செவ்வாய், 13 ஏப்ரல், 2021

ஒளி உலகிற்கு வந்துள்ளது! (14.4.2021)

ஒளி உலகிற்கு வந்துள்ளது!
உண்மைக்கு ஏற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள் !

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு குரு ஒருவர் நடந்து  சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வழியில் ஒரு நபரை கண்டார். அந்த நேரம் இருள் சூழ்ந்த நேரமாக இருந்ததால் அருகில் சென்றவுடன் அந்த மனிதரை கவனித்தார்.  அம்மனிதன் தன் கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். 
 உடனே குருவானவர் அந்த மனிதரை நோக்கி கையில் விளக்கை வைத்துக் கொண்டு இருட்டில் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். 
உடனே அந்த மனிதர் எனது கையில் சிறிய விளக்கு தான் இருக்கிறது.  இந்த விளக்கை கொண்டு என் முன் வருகின்ற நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாது. அதனால் ஒரு பெரிய விளக்கு வரும்வரை நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். 

இன்றைய முதல் வாசகம் தலைமை குருவும் சதுசேயர்களும் 
பொறாமையால் நிறைந்து திருத்தூதர்களை சிறையில் அடைத்ததையும், இரவில் ஆண்டவரின் தூதர் வந்து கதவுகளை திறந்து அவர்களை நற்செய்திப் பணியாற்ற, இறைவார்த்தையை மக்களுக்கு எடுத்துரைக்க அழைத்ததையும் காலையில் இந்த மாபெரும் நிகழ்வை கண்ட அனைவரும் வாயடைத்து நின்றதையும் எடுத்துக் கூறுகிறது.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இந்த உலகத்தினை மீட்க தந்தையின் ஒரே மகனான இயேசு கிறிஸ்து, ஒளியாக இவ்வுலகிற்கு வந்ததையும் அவ்வொளியைப் பெற்றோர் உண்மையின் பாதையில் வழிநடக்க ஒளியாம் இறைவனை நோக்கி பயணித்ததையும் புனித யோவான் எடுத்துரைக்கிறார்.

உலகில் வழியாக வந்த நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று ஒவ்வொரு நாளும் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒளியை ஏற்றிக் கொண்டிருக்கிறார். நமது வாழ்வின் விளக்குகளுக்கு தமது தூய ஆவியானவரின் அருளால் எண்ணை ஊற்றிக் கொண்டு இருக்கிறார். 
     நாம் எத்தகைய மனநிலையோடு ஆண்டவர் இயேசுவை எதிர்கொள்கிறோம்? 
நான் குறைபட்ட மனிதன், என்னால் நிறைவான நன்மைகளை செய்ய இயலாது, இன்று நமக்கு நாமே வரையறை செய்துகொண்டு இருக்கிறோமா? அல்லது என் சிறு விளக்கை இன்றைய நாளின் பொழுதில் ஏற்றுகின்ற ஆண்டவர் நான் முழுவதுமாக ஒவ்வொரு நாளும் அனுதின மன்னாவை நமக்கு அளித்து நமது வாழ்வை ஒளிரச் செய்வார் என்று நமது நம்பிக்கையை உயிர்த்த ஆண்டவரில் வளர்த்துக் கொள்கிறோமா?

ஆண்டவர் அருள்தரும் ஒளியாக நாம் நம்மிலும் பிறரிலும் அன்றாடம் ஆண்டவரின் ஒளியைப் பெற்று ஒளியின் பாதையில் உண்மையின் பாதையில் நன்மையின் பாதையில் நாளும் நடந்திட இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம் இந்நன்னாளில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...