்பதை மனதில் இருத்தி செயல்படும் பொழுது மகத்துவமான நல்ல பணிகளை சமூகத்தில் முன்னெடுக்க முடியும். இத்தகைய எண்ணத்தை மனதில் கொண்டு பயணம் செய்யவே நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
 

இத்தகைய எண்ணத்தின் அடிப்படையில் நமது பயணத்தை தொடரும் போது நாம் வாக்கு மாறாத இறைவனை போல நாமும் கொடுத்த வாக்கை மாறாத நல்ல பணியாளர்களாக இருந்து, நாம் தேர்வு செய்யப்பட்ட நோக்கத்தை அறிந்தவராய் மக்களுக்கு மகத்துவமான நல்ல பணிகளை செய்யக்கூடிய மனிதர்களாக இச்சமூகத்தில் வளம்பெற முடியும் .பலவிதமான பணிகளுக்கு மத்தியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் அனுதினமும் பலவிதமான வார்த்தைகளை வாக்குறுதிகளாக  பயன்படுத்துகிறோம்.  கொடுத்த வாக்கைக் காக்க கூடிய நல்ல பணியாளர்களாக நாம் மாறிடவும், வாக்கு மாறாத இறைவனின் வழியில் நடந்திடவும் இறைவனது அருளை தொடர்ந்து வேண்டுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பலனை எதிர்பாராமல் பணி செய்வோம்!(28-5-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...