திங்கள், 1 பிப்ரவரி, 2021

பிறருக்காக தன்னையே இழக்க... (2.2.2021)

பிறருக்காக தன்னையே இழக்க...

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Everyday may not be good but 
there is something good in everyday 

 இன்று நம் தாய்த்திரு அவரோடு இணைந்து ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்புக் கொடுத்த விழாவினை சிறப்பிக்கின்றோம்.

பரிசு கொடுப்பதும் பரிசு பெறுவதும் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இன்றைய நாளில் நாம் இறைவனுக்கு தரக்கூடிய பரிசுகள் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.

இயேசு பிறந்து 40 நாட்கள் ஆனபின் மரியாவும் சூசையும் அவரை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று மோயிசனுடைய கட்டளைப்படி அவரை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கும் படி சென்றார்கள். ஏழைகளின் காணிக்கையாக ஒரு ஜோடி மாடபுறாக்களை அவர்கள் தங்களோடு எடுத்துச் சென்றனர்.

எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறிய சமயத்தில் கடவுளுடைய தூதன் அவர்களுடைய தலைச்சன் பிள்ளைகளை கொள்ளாது விட்டுவிட்டார். அதற்கு நன்றியாக மக்கள் தங்களுக்கு பிறக்கும் முதல் ஆண் குழந்தையை கடவுளுக்கு காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டம். இச்சட்டத்தை நிறைவேற்றும் வகையில் தான் அன்னை மரியாவும் சூசையும் இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கின்றார்கள். இயேசுவை காணிக்கையாக ஒப்புக் கொடுக்க கூடிய அந்த இடத்தில் சிமியோன் சில நிமிடங்கள் மாத்திரமே இயேசுவை கையில் ஏந்தினார். ஆனால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். 
 
தொடக்க காலத்திலிருந்தே கடவுளுக்கு காணிக்கை கொடுக்கக்கூடிய நிகழ்வானது இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதனை இன்றைய இன்றைய முதல் வாசகம் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது .

இருப்பதை கொடுப்பதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லை ...
பொதுவாகவே நாம் நம்மிடம் இருப்பதிலிருந்து இறைவனுக்கு காணிக்கையாக கொடுக்கிறோம். பல நேரங்களில் நாம் இறைவனுக்கு முடியை காணிக்கையாக்குகிறோம். ஏனெனில் முடி மீண்டும் வளர்ந்து விடும் என்ற நம்பிக்கையினால் என்கிறார்கள் சிலர்.
இறைவன் விரும்புகின்ற காணிக்கை என்பது பொன்னோ, பொருளோ முடியோ அல்ல... மாறாக இறைவன் விரும்புவது உள்ளார்ந்த மனமாற்றத்தை, அந்த மனமாற்றத்தின் வழியாக இச்சமூகத்தில் நாம் செய்யக்கூடிய நற்செயல்களை தான் அவர் பரிசாக காணிக்கையாக விரும்புகிறார்.

இத்தகைய பரிசாகத்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து நமக்காக இழந்தார். இதனையே இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் பணியில் அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமை குருவாய் இருந்து மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் ஆகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரிகளை போல் ஆக வேண்டியதாயிற்று. நமக்காக இவ்வுலகத்திற்கு வந்து நல்லதைச் சொல்லி கொடுத்து அதன் விளைவாக மரணத்தை பரிசாக பெற்ற ஆண்டவர் இன்றைய வாசகங்கள் வழியாக நாம் இழப்பதில் மகிழவும். அவரைப் போல அடுத்தவருக்காக நம்மையே நாம் இழக்கக்கூடிய பரிசை காணிக்கையை நாம் இறைவனுக்கு தந்திட இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு தருகின்றார் . 
இறைவனின் அழைப்பை உணர்ந்து கொண்ட நாம் இறைவனிடம் நம்மையே நாம் சமர்ப்பணம் செய்ய வேண்டும். சமர்ப்பணம் என்பது இறைவனிடம் மட்டுமே நிகழ வேண்டிய ஒன்று.
 இறைவனை தவிர மனிதர்கள், ஆசிரியர்கள், மனைவி இவர்களிடம் சமர்ப்பணம் என்பது முற்றிலும் தவறானதாகும்.
மனித இதயமனது இறைவன் மீது கொண்டுள்ள  நிலையைப் ஒரு புரிதலை பொருத்து தன்னைத்தானே இறைவனிடம் சமர்ப்பணம் செய்கிறது. ஒரு மனிதன் தன்னுடைய அனைத்தையும் தியாகம் செய்கின்றான் எனில் இனி அவன் சுயமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.  இறைவனால் இடப்பட்ட காரியம் எதுவோ அதை மட்டுமே அவன் ஆற்ற வேண்டும்.

ஆண்டவர் இயேசுவை காணிக்கையாக ஒப்புக் கொடுத்த இந்த நல்ல நாளில் நாம் இறைவனிடம் நம்மையே சமர்ப்பணம் ஆக்குவோம்.  அவர் இந்த மண்ணில் வாழ்ந்த போது நமக்கு கற்றுக்கொடுத்த, தன் வாழ்வு மூலம் நமக்கு வெளிப்படுத்திய வாழ்க்கை பாடமாகிய பிறருக்காக தன்னையே இழக்கும் அந்த ஒரு மனப்பான்மையை நாமும் பெற்றுக்கொள்ள இறையருளை வேண்டி இணைந்து ஜெபிப்போம். 

1 கருத்து:

  1. தன்னையே நமக்காக காணிக்கையாக்கிய இறைவனுக்கு நமது நல்ல உள்ளத்தை காணிக்கையாக்குவோம்! அவரது அன்பிற்காக தியாகங்கள் செய்வோம் என்று அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களும்! நன்றிகளும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...