இறைவனோடு ஒப்புரவாவோம்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறை வார்த்தையானது, கடவுளோடு ஒப்புரவாகிட நமக்கு ஒரு அழைப்பினை தருகிறது. பொதுவாகவே நமது கிறிஸ்தவ இறையியலை கோழிக்குஞ்சு இறை இயல் என்று குறிப்பிடுவார்கள். அதாவது ஒரு தாய் கோழியானது தனது குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்து வருகிறது என்றால் ஒரு விதமான குரல் ஓசையை எழுப்பும். உடனே அனைத்துக் குஞ்சுகளும் ஓடிச்சென்று தாயின் இறக்கைகளுக்குள் மறைந்து கொள்ளும். இது போலத்தான் நாம் பின்பற்றுகின்ற கிறிஸ்தவ மறையின் இறையியலானது இருக்கின்றது.
பல நேரங்களில் நாம் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போது நாம் செல்லுகின்ற பாதை தவறு என்பதை உணர்த்துவதற்கு இறைவன் பல வழிகளில் வாழ்வில் குறுக்கீடு செய்கிறார். அவர் குறிக்கீடு செய்யும் போதெல்லாம், அதை கடவுளின் அறிவுறுத்துதல் என்பதை உணர்ந்து கொண்ட மக்களாக நம்மை நாம் சரி செய்து கொண்டு, மீண்டுமாக ஆண்டவர் காட்டுகின்ற பாதையில் பயணம் செய்ய, கடவுளின் உறவில் நிலைத்திருக்க நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகின்றோம்.
இந்த தவக்காலம் கூட அதற்கான ஒரு அழைப்பு தான். கடவுளின் குறுக்கீடு என்றுதான் நாம் இதனை பார்க்கவேண்டும். வெகு விரைவில் தவக் காலத்தின் நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க கூடிய நாம் ஒவ்வொருவருமே இந்த தவக்காலத்தில் பல விதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்ளுகிறோம். இந்த ஒறுத்தல் முயற்சிகளின் காரணம் என்ன என சிந்திக்கின்ற போது, கடவுளோடு உள்ள உறவையும்
நாம் புதுப்பித்துக் கொள்ள முயல்கிறோம். நாம் தவறிழைத்த தருணங்களை எண்ணிப் பார்த்து மனம் வருந்தி ஆண்டவரிடத்தில் மன்னிப்பு வேண்டி பிரிந்து போன உறவுகளை சரிசெய்து கொள்ள முயலுகிறோம்.
கடவுளோடு பிரிந்திருந்தாலும், உறவுகளோடு விலகி இருந்தாலும், அதையெல்லாம் சரி செய்துகொண்டு, மீண்டும் ஆண்டவரின் உறவில் இணைந்து வாழ்ந்திட இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகிறது.
இந்தத் தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவருமே கடவுளோடு ஒப்புரவாகிட அழைக்கப்படுகின்றோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு எதிராக பலவிதமான தவறுகளைச் செய்தவர்கள் தான். ஆனால் தவறுகளை செய்து கொண்டே இருந்தாலும் அவ்வப்போது கடவுள் அவர்கள் வாழ்வில் அறிவுறுத்துகின்ற, அவர்களது வாழ்வின் செய்கின்ற குறியீடுகளின் அடிப்படையில் கடவுளின் வார்த்தைகளுக்கு புறம்பாக நாங்கள் நடக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டவர்களாக பல நேரங்களில் அவரிடத்தில் மண்டியிட்டு மன்னித்து வேண்டக் கூடிய மனிதர்களாக இருந்தார்கள். தங்களை சரி செய்து கொண்டு ஆண்டவரோடு உள்ள உறவைப் புதுப்பித்துக் கொண்டார்கள். அவர்கள் கடவுளோடு இருந்த போது உணவின்றி தவித்த நாட்களுக்கு மன்னா வழியாக உணவு வழங்கிய இறைவன், உலகம் உள்ளங்கையில் இறைவன் உரிய காலத்தில் அவர்களை தகுதி உள்ளவர்களாக மாற்றி அவர்களை பெயரிட செய்து அந்த பயிர்களை பயிரிட செய்து அதில் கிடைக்கின்ற அறைகூவல் மூலமாக அவர்களது தேவைகளை நிறைவு செய்துகொள்ள வைத்தார். எனவே, விளைச்சலை கொடுத்தவுடன் மன்னாவை நிறுத்தினார் இறைவன்.
தான் தேர்ந்தெடுத்த மக்களின், தன்னை நாடி வந்த மக்களின் துயரத்தை எண்ணி அவர்களை உறுதிப்படுத்தி, பக்குவப்படுத்தி, வலுப்படுத்தி, அவர்களை தன்னிறைவு பெறக்கூடிய மனிதர்களாக மாற்றுகிறார் கடவுள் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்துகிறது.
இன்று அதே வாசகத்தின் அடிப்படையில் தான் இன்று நாம் நமது வாழ்வை ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகிறோம். நற்செய்தி வாசகத்தில் ஊதாரி மைந்தனின் நிகழ்வினை வாசிக்க கேட்டோம்.
பல நேரங்களில் கடவுளின் பராமரிப்பின் கீழ் இருக்கக்கூடிய நாம், பல நேரங்களில் ஊதாரி மைந்தனைப்போல கடவுளோடு உள்ள உறவில் இருந்து விலகிச் செல்லுகிறோம். விலகிச் சென்ற மனிதர்கள் எல்லாம் ஒரு நாள் கடவுளின் வல்லமையையும், பராமரிப்பையும், பாதுகாப்பையும், நினைந்தவர்களாக தாங்கள் செய்த குற்றம் குறைகளை எண்ணி வருந்துகிறவர்களாக மீண்டும் ஆண்டவரை நோக்கி வருகின்ற போது, கடவுள் அவர்களை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்கிறார்.
ஊதாரி மைந்தனின் தந்தையைப் போல இன்முகத்தோடு, இணைத்து ஏற்றுக் கொள்ளக் கூடியவராக கடவுள் இருக்கிறார்.
ஆனால் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டியவர்களாய் ஆண்டவரை நோக்கிச் செல்லக் கூடிய ஊதாரி மகன்களாக நாம் இருக்கின்றோமா என்ற கேள்வியை இன்று நமக்குள்ளாக எழுப்பி பார்ப்போம்.
பல நேரங்களில் நாம் குற்றங்குறைகள் புரிந்திருந்தாலும், மன்னிப்பு வேண்டி ஆண்டவரை நாடிச் செல்லும் பொழுது, அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதை உணர்ந்து நாம் மகிழ்கிறோம்.
ஆனால் பல நேரங்களில் நாம் நமக்கு எதிராக குற்றம் இழைத்த சக மனிதர்கள் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி நம்மை நோக்கி வருகின்ற போது, பல நேரங்களில் மூத்த மகனைப் போல, வந்தவர்களை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில்தான் மனிதர்களாகிய நாம் இருக்கிறோம்.
நம்மை இறைவன் மன்னித்து நமது குற்றம் குறைகளை எல்லாம், மன்னித்து நம்மை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணுகின்ற நாம், பட்ட மனிதர்களை ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். அப்படிப்பட்ட மனிதர்களாக நாம் இருப்போமாயின், நம்மை நாம் சரி செய்து கொள்ள, நமது வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள, இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார்.
புனித பயணங்களும் திருப்பயணங்களும் மேற்கொள்வதால் மட்டும், நேற்று நமது குடும்பத்திற்கு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. இந்த திருப் பயணங்கள் வழியாக இறைவன் உணர்த்துவது இதைத்தான்.
நாம் எந்நிலையில் இருந்தாலும் நாம் செய்த அனைத்து குற்றங்குறைகளையும் இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்கிறார். நாம் சக மனிதர்களை ஏற்றுக் கொள்ள முயலுவோம். யாரோடெல்லாம் நாம் உறவை துண்டித்து இருந்தோமோ, அவர்களோடு உள்ள உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய ஆற்றலை இந்த திருப்பலியில் இறைவனிடத்தில் வேண்டுவோம். யாரையெல்லாம் வாழ்வில் ஏற்றுக்கொள்ள இயலாது என எண்ணுகிறோமோ, அவர்களையெல்லாம் ஏற்றுக் கொள்வதற்கான மனப்பக்குவத்தை இந்த திருப்பயணம் நமக்குத் தர வேண்டுமாய் செபிப்போம்.
திருப்பயணத்தில் நமக்காக, நமது நலனுக்காக மட்டுமே மன்றாட்டுக்களை முன்னெடுப்பதை நிறுத்தி நம்மோடு வந்த அடுத்தவருக்காக, நம்மோடு வர இயலாதவர்களின் நலனையும் முன்னிருத்தி, இறைவனிடத்தில் வேண்டுவோம்.
மரித்துப்போன நமது ஆன்மாக்களுக்காக, குடும்ப உறவுகளுக்காக, நமது பங்கு உறவுகளுக்காக இன்றைய நாளில் இறைவனிடத்தில் மன்றாடுவோம்.
அடுத்தவருக்கு செய்கின்ற செபமே நாம் செய்யும் மிகப்பெரிய தியாகம் என்பதை உணர்ந்து கொள்வோம். இறைவன் இதுநாள் வரை நம்மை வழிநடத்தியவர். இனியும் அவர் நடத்துவார்.
நமது ஊனியல்புக்கு ஏற்ற மனிதத் தன்மையில் நாம் செய்த குற்றம் குறைகளை எல்லாம் விடுத்து இறைவனை முன்னிறுத்தி, இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்வது போல, நாம் சக மனிதர்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக மாறிட இறைவனிடத்தில் இறையருள் வேண்டுவோம். அதற்கு நாம் நம்மை தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்ள, நாம் செய்த குற்றங்களை எண்ணிப் பார்த்து, மனம் வருந்தி மன்னிப்பு வேண்டி, இறைவனோடு உள்ள உறவில் ஒப்புரவாகுவோம். இறைவனோடு ஒப்புரவாக, நாம் சில மனிதர்களோடு, ஒப்புரவாக வேண்டும் என்பதை இதயத்தில் இருத்தியவர்களாய், சக மனிதர்களோடு ஒப்புரவாகவும், அதன்வழி இறைவனோடு ஒப்புரவாகவும், இறையருள் வேண்டி இணைந்து தொடர்ந்து இந்தத் திருப்பலி வழியாக செபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக