அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உறவில் ஆழப்பட....
அன்பர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
நெற்றியில் சாம்பல் பூசியவர்களாய் கடந்த புதன் அன்று தொடங்கிய தவக்காலத்தை, இந்த புதன் கிழமையோடு ஒரு வாரத்தை நிறைவு செய்கிறோம். இந்த ஒரு வார காலத்தில் நாம் ஒரு சில உறுதிப்பாடுகளை நமக்கு நாமே எடுத்து இருப்போம். அந்த உறுதிப்பாடுகளில் நிலைத்தும் இருந்திருப்போம்.
சில நேரங்களில் அந்த உறுதிப்பாடுகளிலிருந்து அவ்வப்போது நாம் தவறி போகின்ற சூழலிலும் கூட, நான் தட்டுத்தடுமாறி ஆண்டவர்மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், இந்த தவக்காலத்தை இதயத்தில் இருத்தியவர்களாய், சில ஒருத்தல் முயற்சிகளை செய்து கொண்டிருப்போம். ஒரு வார காலம் நாம் நன்றாக இருந்திருக்கிறோம். எனவே கடவுள் நமது வாழ்வில் அனைத்தையும் மாற்றி விடுவார் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம். ஆனால் நாம் எடுக்கின்ற ஒறுத்தல் முயற்சியிலும், நாம் மேற்கொள்கின்ற அனைத்து விதமான தவ முயற்சிகளும், ஆண்டவரோடு உள்ள உறவில் நாம் வளர்வதற்காகவே என்பதை மட்டுமே மனதில் இருத்த வேண்டுமே ஒழிய, பலனை எதிர்பார்த்து நாம் எதையும் செய்யக்கூடாது என்பதை இன்றைய வாசகங்கள் வலியுறுத்துகின்றன.
யூதர்கள் பொதுவாக இயேசுவினிடத்தில் அடையாளத்தை கேட்டார்கள். ஏன் அவர்கள் அடையாளங்களை நாடினார்கள் என பார்க்கின்ற போது, மெசியா வருமுன் சில அடையாளங்கள் நிகழும் என அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த அடிப்படையில் தான் இயேசுவை மெசியா என மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, இவர் உண்மையாகவே மெசியாவாக இருப்பாரோ என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுந்தது. எனவே அவர் மெசியா என்பதை நிரூபிக்க அடையாளத்தை காட்டச் சொன்னார்கள். அடையாளத்தை கெட்ட மனிதர்களுக்கு இயேசு அடையாளம் தரப்பட மாட்டாது என கூறினார். காரணம் ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அவரவர் பெறுகின்ற அனுபவங்களின் வாயிலாகத் தான் கடவுளை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர, அரும் அடையாளங்களால் மட்டும் கடவுளை உணர்ந்து கொள்ள முடியும் என்பவர்கள், இதைவிட இன்னொரு அருள் அடையாளத்தை காணுகின்ற போது இடறி போகக்கூடிய ஆடுகளாக தான் இருப்பார்கள். எனவே தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அடையாளங்களை காண்பித்து தம்மை யாரென மெய்ப்பித்து காண்பிக்க விரும்பாதவராக உங்களுக்கு அடையாளம் தரப்படமாட்டாது என்று கூறினார்.
உங்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் தரப்பட மாட்டாது என ஆண்டவர் இயேசு கூறுகிறார். இவ்வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்கின்ற போது அன்று யோனா நினைவே நகர மக்கள் தவறான வாழ்வில் ஈடுபடுகிறார்கள் என்பதை சுட்டி காண்பிப்பதற்காக கடவுள் அவரை அனுப்பி வைத்தார். ஆனால் யோனா செல்ல மறுத்தார். பிறகு கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்தவராய் நினிவே நகருக்குச் சென்று அவர்களின் தவறான வாழ்வை சுட்டிக் காண்பித்தார். யோனாவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் மன மாற்றம் பெற்றார்கள். இந்தத் தவக்காலத்தில் நாமும் தகுந்த மனமாற்றத்தை பெற வேண்டும் என்பதே இறைவனது விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பல நேரங்களில் நமக்கு அருள்பணியாளர்கள் வாயிலாகவோ, அருட்சகோதரிகள் வாயிலாகவோ, நமது குடும்பத்தில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் வாயிலாகவோ மனமாற்றத்திற்கான அழைப்பை இறைவன் தருகிறார். இறைவன் தருகின்ற இந்த மனமாற்றத்திற்கான அழைப்பை உணர்ந்து கொண்டு, நமது மனங்களை மாற்றிக் கொண்டு அவரின்பால் திரும்ப நாம் அழைக்கப்படுகிறோம். அவரின்பால் திரும்புகிற போது பல நேரங்களில் நாம் கடந்த ஒரு வார காலமாக ஒறுத்தல் முயற்சிகள் பல செய்திருக்கலாம். இந்த ஒருத்தல் முயற்சிகளால் எனது வாழ்வில் நடந்த நன்மை என்ன? எனக்கு கிடைத்த பயன் என்ன? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்.
நாம் அடையாளங்களைக் கொண்டு அந்த கேள்விகளுக்கு விடை தேட கூடாது. அடையாளங்கள் ஏதேனும் தென்படுகிறதா என தேடிக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு , அனுபவத்தின் வாயிலாக நாம் ஆண்டவரோடு இணைந்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இந்த நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
நாம் மேற்கொள்ளுகின்ற தவா முயற்சிகளும் செபங்களும், அறச்செயல்களும் நம்மை ஆண்டவரோடு ஐக்கியப்படுத்தி இருக்கின்றன.
ஆண்டவரோடு இன்னும் அதிகமான நெருக்கத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கின்றன. அதனை நாம் அடையாளங்கள் கொண்டு உணர வேண்டிய அவசியமில்லை. நமது அனுபவம் கொண்டு உணர முடியும். இந்த அனுபவத்தின் வாயிலாக ஆண்டவரோடு உள்ள உறவில் இன்னும் ஆழப்பட இறையருளை வேண்டி, இணைந்து தொடர்ந்து இந்த திருப்பலியில் செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக