வியாழன், 31 மார்ச், 2022
நல்லதொரு மனமாற்றத்தை நம்முடையதாக்கிக் கொள்ள...(1.4.2022)
புதன், 30 மார்ச், 2022
நமது வாழ்வால் நாம் சான்று பகரும் மனிதர்களாக மாறுவோம்!...(31.3.2022)
செவ்வாய், 29 மார்ச், 2022
நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள ...(30.3.2022)
திங்கள், 28 மார்ச், 2022
நம்பிக்கையில் நிலைத்தவர்களாக...(29.3.2022)
ஞாயிறு, 27 மார்ச், 2022
நம்பிக்கையில் வேரூன்றியவர்களாக மாறிட...(28.3.2022)
சனி, 26 மார்ச், 2022
இறைவனோடு ஒப்புரவாவோம்....(27.3.2022)
வெள்ளி, 25 மார்ச், 2022
செபமே நமது வாழ்வு....(26.03. 2022)
வியாழன், 24 மார்ச், 2022
அர்ப்பணிப்பதே ஆண்டவருக்கு உகந்த வாழ்வு...(25.3.2022)
புதன், 23 மார்ச், 2022
நம்மைப் போலவே பிறரும்....(24.3.2022)
செவ்வாய், 22 மார்ச், 2022
இறைவனது விருப்பம் எது?...(23.3.2022)
இறைவனது விருப்பம் எது?
இறைவனின் செயல் அன்புக்குரியவர்களே!...
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
திருச்சட்டத்தை அழிப்பதற்காக இயேசு இந்த உலகத்திற்கு வரவில்லை. மாறாக, திருச்சட்டத்தை நிறைவுசெய்வதற்காகவே இந்த உலகத்திற்கு வந்ததாக, இயேசு சொல்கிறார்.
திருச்சட்டம் பற்றிய இயேசுவின் விளக்கம் என்பது நாம் எதைச்செய்தாலும் கடவுளின் பார்வையில் இருந்து செய்ய வேண்டும். அவரின் திருவுளத்திற்கு ஏற்றதா? என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். இதைச்செய்தால், நாம் திருச்சட்டத்தை கடைப்பிடிக்கிறோம், என்பது இயேசுவின் விளக்கம்.
விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை தோரா என்றும் திருச்சட்ட நூல்கள் எனவும் யூதர்கள் கருதுகின்றனர்.
திருச்சட்டம் என்கிற மோசேயின் சட்டத்தினை, கடவுள் கொடுத்திருந்தாலும், அதனுடைய முழுமையான புரிதல், அதனை விளக்கக்கூடிய பரிசேயர்களுக்கும், சதுசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் இல்லை. அவர்கள் அதனை தவறாகத்தான் மக்களுக்குப் போதித்தார்கள். அதனுடைய உண்மையான அர்த்தத்தை போதிக்கவில்லை. போதிக்கவில்லை என்பதைக்காட்டிலும், அவர்கள் அதை புரிந்து கொள்ள இயலவில்லை, என்பதுதான் உண்மை. ஆனால், இயேசு அந்த புரிதலை தனது போதனையின் மூலமாக முழுமைப்படுத்துகிறார். அந்த முழுமையை, உண்மையென பரிசேயர்களாலும், மற்றவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எந்த ஒரு கோட்பாடும் முழுமையாக, உடனடியாக புரிந்து கொள்ள முடியாதது. கொஞ்சம், கொஞ்சமாக காலப்போக்கில் அதனை நாம், நமது அனுபவத்தில் முழுமையாகப் புரிந்து கொள்கிறோம். அதேபோலத்தான்,
துன்பப்படுகிற மனிதனைக் கண்டு அவனது துன்பத்தை போக்குகிற முயற்சியில் நாம் ஈடுபடுவது முறையா அல்லது அவர்கள் துன்பப்படுகிறார்கள் என எண்ணியவர்களாய் நகர்ந்து சென்று விடுவது முறையா? என சிந்தித்துப் பார்ப்போம்... இறைவனின் விருப்பம் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வது, என்பதாகத்தான் இருக்கும். அதுதான் கடவுளின் பார்வையில் சரியானதாகவும் இருக்கும். அதை இயேசு செய்வதற்கு அழைக்கிறார்.
அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து நமது வாழ்வை ஆண்டவர் இயேசுவின் மனநிலையோடு நகர்த்துகின்றதாக மாற்றிக்கொள்ள இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து செபிப்போம்.
திங்கள், 21 மார்ச், 2022
அன்பை பகிர்ந்து வாழ்ந்திட....(22.3.2022)
ஞாயிறு, 20 மார்ச், 2022
DN. J. SAHAYA RAJ PRISTLY ORDINATION
நம்பிக்கையே.... உதாரணமாகிட வழி...(21.3.2022)
நம்பிக்கையே.... உதாரணமாகிட வழி...
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இயேசு தான் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் போதிக்கிறார். நாசரேத் என்பது இயேசுவின் சொந்த ஊர். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்தமக்கள் இயேசுவிடத்தில் கோபப்படுகிறார்கள்.
ஏன் இயேசுவின் மீது கோபம் கொண்டார்கள்? என சிந்திக்கின்ற போது ... சீதோனும், சிரியாவும் புற இனத்துப்பகுதிகள். இயேசு பிறஇனத்தவரை உயர்த்திப்பேசுவதுதான் மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், யூதர்கள் தாங்கள் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், கடவுள் பார்வையில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்தவர்கள். எனவே, யூதர் அல்லாத மற்றவர்களை அவர்கள் இழிவாகக்கருதினர். இப்படித்தாங்கள் இழிவாகக்கருதும் பிறஇனத்தவரை, யூதரான இயேசு, புகழ்ந்துகூறியதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எனவே, அவரை வெளியே துரத்தி, மலைஉச்சியிலிருந்து கீழே தள்ளிவிட முயன்றனர்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு எதற்காகப் பிற இனத்தவரை உயர்த்திப்பேச வேண்டும்? எதற்காக அதை யூதர்களுக்கு மத்தியில் சொல்ல வேண்டும்? ஏன் இயேசு சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணையும், நாமானையும் உதாரணமாகச்சொல்கிறார் என்று சிந்தித்தால் இவர்கள் இரண்டுபேருமே பிறஇனத்தவர்கள். ஆனால், இவர்கள் இருவரிடத்திலும் காணப்பட்ட பொதுவான பண்பு: அவர்களின் நம்பிக்கை.
நாடு முழுவதும் பஞ்சம் தலைவிரித்தாடிய போது கைம்பெண்ணிடம் மற்றவர்களுக்குக்கொடுக்கக்கூடிய அளவுக்கு மாவோ, எண்ணெயோ இல்லை. அதுதான் அவளிடம் கடைசியாக இருந்தது. இருக்கிற மாவும், எண்ணெயும் முடிந்தவுடன் அவளும், அவளுடைய பிள்ளையும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். ஆனாலும், எலியாவின் வார்த்தைகளை நம்பி, இருந்ததையும் எலியாவோடு பகிர்ந்துகொள்கிறார்.
அதேபோல, நாமான் பெரிய படைத்தளபதி. செல்வந்தன். இருந்தாலும், எலிசாவின் வார்த்தைகளை நம்பி, அவருக்குப்பணிகிறார். அவர் சொன்னதைச்செய்கிறார். தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நலமடைகிறார்.
நம்பிக்கையே இவர்கள் இருவரும் இயேசுவால் உதாரணம் கட்டப்படுவதற்கான காரணம்.
நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவருமே கடவுளின் பார்வையில் சரி சமமானவர்கள் என்பதை உணர்ந்தவர்களாய் பாகுபாடுகளைக் கடந்து நம்பிக்கையால் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை உணர்ந்து வாழ இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து ஜெபிப்போம் ...
சனி, 19 மார்ச், 2022
மன மாற்றமே நம் மாற்றத்திற்கான முதல் படி ....(20.03.2022)
வெள்ளி, 18 மார்ச், 2022
வளனாரின் வாழ்வு காட்டும் வாழ்க்கை பாடம்...(19.3.2022)
வியாழன், 17 மார்ச், 2022
மாற்றம் அது நமக்குள் நிகழ வேண்டும் ...(18.3.2022)
புதன், 16 மார்ச், 2022
நாம் வாழும் இச்சமூகத்தின் மீது அக்கறை கொண்ட மனிதர்களாக நாம் மாறிட ...(17.3.2022)
செவ்வாய், 15 மார்ச், 2022
வாழ்வுக்கான முத்தான சிந்தனைகள்...(16.3.2022)
திங்கள், 14 மார்ச், 2022
செயல்களே சீடர்கள் என்பதன் அடையாளம் ...(15.03.2022)
ஞாயிறு, 13 மார்ச், 2022
நாம் வாழ ...அவர் காட்டும் வழிகள்....(14.03.2022)
சனி, 12 மார்ச், 2022
நம்பிக்கையே ஆண்டவரோடு உள்ள உறவில் நம்மை ஆழப்படுத்தும்...(13.3.2022)
வெள்ளி, 11 மார்ச், 2022
இயேசுவின் மனநிலையில் நமது பயணம்...(12.3.2022)
வியாழன், 10 மார்ச், 2022
சரி செய்ய....(11.03.2022)
புதன், 9 மார்ச், 2022
கடவுளோடு நாமும், நம்மோடு கடவுளும் உரையாடிட...(10.3.2022)
செவ்வாய், 8 மார்ச், 2022
அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உறவில் ஆழப்பட....
திங்கள், 7 மார்ச், 2022
அர்த்தம் உணர்ந்து செபிப்போம்....(8.3.2022)
புனித மார்த்தா விழா! ( 29-7-2024)
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...
-
மன்றாட்டுகள் 1) அன்புத்தந்தையே இறைவா உம் திருஉடலாம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவறத்தார் மற்ற...
-
செபம்: உன்னதங்களிலே உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி ஆகுக. உம்மைப் புகழ்கின்றோம். உம்ம...