ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது.
என்று வள்ளுவர் கூறுவார்.
நாம் ஒருவருக்கு உதவி செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை எதிர்பாராமல் ஒருவருக்கு செய்கின்ற உதவி, மற்றும் நாம் உதவி செய்கின்ற நபர் பெரியவரா? சிறியவரா? என்ற வேறுபாடு எதனையும் எண்ணாமல் கைமாறு கருதாமல் ஒருவர் செய்கின்ற உதவி கடலை விட மிகப் பெரிய பயனை விளைவிக்கும் என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய உலகில் பணம், பொருளை செலவு செய்து தனக்கு நற்பெயரைத் தேடுவதில் ஆர்வம் கொள்ளும் மானுடச் சமூகம், தன் அருகில் இருக்கும் சின்னஞ்சிறியவர்களை கண்டு கொள்ளாது இருக்கிற சூழல், இன்று அதிகம். சின்னஞ்சிறிய என் சகோதர சகோதரிகளுக்கு செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என இன்றைய வாசகத்தின் வழியாக இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
என்னும் பழமொழிக்கு ஏற்ப நாமும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக குழந்தை மனநிலையில் நமது அண்டை அயலாரின் தேவைகளை கண்டுணர்ந்து உதவிகள் செய்யக் கூடிய மனித
நேயம் கொண்ட மணிதர்களாக ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக் கூடியவர்களாக நான் வாழ்ந்திட இன்றைய நாளில் இத்திருப்பலியில் இணைந்து ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக