விருப்போடு பணி செய்ய புறப்படுவோம்...
இன்று நாம் திரு அவையாக இணைந்து திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீட விழாவினை சிறப்பிக்கின்றோம்.
இவ்விழாவானது புனித பேதுருவுக்கு அகில உலகத்தின் மீதுள்ள அதிகாரத்தை காட்டுகிறது. இவரது அதிகாரத்திற்கு மேம்பட்ட அதிகாரம் பூமியில் கிடையாது. இயேசு இவரை தமது திரு அவையை கட்ட பாறையாகவும் திருத்தூதர்களுக்கு தலைவராகவும் நியமித்தார். இந்த பேதுரு இயேசுவின் பிரதிநிதி. அதிகாரம் அனைத்திற்கும் ஊற்று.இதனை நினைவு கூறும் வகையில்தான் இன்று திரு அவையாக இணைந்து நாம் இவ்விழாவினை சிறப்பிக்கின்றார்.
இவ்விழாவானது பேதுருவை பற்றியும் அவரது பணி பொறுப்புகளை பற்றியும் அவர் கொண்டிருந்த நம்பிக்கையை பற்றியும் நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள என்னால் ஆனது நமக்கு அழைப்பு தருகிறது.
யார் இந்த பேதுரு? என பார்க்கும்போது ....
இவர் கப்பர்நாகும் என்ற ஊரில் பிறந்தவர்.
படிப்பறிவு அற்றவர்.
மீனவர் தொழிலை செய்து வந்தவர்.
பயந்தவர்.
பதட்டம் நிறைந்தவர்.
உணர்ச்சிவசப்படக் கூடிய நபர்.
பாரம்பரியத்தை காக்க வேண்டும் என எண்ணக்கூடிய ஒரு நபராக இருந்தவர்.
யூதர்களின் திருத்தூதராக இருந்தவர்.
இயேசு உடன் பயணித்த நபர்.
இயேசுவை மெசியா என அறிவித்தவர்.
இத்தகைய சிறப்புமிக்க நபர் தன்னுடைய வாழ்வில் எத்தகைய தலைமை பண்பை கொண்டிருந்தார் என்பதை தான் இன்றைய முதல் வாசகம் வழியாக நாம் வாசிக்க கேட்கின்றோம். தகுதியற்ற நிலையில் இருப்பதாக எண்ணிய இவரை இயேசு திரு அவையின் தலைவராக இருந்து திருஅவையை கட்டும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.தனக்கு கொடுத்தப் பணியை சிறப்புடன் செய்த இவர். இன்றைய நாளில் நமக்கு தரக்கூடிய செய்தி முதல் வாசகத்தின் அடிப்படையில் விருப்போடு பணி செய்யுங்கள் என்ற செய்தியினை இன்று நமக்குத் தருகிறார்.
இவர் இயேசுவோடு வாழ்ந்த காலத்தில் இயேசு கொடுத்த பணிகளை இன்முகத்தோடும், விருப்பத்தோடும் செய்து வந்தவர். அவ்வபோது ஐயங்கள் ஏற்படும்போது அஞ்சாது ஆண்டவரிடத்தில் தெளிவைத் தேடியவர் இவர். இவரை இயேசுவும் பல நேரங்களில் சோதிக்கும் நோக்குடன் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார். இன்று கூட நாம் வாசித்த நற்செய்தி பகுதியானது இயேசு இவரோடு உரையாடக்கூடிய பகுதியை மையப்படுத்தியதே. இவர் ஆண்டவர் இயேசுவை மெசியா என அறிவித்ததை தான் இன்று நாம் நற்செய்தியில் வாசிக்க கேட்கின்றோம். இந்த மெசியாவுக்காக தனது இன்னுயிரையும் இன்முகத்தோடு இழந்தவர் தான் நாம் இன்று நினைவு கூறக் கூடிய புனித பேதுரு. எனவேதான் திருஅவை இவரை தனிப்பட்ட விதத்தில் நினைவு கூறவும், இவருக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் அனைத்தும் நேரடியாக இவருக்கு வழங்கப்பட்டது என்பதை நினைவுறுத்தவும் இன்றைய நாளில் இவ்விழாவினை சிறப்பிக்கின்றது. இவரைப் போலவே விருப்பத்தோடு இறைவனது பணியை செய்து இயேசுவின் உண்மைச் சீடராகிட முயல்வோம்.
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
பதிலளிநீக்கு