திங்கள், 19 ஏப்ரல், 2021

திருமண விழா நன்றியுரை.

திருமண விழா நன்றியுரை.
1. இன்பம் பொங்கிடும் இந்த நல்ல நாளிலே இனிய நல்வேளையிலே என் இல்லத்தின் திருமண விழா இனிதே நடைபெற, அன்பு உள்ளங்கள் கனிராஜ் - ஜெய ருபி, இறையருளால் தமது இல்லற வாழ்வை இனிதே தொடங்க இன்று இந்த நிகழ்வை தொடங்கி வைத்து வழிநடத்திக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

2. ஒரு பங்கின் வளர்ச்சிஅந்த பங்கை வழிநடத்திக் கொண்டிருக்கும் பங்கு தந்தையரின் நோக்கிலும் வாக்கிலும் அடங்கியுள்ளது என்று கூறுவார்கள். அந்த வகையில் நமது பங்கை சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கும் நமது பங்கின் பங்குத்தந்தை அருள்திரு மைக்கேல்ராஜ் அவர்களுக்கும் நமது உதவி பங்குத்தந்தை அருட்திரு ஸ்டீபன் மரியதாஸ் அவர்களுக்கும் மற்றும் தொண்டி பங்கின் பங்குத்தந்தை அருட்திரு சவரிமுத்து அவர்களுக்கும் இன்றைய நாளில் எமக்காக திருப்பலி நிறைவேற்றி ஜெபித்து எம் அன்பு பிள்ளைகளை ஆசீர்வதித்த எம் அருட்தந்தையர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

3. சகோதரர்கள் ஒன்றித்து வாழ்வது எத்துணை நன்று எத்துணை இனியது என்பதற்கேற்ப எங்களோடு என்றென்றும் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இல்லத்தின் அன்பு நிறைந்த அருள் சகோதரிகள்
...........................,.............................
இன்று எங்களோடு இணைந்து எங்களில் ஒருவராக நமது அன்பு பிள்ளைகளுக்காக ஜெபித்து வாழ்த்து வந்திருக்கும் அருட் சகோதரிகள் அனைவருக்கும் எங்களது அன்பின் வாழ்த்துக்களை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

4. வானவில்லுக்கு ஏழு வண்ணங்கள் உண்டு. இனிய சுவையில் ஆறு வகை உண்டு. அந்த வகையில் எமது குடும்பத்தின் வானவில்லாக அறு சுவை சேர்க்கும் நறுமணமாக இன்று எம்மோடு இணைந்து இந்த நமது திருமண விழா செல்வங்களை வாழ்த்தி ஜெபிக்க இங்கு வந்திருக்கும் எமது உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவருக்கும் நன்றி! அனைத்திற்கும் நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...