வெள்ளி, 2 ஏப்ரல், 2021

அறிவோம் புனித வெள்ளி பற்றி ....

 அறிவோம் புனித வெள்ளி பற்றி  ....

பெரிய வெள்ளி
இன்று இயேசு சிலுவையில் கொல்லப்பட்ட நான் இந்த நாள் புனித வாரத்தின் பெரிய வெள்ளி , நல்ல வெள்ளி  என்று அழைக்கப்படுகிறது சாவு ஒன்று நடந்தேறிய நாள் இது அதுவும் , அநியாயமாய் குற்றம் சாட்டப்பட்டு அவரது அறச்செயல்கள் அரசியல் ஆக்கப்பட்டு சுலகக்காரனாக ஜோடிக்கப்பட்டு , துறையை வளையவைத்து மதத்தலைவர்கள் திட்டமிட்டுச் செய்தக் கொலை இந்த சாவு நிகழ்ந்த நாளைத்தான் நல்ல வெள்ளி என்கின்றனர் கிறிஸ்தவர்கள் அந்த நாளில் அவருக்கு நடந்த ஒவ்வொன்றையும் கருத்தில் கொண்டால் நல்லது என்று எதுவும் இருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும் எனவே , நல்ல வெள்ளி என்று சொல்வது சற்றும் பொருந்தாத ஒன்றாகவே இருக்கும் நமது வாழ்வில் நம்மைக் கேட்டுக்கொள்ளாமல் நமக்கு நடக்கின்றவைகளைக் கொண்டு மட்டுமே நமது நாட்களை நல்லது கெட்டது என்று பிரிப்போமென்றால் நல்லவைமீது நாம் கொண்டிருக்கும் அதிகாரத்தை கேள்வி குறியாக்குவோம் . இயேசு கொலை செய்யப்பட்ட நாளை நல்லதாக மாற்றியது என்ன ? அல்லது , அவர் தான் கொல்லப்பட்ட நாளை நல்லதாக ஆக்க என்ன செய்தார் முதன்முதலில் அவர்மேல் அவிழ்த்துவிடப்பட்ட கொலைவெறித்தாக்குதல் அவர் எதிர்பாராத ஒன்றல்ல அவர் நீதிக்காகவும் , நேர்மைக்காகவும் , உண்மைக்காகவும் அன்பிற்காகவும் எடுத்த தீர்க்கமான நிலைப்பாடு அவரை இந்த முடிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை நன்கு அறிந்து சாவதே என்றாலும் தன் பணியிலிருந்து விலகுவதில்லை என்று நீடித்து நிலைதிருந்தது இந்த வெள்ளியை நல்ல வெள்ளியாக்கிற்று வியர்வை இரத்தமாக கொட்டுமளவுக்கு அவர் கலக்கமுற்று இந்த துன்பக் கலம் தன்னைவிட்டு அகலாதா என்று மன்றாடினாலும் , அவர் வெறுப்புணர்ச்சியும் , கசப்பு உணர்வும் தன்னை மேற்கொள்ள விடவில்லை அவரது சாவு சம்பவத்தில் உடல் வலி மன வேதனை இருந்தன . ஆனால் மகிழ்ச்சிக்கே இடமில்லாமல் போகவில்லை அப்படி என்றால் அவர் சிரித்துக்கொண்டு பாடுகளை அனுபவித்தார் என்று சொல்வதன்று பல சமயங்களில் சிரிப்பொலிக்குப்பின்னும் கொண்டாட்டகங்களுக்குபின்னும் சொல்லில்வராத சோகங்கள் மறைந்திருப்பதையும் நாம் அறிவோம் வேதனை எப்போதும் சோகத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும் என்பதல்ல கடின உழைப்பில் அடங்கியிருக்கும் வேதனை வெற்றிப்பெற கொடுக்கும் விலை என்றிருக்கும்போது மகிழ்ச்சித்தான் மிஞ்சும் அன்றோ ! இயேசுவைப்பொறுத்தமட்டில் அவர் தனக்கு நேர்ந்த சாவை ஒரு சோக சம்பவமாகக் கொள்ளாமல் , இறையாட்சி விழுமியங்கள் வளர்ந்து பலன்தர தன் இன்னுயிர் உரமாகிறது என்ற தெளிந்த உணர்வோடு மேற்கொண்ட அனுபவமாகும் . இவ்வாறு இந்த சோகம் நிறைந்த வெள்ளியை அவர் நல்ல வெள்ளியாக மாற்றினார்.


அவருக்கு அன்று இழைக்கப்பட்ட வேதனையும் , அவமானமும் அதிகாரவர்க்கத்தினரால் பலநாட்களாக வெகு நுணுக்கமாக திட்டம் தீட்டி வேண்டுமென்றே தன்மேல் திணிக்கப்பட்டவை என்று அவர் நன்கு அறிந்திருந்தார் . இருப்பினும் , அதனை நம்ப விரும்பாமல் அவர் தனது துயரத்தின் உச்சக்கட்டதில் , விண்ணிற்கும் மண்ணிற்குமிடையே மூன்று ஆணிகளால் பிணைக்கப்பட்டு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தன்னை வதைத்தவர்களுக்காக " பிதாவே இவர்களை மன்னியும் , இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்று மன்றாடி கோபமும் கசப்பும் நிறைந்த அந்த சூழலில் அன்பை பொழிந்து உலக வரலாற்றிய ஒரு அன்பு புரடச்சிக்கு வித்திட்டார் . இதனால் அந்த அக்கிரமம் நிறைந்த வெள்ளி நல்ல வௌளியாயிற்று தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற சான்றோரின் மொழியின்படி நமது வாழ்வையும் அதில் உள்ளவைகளையும் நிகழ்பவைகளையும் நல்லதாகவோ கெட்டதாகவோ ஆக்குவது நம்மைத் தவிர வேரொன்றுமில்லை என்று கற்றுக் கொள்வோமா ? 

1 கருத்து:

  1. எத்தகைய தீமையும் நமக்கு நன்மையைக் கொண்டுவரும். அது நமது நேர்மறை எண்ணங்களால், உள்ளத்தின் முயற்சியால் மட்டுமே நடைபெறும் என்று ஆண்டவர் இயேசுவின் வேதனை நிறைந்த, பாடுகள் நிறைந்த, புனித வெள்ளியின் அனுபவங்கள் வழியாக நமது வாழ்வின் துன்பங்கள் வழி ஆண்டவரின் அருளில் ஆற்றல் பெற நம்மை உற்சாகத்தோடு அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம்! ஜெபிக்கிறோம்!

    பதிலளிநீக்கு

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...