செயல்களே சீடர்கள் என்பதன் அடையாளம் ...
சொல்லை விட சிறந்தது செயல் என்பதை இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.
அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த யூதர்களின் மனநிலையை இயேசு சுட்டிக்காட்டி நமது மனநிலை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான வாழ்வுக்கான பாடத்தை இயேசு என்ற என்னால் நற்செய்தி வாசகத்தில் வழியாக நமக்கு முன்மொழிகிறார்.
அன்றைய காலத்தில் யூதர்கள் தாங்கள் ரபி என அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். எனவே தங்களிடமிருந்த அதிகாரங்களை பயன்படுத்தி அடுத்தவரை பாவிகள் என சுட்டிக்காட்டி தங்களை முதன்மையான இடத்திற்கு உரியவர்கள் என்பதையும், இறைவனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்பதையும் வலியுறுத்த கூடியவர்களாக இருந்தார்கள். எனவேதான் முதன்மையான இருக்கைகளையும், மக்கள் பார்க்கக் கூடிய இடங்களில் ஜெபங்களையும் ஏரெடுக்கக்கூடிய மனிதர்களாக இருந்தார்கள். இவர்களின் இந்த தவறான முன்னுதாரணங்களை யே இயேசு சுட்டிக் காண்பித்தார். இறைவனோடு உறவில் இருக்கிறேன் என கூறி கொள்ளக் கூடியவர்கள் இறைவனோடு உள்ள உறவில் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சக மனிதர்களை தங்கள் போல எண்ணாமல் அவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாகக் கருதியவர்கள்.
எனவேதான் இயேசு விண்ணகத் தந்தையை தவிர நமக்கு வேறு ஒரு தந்தை இல்லை. விண்ணகத் தந்தையை விட உயர்ந்த ஆசிரியர் நீங்கள் இல்லை. விண்ணகத் தந்தையை விட பெரியவர் நீங்கள் இல்லை என்பதை அவர்களுக்கும் சுற்று இருந்தவர்களுக்கும் வெளிப்படுத்த கூடியவராக இருந்தார் என்று இதே வார்த்தைகளை தான் அவர் நமக்கும் வெளிப்படுத்துகிறார்.
உயர்ந்த இடத்தை தேட கூடியவர்களாகவும், அனைவரையும் விட பெரியவர் நாம் என எண்ணக் கூடியவர்களாகவும், இறைவனோடு உள்ள உறவில் நிலைத்திருப்பவர் நாம் மட்டுமே என்ற மமதையோடு வாழக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் நமது எண்ணங்களையும் வார்த்தைகளையும் விட உயர்ந்தது நமது செயலாக இருக்க வேண்டும் நமது செயல்கள் அனைத்துமே ஆண்டவர் இயேசுவுக்கு உரிய செயல்களாக இருக்க வேண்டும் அதற்கு நாம் சக மனிதர்களை எந்தவித பாகுபாடுமின்றி நம்மில் வருவதாக எண்ணி அவர்களின் நலனில் அக்கறை காட்டக்கூடிய மனிதர்களாக இயேசுவைப் போல இருக்க வேண்டும். இந்த செயல் நம்மில் இல்லாதவரை வெற்று வார்த்தைகளால் வீண் பெருமை பேசக் கூடியவர்களாக மட்டுமே நாம் இருப்போம்..... நாம் இயேசுவுக்கு உகந்தவர்களாக இல்லை என்பதை இன்றைய நாள் வாசகம் நமக்கு வெளிக்காட்டுகிறது...
இறைவனது வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக் கொள்ளவே இந்த தவக்காலம் தரப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம். வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தி... நமது செயல்களை நல்ல செயல்களாக மாற்றுவோம் .... செயல்கள் வழியாக இறைவனின் உண்மை சீடர்களாக மாறிட இறையருள் வேண்டி தொடர்ந்து ஜெபிப்போம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக