திங்கள், 19 ஏப்ரல், 2021

இயேசுவைக் கொன்று விட்டார்களா? (20.4.2021)

இயேசுவைக் கொன்று விட்டார்களா?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

 இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு பாலைவனத்தில் ஒரு மனிதன் ஆராய்ச்சிக்காக சென்றிருந்த பொழுது தனது குழுவினரை விட்டுவிட்டு வழிதவறி தனியே நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகுந்த தாகமாக இருந்தது. அவன் வந்து கொண்டிருந்த வேளையில் தண்ணீர் அடித்து எடுக்கும் ஒரு தண்ணீர் குழாய் அங்கே இருந்தது. அந்தக் குழாய்க்கு வெளியே ஒரு செம்பில் தண்ணீரும் இருந்தது. அருகிலேயே ஒரு வாசக பலகை, அதில், இந்த தண்ணீரை அந்த குழாயினுள் ஊற்றியபின் தண்ணீர் பிடித்து குடிக்கவும். மீண்டும் இந்த செம்பில் தண்ணீர் நிரப்பி இங்கு வைக்கவும் என எழுதி இருந்தது. ஆனால் அந்தக் குழாயோ துருப்பிடித்து போனதாக இருந்தது. இதனால் அந்த மனிதனுக்கு இந்த செந்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றினால் இந்த துருப்பிடித்த  இந்தக் குழாயிலிருந்து தண்ணீர் வருமா என்று ஒரு சந்தேகம் எழுந்தது.

          ஆயினும் உள்ளத்தில் ஏதோ ஒரு சிறு பொறி தட்ட, அவன் அந்த தண்ணீரை அந்த குழாயினுள் ஊற்றினான். குழாயின் கைப்பிடியைப் பிடித்து அடித்தான். தண்ணீர் இரண்டு நிமிடங்களில் பொங்கி வழிந்தது. தாகம் தீர தண்ணீரைக் குடித்துவிட்டு மீண்டும் அந்த செம்பில் தண்ணீர் நிரப்பி வைத்து விட்டுச் சென்றான்.
ஆம் அன்புக்குரியவர்களே! இன்றைய வாசகங்கள் வாழ்வுக்கான வழியைப் பற்றியும் அதை எதிர்ப்பவர்களின் மன நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. 

இன்றைய முதல் வாசகத்தில் புனித ஸ்தேவான் இயேசு கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த பரிசேயர்களையும் சதுசேயர்களையும் நோக்கி, "மிகப் பெரிய இறைவாக்கினரான இயேசுவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்!" என துணிவோடு எடுத்துரைத்ததையும் விண்ணுலகில் கடவுளின் மாட்சியை கண்டதையும், ஸ்தேவானின் அருளுரையை ஏற்க விரும்பாத பரிசேயர்களும் சதுசேயர்களும் அவரை கல்லால் எறிந்து கொன்றதையும், இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு ஆண்டவர், "வாழ்வு தரும் உணவு நானே! என்னிடம் வருபவருக்கு பசியே இராது! தாகம் இராது!" என்று கூறுவதையும் நாம் காண்கிறோம். 

நாம் இன்று மேற்கண்ட பாலைவன பயணம் செய்த மனிதன், அவன் சந்தித்த அடிகுழாய்க்கு அருகில் இருந்த தண்ணீரை குழாய்க்குள் ஊற்றிய பொழுது உள்ளிருந்து தண்ணீர் ஊற்றெடுத்து அந்த மனிதனுக்கு நிறைவை அளித்தது போல இயேசு ஆண்டவரும், தன்னுடைய சிலுவைப் பலியின் வழியாக, வாழ்வை ஊற்றெடுக்கச் செய்தார். நன்மைகளை ஊற்றெடுக்க செய்தார். 

இன்று நாமும் இயேசு ஆண்டவர் காட்டிய வாழ்வின் பாதையில் வழி நடக்க, அவரை நோக்கி செல்ல, அவரை பின்பற்றி செல்ல, அவரைச் சென்று அடைந்திட நமக்கு அழைப்பு தருகின்றார்.

நாமும் நல்ல அனுபவசாலிகள் ஆகிவிடுவோம்!
 நன்மைகளில் மற்றவர்களையும் வாழ வைப்போம்!
எனவே இயேசுவின் பின்னால் நாமும் செல்வோமா!!!!
👍

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...